‘பவர் பாண்டி’யை பார்த்த சூப்பர் ஸ்டார் என்ன சொன்னார்.?

‘பவர் பாண்டி’யை பார்த்த சூப்பர் ஸ்டார் என்ன சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth praised Dhanushs Power Paandi movieதிறமை  எந்த துறையில் எங்கிருந்தாலும் இருந்தாலும் அதை பாராட்டி வருபவர் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இவரது மருமகனும் நடிகருமான தனுஷ் முதன்முறையாக இயக்கியுள்ள பவர் பாண்டி (தற்போது ப. பாண்டி) படத்தை அண்மையில் பார்த்தாராம்.

அதில் வயதானவர்களின் வாழ்க்கை முறைகளை யதார்த்தமாக கொடுத்திருந்தாராம் தனுஷ்.

நமக்கு நிறைய உறவினர்கள், நண்பர்கள் இருந்தாலும், நம்மை நாம் பார்த்துக் கொள்ள சேமிப்பு அவசியம் என்பதை அந்த பவர் பாண்டி கேரக்டர் சொல்லியுள்ளதாம்.

இதனை கண்ட ரஜினி, இயக்குனரை வெகுவாக பாராட்டினாராம்.

மேலும், அடுத்தடுத்து படங்களை உடனே இயக்க வேண்டாம்.

அப்போதுதான் இந்த படத்திற்கு உள்ள மவுசு நிறைய காலத்திற்கு வரும்.” என தெரிவித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Rajinikanth praised Dhanushs Power Paandi movie

நெருப்புடா குழுவினருக்கு ஷாக் கொடுத்த சிவகார்த்திகேயன்

நெருப்புடா குழுவினருக்கு ஷாக் கொடுத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan in neruppuda audio launchவிக்ரம் பிரபு முதன்முறையாக தயாரித்து நடித்துள்ள ‘நெருப்புடா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சற்று முன்னர் சென்னையில் நடைபெற்றது.

நிக்கிகல்ராணி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டான் இசையமைத்துள்ளார்.

இவ்விழாவில் ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், சிவகுமார், விஷால், கார்த்தி, தனுஷ், உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழா முடிந்தபின்னர் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது திடீரென சிவகார்த்திகேயன் வந்து படக்குழுவினரை வாழ்த்தினார்.

விஷால்-கார்த்தி இணையும் படத்தின் சுவாரஸ்யங்கள்

விஷால்-கார்த்தி இணையும் படத்தின் சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi and Vishal starring in Karuppu Raja Vellai Rajaமுதன்முறையாக விஷால் மற்றும் கார்த்தி இணையும் நடிக்கும் படத்திற்கு கருப்பு ராஜா வெள்ளை ராஜா என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை கல்வியாளர் ஐசரி கணேஷ் உடன் இணைந்து தயாரிக்கிறார் பிரபுதேவா.

பிரபுதேவா இயக்கவுள்ள இப்படத்தில் வனமகன் நாயகி சாயிஷா நடிக்கிறார்.

இப்படம் தொடர்பாக் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் இப்படக்குழுவினர்.

அப்போது அவர்கள் பேசியதன் சுவாரஸ்ய தொகுப்புகளை இங்கே கொடுத்துள்ளோம்.

நெருங்கிய நண்பர்களால்தான் இணைந்து நடிக்க முடியும் என்றார் கார்த்தி.

கார்த்தியும் விஷாலும் என் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு நன்றி. இப்படம் வன்முறையையும் அஹிம்சையையும் என இரண்டையும் சொல்லும் என்றார் பிரபுதேவா.

சிம்ரனுக்கு பிறகு நல்ல நடனம் தெரிந்த நடிகை தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார்.

டபுள் ஹீரோ சப்ஜெக்டுக்காக நிறைய நாட்கள் காத்திருந்தேன். இந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் கேரக்டரும் ஒரே லெவலில் இருக்கும்.

நானும் கார்த்தியும் ஒப்புக் கொண்டபடி, நடிகர் சங்கத்திற்கு ரூ. 10 கோடி கொடுப்போம்.

இப்போது திரையுலகில் எனக்கு நிறைய பொறுப்புகள் வந்துள்ளது என்றார் விஷால்.

தன்னை இப்படத்தின் நாயகியாக தேர்ந்தெடுத்தற்கு நன்றி சொன்னார் சாயிஷா.

Karuppu raja vellai raja movie news updates

krvr

‘யார் மனதையும் புண்படுத்தாமல் விமர்சனம் செய்யுங்கள்…’ ரஜினி

‘யார் மனதையும் புண்படுத்தாமல் விமர்சனம் செய்யுங்கள்…’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Neruppuda movie audio launch photos (205)விக்ரம் பிரபு மற்றும் நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள ‘நெருப்புடா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையிலுள்ள சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட திரையுலக பிரபலங்கள் ஒரு படம் வெளியானால், 3 நாட்கள் கழித்து, 4வது நாள் விமர்சனம் செய்ய கேட்டுக் கொண்டனர்.

இதே கருத்தை ரஜினியும் கூறினார். அதை அவர் குட்டிக் கதை சொல்லி, அதன் மூலம் உணர்த்தினார்.

ஒரு சினிமா எடுப்பது எங்கள் கடமை என்பதுபோல, அதை விமர்சனம் செய்வது பத்திரிகையாளர்களின் கடமை.

ஆனால் அதை விமர்சனம் செய்யும்போது, யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டும். என்றார்.
அப்போது கூறிய ஒரு குட்டிக்கதையும் கூறினார்.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பிறக்கவில்லை.

பல கோயில்கள் படி ஏறி, இறங்கிய பின்னர் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் ஜாதகத்தை தெரிந்து கொள்ள ஒரு ஜோசியரை அழைத்தார். அவர் அந்த குழந்தையை பார்த்துவிட்டு, இந்த குழந்தையால் உங்களுக்கு ஒரு மரணம் ஏற்படும் என்றார்.

அதிர்ச்சி அடைந்த ராஜா, அந்த ஜோசியரை ஜெயிலில் போட்டுவிட்டார்.

பின்னர் வேறொரு ஜோசியரை அழைத்து அவரிடம் குழந்தையின் ஜாதகத்தை கணிக்க சொன்னார்.

அவர் குழந்தையின் ஜாதகத்தில் முன்னர் கூறிய ஜோசியர் கூறியது உண்மை என்பதை கண்டறிந்தாலும் அதை கூறாமல், அந்த குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருப்பதை அறிந்து அவர் ராஜாவிடம் இந்த குழந்தை உங்களை விட நூறு மடங்கும் புகழ் பெறுவார் என்று கூறினார்.

இதனால் மன்னர் மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அவர் அதற்கு ஜெயிலில் உள்ள ஜோசியரை விடுதலை செய்யுங்கள், அதுபோதும் என்று கூறினார்.

எனவே ஒருவரிடத்தில் என்ன சொல்ல வேண்டும், எதை மறைக்க வேண்டும் என்பதை அறிந்து விமர்சனம் செய்யுங்கள்’ என்றார் ரஜினிகாந்த்.

Super star Rajini speech about cinema reviewers

Neruppuda movie audio launch photos (95)

வெங்கட் பிரபு இயக்கத்தில் சந்திரன்-நிவேதா பெத்துராஜ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சந்திரன்-நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkat Prabu teams up with Chandran and Nivetha Pethuraj‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகம் கடந்தாண்டு வெளியாகி மாபெரும வெற்றி பெற்றது.

இதனையடுத்து, தனது அடுத்த படத்தை இயக்க தற்போது தயாராகிவிட்டார் வெங்கட்பிரபு.

இப்படத்தில் ‘கயல்’ சந்திரன் நாயகனாகவும், நாயகியாக ‘ஒருநாள் கூத்து’ நாயகி நிவேதா பெத்துராஜ் நடிக்கவுள்ளனர்.

இதன் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

எனவே மற்ற கலைஞர்கள் தேர்வானவுடன் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Venkat Prabu teams up with Chandran and Nivetha Pethuraj

‘சிறந்த நண்பர்கள்தான் இணைய முடியும்..’ விஷால் பற்றி கார்த்தி

‘சிறந்த நண்பர்கள்தான் இணைய முடியும்..’ விஷால் பற்றி கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi and Vishal starring in Karuppu Raja Vellai Rajaபிரபுதேவா தயாரித்து இயக்கவுள்ள படம் கருப்பு ராஜா வெள்ளை ராஜா.

இதில் முதன்முறையாக விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடிக்கின்றனர்.

ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்க, சமீர் ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

நாயகியாக சாயிஷா நடிக்கிறார். இவர் தற்போது விஜய் இயக்கியுள்ள வனமகன் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

இதில் கார்த்தி பேசும்போது, இரட்டை நாயகர்கள் கதையில் சிறந்த நண்பர்களால்தான் இணைந்து நடிக்க முடியும்.

அதான் இப்படத்தில் விஷால் உடன் இணைந்து நடிக்கிறேன் என தெரிவித்தார்.

Karthi and Vishal starring in Karuppu Raja Vellai Raja

krvr

More Articles
Follows