பவர் பாண்டியை ரீமேக் செய்து தனுஷாக நடிக்கும் கிச்சா சுதீப்

பவர் பாண்டியை ரீமேக் செய்து தனுஷாக நடிக்கும் கிச்சா சுதீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kiccha Sudeep will remake Power Pandi and will act in Dhanush Characterமுதன்முறையாக தனுஷ் இயக்கிய படம் பவர் பாண்டி.

தமிழில் மாபெரும் வெற்றிப்படமான இப்படத்தை கன்னடத்தில் ரீ-மேக் செய்து தயாரிக்கவிருக்கிறாராம் கிச்சா சுதீப்.

இவர் நான் ஈ மற்றும் புலி படங்களில் வில்லனாக நடித்தவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்தில் ராஜ்கிரண் கேரக்டரில் அம்பரீஷ் நடிக்க, ரேவதி கேரக்டரில் சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார்.

தனுஷ் கேரக்டரில் சுதீப் நடிக்க, மடோனா கேரக்டரில் ‘நிபுணன்’ படத்தில் நடித்த ஸ்ருதி ஹரிஹரன் நடிக்கிறார்.

இப்படத்தை குருதத்தா கனிகா என்பவர் இயக்குகிறார்.

Kiccha Sudeep will remake Power Pandi and will act in Dhanush Character

சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை; விரக்தியில் விசிறி டைரக்டர்

சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை; விரக்தியில் விசிறி டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Visiri directorகடந்த வெள்ளியன்று விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, விஜய் யேசுதாஸின் ‘படை வீரன்’, சண்முகப் பாண்டியனின் ‘மதுர வீரன்’, சமுத்திரகனியின் ‘ஏமாலி’ ஆகிய படங்களோடு புதுமுக நடிகர்கள் நடிப்பில் ‘விசிறி’ என்ற படம் வெளியானது.

இப்படத்தை ‘வெண்ணிலா வீடு’ படத்தை இயக்கிய வெற்றி மகாலிங்கம் என்பவர் இயக்கியிருந்தார்.

தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோரின் ரசிகர்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார்.

இப்படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைத்தாலும், போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என இப்பட இயக்குனர் வெற்றி மகாலிங்கம் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது.. எங்கள் ‘விசிறி படத்தை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிட திட்டமிட்டு அறிவித்து அதற்கான வேலைகளை தொடங்கினோம்.

ஆனால், கடைசி நேரத்தில் பல படங்கள் வெளியானதால், எங்களுக்கு நிறைய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

சின்ன படத்துக்கு ஆதரவு அளிப்போம் என பல சங்க நிர்வாகிகள் பேசுகிறார்கள். ஆனால், யாருமே உதவவில்லை.” என்றார்

விசுவாசம் படத்துடன் மற்றொரு படத்திலும் நேற்றே கமிட்டான நயன்தாரா

விசுவாசம் படத்துடன் மற்றொரு படத்திலும் நேற்றே கமிட்டான நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Nayantharaநயன்தாரா நடிப்பில் வளர்ந்துள்ள `இமைக்கா நொடிகள்’ மற்றும் `கோலமாவு கோகிலா’ ஆகியவற்றின் படப்பிடிப்புகள் முடிந்து, ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதனையடுத்து `கொலையுதிர் காலம்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

இதுதவிர அறிவழகன் இயக்கும் த்ரில்லர் கதையிலும், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக `நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில் நேற்று அஜித் அஜித் ஜோடியாக `விஸ்வாசம்’ படத்தில் நடிக்க கமிட்டானார்.

இதே நாளில் `லெக்‌ஷ்மி’, `மா’ குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கத்திலும் நயன்தாரா நடிக்கவுள்தாக செய்திகள் வெளியானது.

ரம்யாநம்பீசன் உறவினர் நடிகை திவ்யாஉன்னி 2வது திருமணம்

ரம்யாநம்பீசன் உறவினர் நடிகை திவ்யாஉன்னி 2வது திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Malayala Actress Dhivya Unni got 2nd marriageபாளையத்து அம்மன்,  கண்ணன் வருவான், சபாஷ், வேதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளவர் மலையாள நடிகை திவ்யாஉன்னி.

இவர் மீரா நந்தன், ரம்யா நம்பீசன் ஆகியோரின் உறவினர் ஆவார.

இவர் 2002-ல் அமெரிக்காவில் என்ஜினீயராக இருக்கும் டாக்டர் சுதீஷ் சேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கே குடியேறினார்.

இந்த தம்பதியருக்கு அர்ஜுன், மீனாட்சி என்ற குழந்தைகள் உள்ளனர்.

சில காலங்கள் வாழ்ந்த பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

சமீபத்தில் விவாகரத்து பெற்ற திவ்யாஉன்னி தற்போது திடீரென்று 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இந்த மாப்பிள்ளையும் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திவ்யா உன்னியின் 2வது திருமணம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malayala Actress Dhivya Unni got 2nd marriage

dhivya unni

கோடைக்கு ஒரு படம்; கிறிஸ்துமஸ்க்கு ஒரு படம்… கார்த்தி முடிவு

கோடைக்கு ஒரு படம்; கிறிஸ்துமஸ்க்கு ஒரு படம்… கார்த்தி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthiதீரன் அதிகாரம் ஒன்று படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கார்த்திக்குடன் சாயிஷா, சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை ஜீன் மாதம் கோடை விடுமுறைக்கு வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தை 2018 கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இனிமே குழந்தைகள் என்னை பார்த்தா பயப்படுவாங்க… சுசீந்திரன்

இனிமே குழந்தைகள் என்னை பார்த்தா பயப்படுவாங்க… சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director suseenthiranதமிழ் சினிமாவிற்கு தரமான படங்களை கொடுத்து வருபவர்களில் முக்கியமான இயக்குனர் சுசீந்திரன்.

இவர் தற்போது, ‘ஏஞ்சலினா’, ‘ஜீனியஸ்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் முதன்முறையாக ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படம் மூலம் நடிகராகவும் அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்க `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விக்ராந்த், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து சுசீந்திரன் கூறியதாவது…

குழந்தைகளுடன் நடித்த அனுபவம் அருமையாக இருந்தது. குழந்தை அக்‌ஷித்தா நன்றாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு பின், என்னை கண்டாலே குழந்தைகள் பயந்து ஓடுவார்கள் அப்படியொரு வில்லத்தனம் செய்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows