தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர்

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nagarjuna_tollywoodநடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தனுஷ் முதன்முறையாக பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார்.

இப்படம் அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்ட நிலையில் விரைவில் தன் அடுத்த படத்தை தொடங்குவார் என கூறப்பட்டது.

ஆனால் ஹாலிவுட் படம், வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, ஹாலிவுட் படம் என பிஸியாகி விட்டார்.

இதனையடுத்து தனுஷின் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதை அறிவித்தனர்.

இப்படத்தின் முக்கிய வேடத்தில் சிரஞ்சீவி நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென நாகார்ஜுனா நடிப்பார் என சொல்லப்படுகிறது.

தற்போது அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

Popular Telugu Nagarjuna may act in Dhanushs directorial

களவாணி2 தலைப்பால் பிரச்சினை; முதல் பாக தயாரிப்பாளர் புகார்

களவாணி2 தலைப்பால் பிரச்சினை; முதல் பாக தயாரிப்பாளர் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalavani 2 stillsவிமல், ஓவியா நடிப்பில் 2010-ம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் ‘களவாணி’.

நசீர் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இதன் 2ஆம் பாகத்தை சற்குணம் தயாரிப்பதாக அறிவித்து அதன் பர்ஸ்ட் லுக்கை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இப்படத்திற்கு கே2 (K2) எனப் பெயரிட்டுள்ளார்.

தற்போது இதன் 2-ம் பாகத்திற்கு கடும் போட்டி எழுந்துள்ளது.

‘களவாணி’ படத் தயாரிப்பாளரான நசீர் இது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘தற்போது பூனம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் ‘வதம்’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறோம். மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க ‘களவாணி 2’ என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளோம்.

‘களவாணி 2’ படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது.

இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும்” என்று நசீர் தெரிவித்துள்ளார்.

விசுவாசம் அப்டேட்ஸ்: தர லோக்கலாக இறங்கியடிக்கும் தல

விசுவாசம் அப்டேட்ஸ்: தர லோக்கலாக இறங்கியடிக்கும் தல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithவிவேகம் படத்தை தொடர்ந்து விசுவாசம் படத்திற்காக 4வது முறையாக அஜித்-சிவா இணையவுள்ளனர்.

இப்படத்தின் இசையமைப்பாளரை இதுவரை சத்யஜோதி நிறுவனம் அறிவிக்கவில்லை.

விரைவில் படத்தின் கலைஞர்களை அறிவித்துவிட்டு படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.

இதில் வடசென்னை பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரியாக அஜித் நடிக்கவிருக்கிறாராம்.

இது கமர்ஷியல் கலந்த காவல் துறை பற்றிய படமாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Breaking: விசுவாசம் படத்தில் அஜித் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்

Breaking: விசுவாசம் படத்தில் அஜித் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara to romance with Ajith for Viswasamவீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து விசுவாசம் படத்தில் அஜித், சிவா இணைகின்றனர்.

இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பதை பலமுறை பார்த்துவிட்டோம்.

இப்பட நாயகி யார்? என்ற குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இதன் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இவர் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜோடி ஏற்கெனவே ஏகன், ஆரம்பம், பில்லா ஆகிய படங்களில் இணைந்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Nayanthara to romance with Ajith for Viswasam

ரஜினி-கமல்-விஜய்யை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் லைக்கா

ரஜினி-கமல்-விஜய்யை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyca teams up with KV Anand for Suriya 37th movieவிஜய் நடித்த கத்தி, ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 ஆகிய படங்களை லைக்கா தயாரித்துள்ளது.

இதில் 2.0 படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து கமல்ஹாசன் நடிக்கவுள்ள சபாஷ் நாயுடு படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் முதன்முறையாக சூர்யா நடிக்கும் படத்தையும் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள அவரின் 37வது படத்தை தான் இந்நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.

இதன் சூட்டிங்கை 2018 ஜீன் மாதத்தில் தொடங்கி அடுத்த ஆண்டு 2019 பொங்கல் தினத்தில் படத்தை வெளியிடவுள்ளனர்.

Lyca teams up with KV Anand for Suriya 37th movie

சாய்பல்லவி-யின் கரு படத்திற்கு இடைக்காலத் தடை

சாய்பல்லவி-யின் கரு படத்திற்கு இடைக்காலத் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Court interm ban for Sai Pallavis Karu movie releaseJS ஸ்க்ரீன்ஸ் என்னும் நிறுவனத்தின் சார்பில் மணிமாறன் என்பவர் “கரு” என்ற பெயரில் படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

இவர் ஏற்கெனவே ‘கரு’ படத்திற்கு ட்ரைலருக்கு சென்சார் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2.0 படத்தை தயாரித்து வரும் பிரபல நிறுவனமான லைக்காவும் “கரு” எனும் பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளது.

விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் சாய்பல்லவி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான கரு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான மணிமாறன் லைக்கா நிறவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் ஆவணங்களை சரிபார்த்ததில் JS ஸ்க்ரீன்ஸ் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கரு படத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

Court interm ban for Sai Pallavis Karu movie release

More Articles
Follows