நடிகர் தனுஷ் இயக்கத்தில் இணையும் விஜய் டிவி பிரபலங்கள்

நடிகர் தனுஷ் இயக்கத்தில் இணையும் விஜய் டிவி பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு தேசிய விருதுகளை இளவயதிலேயே வென்றவர் பன்முக திறமையாளர் நடிகர் தனுஷ்.

கடந்த 2017ல் ராஜ்கிரணை கதையின் நாயகனாக மையப்படுத்தி பவர் பாண்டி என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை தயாரித்து தனுஷே இளவயது பாண்டியாக நடித்திருந்தார்.

இந்த படம் சூப்பர் ஹிட்டடிக்கவே அடுத்த படத்தை தனுஷ் உடனே இயக்குவார் என கூறப்பட்டது.

ஆனால் கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் தனுஷின் அடுத்த பட இயக்கம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரோபோ சங்கர் கூறுகையில்.. தனுஷின் அடுத்த பட இயக்கத்தில் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதில் மற்றொரு முக்கிய கேரக்டரில் விஜய் டிவி பிரபலம் ராமர் நடிக்கவிருக்கிறாராம்.

Dhanush next film with Vijay TV stars

ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் !

ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று (27.3.2022) ஞாயிற்றுகிழமை அன்று
“தளபதி” மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி மூலமாக அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் சாதனையாளர்களை உருவாக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்தி நினைவு பரிசுகளை வழங்கினர்.

இந்த நிகழ்வை அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து Ex.MLA அவர்கள் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில் துவக்கிவைத்தார். மேலும் இதனை தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்டங்களில் உள்ள மாநில தலைமை, மாவட்ட தலைமை, அணி தலைமை, நகரம், ஒன்றியம், பகுதி சார்பில் இத்திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டது.

VMI given prizes to Teachers in Tamil nadu

விஜய்யின் ‘BEAST’ படத்துடன் ‘KGF2’ மோதலா.? யஷ் சூப்பரான விளக்கம்

விஜய்யின் ‘BEAST’ படத்துடன் ‘KGF2’ மோதலா.? யஷ் சூப்பரான விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது.

இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கொடூரமான வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் இப்பட டிரைலர் வெளியாகியுள்ளது. மிரட்டலாக இந்த டிரைலரை உருவாக்கியுள்ளனர்.

பெங்களுரில் இப்பட டிரைலரை கன்னட நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டார்.

இந்த விழாவில் நடிகர் யாஷ் பேசியதாவது…

“இது எலெக்சன் இல்ல… இது சினிமா. கேஜிஎஃப் 2 மற்றும் பீஸ்ட் மோதலா? என கேட்கிறார்கள். இது கேஜிஎஃப் 2 மற்றும் பீஸ்ட் படம் இணைந்து வருகிறது.
நடிகர் விஜய் மீது நான் பெரும் மரியாதை வைத்துள்ளேன். நான் கண்டிப்பாக பீஸ்ட் படத்தை பார்ப்பேன். அதுபோல விஜய் ரசிகர்களுக்கும் கேஜிஎஃப் 2 படம் ரொம்ப பிடிக்கும்” என பேசினார் யஷ்.

Yash talks about Vijay and Beast in KGF2 trailer launch

VIOLENCE LIKES ME… பன்ச் டயலாக்கில் யஷ்… மிரட்டும் ‘KGF 2’ டிரைலர்

VIOLENCE LIKES ME… பன்ச் டயலாக்கில் யஷ்… மிரட்டும் ‘KGF 2’ டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prashanth Neelகடந்த 2018ல் சூப்பர் ஹிட்டான படம் கே.ஜி.எஃப்.

பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படத்தில் யஷ் நடித்திருந்தார்.

தற்போது இதே கூட்டணியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது.

இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டாண்டன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
கொடூரமான வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் இப்பட டிரைலர் வெளியாகியுள்ளது. மிரட்டலாக இந்த டிரைலரை உருவாக்கியுள்ளனர்.

பெங்களுரில் இப்பட டிரைலரை கன்னட நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டார்.

இப்பட முதல்பாகத்தில் வில்லன் கருடன் இறந்ததும், அந்த இடத்திற்கு யஷ் செல்வது க்ளைமாக்ஸ் முடிந்தது.

தற்போது கருடன் இறந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை நடிகர் பிரகாஷ்ராஜ் சொல்வது போல டிரைலர் தொடங்குகிறது,

கேஜிஎப்பை கைப்பற்ற அரசு ஒரு பக்கம், சஞ்சய் தத் ஒரு பக்கம் என யஷ் உடன் மோதுவதாக காட்சிகள் நகர்கிறது.

இதில்…. ‘இரத்தத்தில் எழுதுன கதை இது… மையல தொடர முடியாது’, ‘கத்தி வீசி இரத்தம் வழிய யுத்தம் செய்வது நாசம் ஆக்குறதுக்கு இல்ல உருவாக்குறதுக்கு’ … I don’t like violence I avoid it.. But Violence likes me.. I Cant avoid it… போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இன்று பிப்ரவரி 27 மாலை 6.45 மணிக்கு வெளியான கேஜிஎஃப் 2 டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது.

Prashanth Neel Yash combo KGF Chapter 2 Trailer goes viral

ரஜினி-விஜய்க்கு மட்டும்தான் எதிர்ப்பா.? அடங்கவே மாட்டாரா தனுஷ்.?

ரஜினி-விஜய்க்கு மட்டும்தான் எதிர்ப்பா.? அடங்கவே மாட்டாரா தனுஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாக்களிலும் அதன் போஸ்டர்களிலும் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றால் சமூக ஆர்வலர்கள் தங்கள் கண்டனங்களை பதிவிடுவார்கள்.

ரஜினியின் படங்களுக்கு அதிகளவில் எதிர்ப்புகள் கிளம்பின.

எனவே ரஜினியும் புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்த்தார். மேலும் தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிகரெட்டை தவிர்த்துவிட்டார்.

விஜய்யின் சர்கார் பட போஸ்டர்களில் சிகரெட் பிடிக்கும் காட்சி டிசைனாக வைக்கப்பட்ட போது எதிர்ப்பு உருவானது.

இந்த நிலையில் தனுஷின் பட போஸ்டர்களில் தொடர்ந்து சிகரெட் பிடிக்கும் டிசைன்கள் இடம் பெற்று வருகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான “மரியான், வேலையில்லா பட்டதாரி, மாரி” ஆகிய பட போஸ்டர்களில் சிகரெட் பிடிக்கும் டிசைன்கள் இருந்தன.

தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்” பட போஸ்டரிலும் இந்த சிகரெட் இடம் பெற்றுள்ளது.

ரஜினி விஜய்யை மட்டும்தான் கண்டிப்பார்களா..? தனுஷை கண்டுக்க மாட்டார்களா..?

Dhanush in Naane Varuven new poster creates controversy

தலை வணங்குகிறேன் மகாராஜா-மௌலி.; RRR படத்திற்கு ஷங்கர் பாராட்டு

தலை வணங்குகிறேன் மகாராஜா-மௌலி.; RRR படத்திற்கு ஷங்கர் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மாண்ட படங்களின் இயக்குனர் என்றால் அது டைரக்டர் ஷங்கர்தான்.

ஜென்டில்மேன் படம் தொடங்கி காதலன், இந்தியன், அந்நியன், முதல்வன், சிவாஜி என பல பிரம்மாண்ட படங்களை இயக்கினார்.

இதன்பின்னர் எந்திரன் படத்தை இயக்கி இந்தியாவையும் 2.0 படத்தை இயக்கி உலக சினிமா பிரபலங்களையும் திரும்பி பார்க்க வைத்தார்.

ஆனால் இவரையே மிஞ்சும் அளவுக்கு இயக்குனர் ராஜமௌலியின் படங்கள் உருவாகி வருகிறது.

பாகுபலி, பாகுபலி 2 படங்களை தொடர்ந்து ராஜமௌலி படங்களுக்கு உலகளவில் எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது.

நேற்று வெளியான ஆர்ஆர்ஆர் படமும் பிரம்மாண்டத்தின் உச்சமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் RRR படத்தைப் பார்த்த ஷங்கர் இயக்குனர் ராஜமவுலியை ‘மகாராஜா’மவுலி எனப் பாராட்டியுள்ளார்.

‛‛பரவசப்படுத்துகிற வலுவான படம். காலம் முழுவதும் இதன் கர்ஜனை எதிரொலிக்கும்.

ஈடு இணையற்ற அனுபவத்தைத் தந்த குழுவினருக்கும் நன்றி. திரையில் ராம் சரணின் பொங்கி எழும் நடிப்பு, உங்கள் இதயத்தைக் கவர்ந்து தாக்குதல் நடத்தும் பீம் ஆக என்டிஆர். உங்கள் கற்பனை தோல்வியடையாமல் இருக்கும், தலை வணங்குகிறேன் மகாராஜா மவுலி” எனப் பெரிதும் பாராட்டியுள்ளார்.

ராம் சரண் நடிக்கும் அடுத்த படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Shankar praises Rajamouli’s RRR movie

More Articles
Follows