தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இரண்டு வாரங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்.
அவர் திரும்பி வந்ததும், கபாலி பாடல்கள் ஜூன் 12ஆம் தேதி அவரது தலைமையில் வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் அதற்குள் ரஜினி வரமுடியாது என்பதால் விழாவினை ரத்து செய்துவிட்டு, படத்தின் பாடல்களை இணையத்தில் வெளியிடவிருக்கின்றனர்.
இதனிடையில் நீண்ட நாட்களாக ரஜினி அமெரிக்காவில் தங்கியிருப்பதால், அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் அங்கு தங்கியிருப்பதாக ஒரு செய்தி பரவியது.
இதுகுறித்து விசாரிக்கையில்… “நல்ல உடல் நலத்துடன் ரஜினி இருக்கிறாராம்.
மேலும் ஓய்வுக்காக மட்டும் ரஜினி அங்கு செல்லவில்லையாம்.
ஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் சில மேக்கப் டெஸ்ட்டுக்களுக்காகவும் அங்கு இருக்கிறார்.
ஒரு தற்காப்புக்காக இந்த மேக்கப் டெஸ்ட் அமெரிக்கவில் உள்ள பிரபல மருத்துவமனையில் நடைபெறுகிறதாம்.
அப்போது ரஜினியுடன் ஷங்கர், தயாரிப்பாளர் லைக்கா சுபாஸ்கரன் உள்ளிட்ட படக்குழுவினரும் இருந்ததாக கூறப்படுகிறது.