முதல் வேலையாக நண்பர் கமலை சந்திக்கும் ரஜினி

முதல் வேலையாக நண்பர் கமலை சந்திக்கும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and kamal photosஎன்னதான் தங்களது ரசிகர்கள் முட்டி மோதினாலும் தங்களின் நெருக்கமான நட்பால் ரசிகர்களை ஒன்றிணைத்தவர்கள் ரஜினி-கமல்.

(இதை மற்ற நடிகர்களும் பின்பற்றினால் சமூக வலைத்தளங்களில் பாதி பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.)

இந்நிலையில் அமெரிக்காவில் சிகிக்சையை முடித்துக் கொண்டு கடந்த ஞாயிறு அன்று (ஜீலை 24) சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

எனவே தன் முதல் வேலையாக எலும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தன் நண்பர் கமல்ஹாசனை சந்திக்கவிருக்கிறாராம்.

அவர் எப்போது? சந்திக்கப் போகிறார் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

எம்ஜிஆர் பட தலைப்புக்கு விஜய் ஓகே சொல்ல என்ன காரணம்.?

எம்ஜிஆர் பட தலைப்புக்கு விஜய் ஓகே சொல்ல என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay 60 stillsபரதன் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை.

அதுவரை தற்காலிகமாக விஜய் 60 எனவும் தளபதி 60 எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு எங்க வீட்டு பிள்ளை என பெயரிட விஜய் ஓகே சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதலில் இப்பெயருக்கு விஜய் மறுத்து வந்தாராம்.

ஆனால் கதை ஓட்டத்தின் படி இத்தலைப்பே பொருத்தமாக உள்ளதால் தற்போது ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

எம்ஜிஆர் நடிப்பில் வெளியான எங்க வீட்டு பிள்ளை இன்றும் தமிழக ரசிகர்களால் மறக்க முடியாத படமாக உள்ள நிலையில் அதே பெயரில் விஜய் படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கபாலி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் சூப்பர் ஸ்டார்

கபாலி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali rajinikanthஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை… என்பது போல ஆயிரம் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் பாஸ் நான்தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த்.

கபாலி திரைப்படம் உலகளவில் கிட்டதட்ட 9,000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

முதல் நாள் மட்டும் வசூல் உலகளவில் ரூ. 104 கோடியை எட்டியுள்ளதை தயாரிப்பாளர் தாணு உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் ரூ. 21 கோடி வரை வசூலித்துள்ளது.

இரண்டாவது நாளான சனிக்கிழமை ரூ. 15.8 கோடியையும் ஞாயிற்றுக்கிழமை ரூ. 14.6 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆகமொத்தம் தமிழகத்தில் மட்டும் ரூ. 50 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது.

இதுவரை எந்தவொரு படமும் தமிழகத்தில் இச்சாதனையை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழத்தை தவிர்த்து இந்தியாவில் மட்டும் ரூ 67.5 கோடியை வசூல் செய்துள்ளது.

முதல் மூன்று நாட்களில் வெளிநாடுகளில் கபாலியின் வசூல் விவரம்….

  • அமெரிக்கா மற்றும் கனடாவில் ரூ.27 கோடி
  • பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரூ.4.25 கோடி
  • மலேசியாவில் ரூ.14 கோடி
  • சிங்கப்பூரில் ரூ.5 கோடி
  • ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் ரூ.23 கோடி
  • மற்ற நாடுகளில் ரூ.10 முதல் ரூ.12 கோடி
  • ஆக மொத்தம் ரூ.85 கோடிவரை வசூல் செய்துள்ளது.

வட அமெரிக்காவில் வெளியான இரண்டே நாட்களில் 3.5 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.24 கோடி) வசூலித்துள்ளது.

அதாவது ‘பாகுபலி’க்கு அடுத்த இரண்டாவது தென்னிந்தியப் படமாக கபாலி இருக்கிறது.

மேலும் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 185-200 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி (ஜீலை 22-24) வரை உலகளவில் கபாலி 6வது இடத்தை பெற்றுள்ளது. அதன் வசூல் விவரம்…

1. #StarTrek – $89.6M
2. #Tarzan – $51.1M
3. #IceAge – $51M
4. #Skiptrace – $44M
5. #TSLOP – $39.3M
6. #Kabali – $32M

கமல் உடல் நலம் குறித்து டாக்டர் என்ன சொல்கிறார்.?

கமல் உடல் நலம் குறித்து டாக்டர் என்ன சொல்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassanமாடிப்படியில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பு முறிந்ததால் கமல்ஹாசன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து டாக்டர்கள் தெரிவித்துள்ளதாவது..

“கமல்ஹாசன் அவர்களின் கால் எலும்பு முறிந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.

அவர் இன்னும் அப்சர்வேஷனில் வைக்கப்பட்டுள்ளார்.

குறைந்தது ஒரு மாதம் கமல் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றனர்.

கமலின் ஓய்வின் காரணமாக ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு செப்டம்பருக்கு தள்ளிப் வைக்கப்படவுள்ளது.

அஜித்துக்கு அடுத்து பாபி சிம்ஹாதான்…

அஜித்துக்கு அடுத்து பாபி சிம்ஹாதான்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bobby simha stillsஜிகர்தண்டா படத்தில் தான் ஏற்ற ‘அசால்ட் சேது’ என்ற கேரக்டர் பெயரை தன் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயராக சூட்டியவர் பாபி சிம்ஹா.

இவர் தற்போது இப்பட நிறுவனம் சார்பாக ‘வல்லவனுக்கும் வல்லவன்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

இத்துடன் ‘ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனம் இணைந்துள்ளது.

இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கிவரும் இப்படத்தில் ஷிவதா நாயர், பூஜா தேவரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் 16 கெட்டப்பில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். இப்படத்தின் டீசரை ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

கிட்டதட்ட 15 வருடங்களுக்கு பிறகு சென்னையை அடுத்துள்ள பழவேற்காடு ஏரியில் இப்படத்தின் முக்கிய காட்சியை படமாக்கியுள்ளனர்.

கடைசியாக இந்த ஏரியில் அஜித்தின் ‘சிட்டிசன்’ படம்தான் படமாக்கப்பட்டதாம்.

அதன்பிறகு பாபி சிம்ஹாவின் காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெறி படத்தில் பாரீஸ்; விஜய் 60 படத்தில் கோயம்பேடு

தெறி படத்தில் பாரீஸ்; விஜய் 60 படத்தில் கோயம்பேடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay actions stillsஅட்லி இயக்கிய தெறி படத்தில் ரொமான்ஸ், ஆக்ஷன், சென்டிமெண்ட், குடும்பம் என அனைத்தும் கலந்து இருந்தன.

இதில் சென்னை பாரீஸ் அருகே வில்லன்களுடன் விஜய் மோதும் சண்டைக் காட்சி பரபரப்பாக பேசப்பட்டது.

அதுபோல் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் 60 படத்திலும் விஜய் மோதும் சண்டைக் காட்சி பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இதற்காக கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போன்ற செட் அமைக்கப்பட்டு அதில் இந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

இக்காட்சியும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Articles
Follows