Breaking 2020 பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி அமைக்கும் ‘தர்பார்’

Breaking 2020 பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி அமைக்கும் ‘தர்பார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini plays IPS officer in Darbar Movie release on Pongal 2020ரஜினிகாந்த நடிப்பில் உருவாகும் தலைவர் 167 படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு தர்பார் என தலைப்பிட்டு அதன் பர்ஸ்ட் லுக்கை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இத்துடன் ரிலீஸ் தேதியையும் திட்டமிட்டு அறிவித்துள்ளனர்.

அடுத்த வருடம் 2020 ஜனவரியில் பொங்கல் தினத்தில் இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார்.

இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இதில் ரஜினிகாந்த் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

அவர் போலீஸாக நடிப்பதால் அந்த போஸ்டரில் போலீஸ் தொப்பி, போலீஸ் பெல்ட், யுனிபார்ம் முதல் போலீஸ் நாய் வரை டிசைன் செய்துள்ளனர்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினி போலீஸாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini plays IPS officer in Darbar Movie release on Pongal 2020

Rajinikanths Thalaivar 167 movie titled Darbar

BREAKING ரஜினி-முருகதாஸ் இணையும் தலைவர் 167 பர்ஸ்ட் லுக் ரிலீஸானது

BREAKING ரஜினி-முருகதாஸ் இணையும் தலைவர் 167 பர்ஸ்ட் லுக் ரிலீஸானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanths Thalaivar 167 movie titled Darbarமாபெரும் வெற்றிப் பெற்ற பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் சூட்டிங் மும்பையில் துவங்க உள்ள நிலையில் பழநி முருகன் கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டார் ஏஆர். முருகதாஸ். அதற்கான புகைப்படங்களும் அண்மையில் வெளியானது.

இப்படம் ரஜினி நடிப்பில் வெளியாகும் தலைவர் 167 படம் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு ‘தர்பார்’ என தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

Rajinikanths Thalaivar 167 movie titled Darbar

Rajinikanths Thalaivar 167 movie titled Darbar

தமிழ் புத்தாண்டில் வெளியாகும் ‘இங்கிலீஷ் டைட்டில்’ தமிழ் படங்கள்

தமிழ் புத்தாண்டில் வெளியாகும் ‘இங்கிலீஷ் டைட்டில்’ தமிழ் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.

பொதுவாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நிறைய படங்கள் வெளியாகும்.

ஆனால் இம்முறை ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதாலும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளதாலும் படங்கள் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.

இருந்தபோதிலும் ஒரு சில படங்கள் ஏப்ரல் 12ஆம் தேதியில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அன்றைய தினத்தில் விஜய் இயக்கத்தில் ஜிவி. பிரகாஷ் நடித்துள்ள ‘வாட்ச்மேன், வெங்கட் பிரபு இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள ஆர்கே நகர் மற்றும் கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன.

இவை அனைத்தும் தமிழ் படங்கள் என்றாலும் ஆங்கில தலைப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரி விலக்கு இல்லை என்பதால் தமிழ் தலைப்புகளை வைக்க யாரும் முன்வருவதில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ரூ. 750 கோடியில் ‘பொன்னியின் செல்வன்’; நயன்தாராவும் இணைகிறார்

ரூ. 750 கோடியில் ‘பொன்னியின் செல்வன்’; நயன்தாராவும் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள படம் பொன்னியின் செல்வன்.

இதன் பட்ஜெட் மட்டும் கிட்டதட்ட ரூ. 750 கோடி என்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட உள்ளது. எனவே கிட்டதட்ட 2 அல்லது 3 பாகங்களாக தயாரிக்க இருக்கிறார்களாம்.

இதில் சுந்தர சோழராக அமிதாப்பச்சனும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கவுள்ளனர் என கூறப்படுகிறது.

மேலும் பெரிய பழுவேட்டவரையராக மோகன்பாபு நடிக்கிறார்.

பேரழகி நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ்ம் நடிக்கவுள்ள நிலையில் பூங்குழலி வேடத்துக்கு நயன்தாராவை கேட்டு இருக்கிறார்களாம்.

அவரும் ஓகே சொல்லிவிடுவார் என்கிறது கோலிவுட்.

விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர நயன்தாரா படக்குழு தீவிரம்

விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர நயன்தாரா படக்குழு தீவிரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் நாயகி மற்றும் டைரக்டர் கலந்துக்கொள்ளாத போதும் சிறப்பு விருந்தினர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையாக கருத்துக்களை பேசினார். இதனால் பலரும் கண்டிக்க, திமுக கட்சியை விட்டு முக. ஸ்டாலின் நீக்கினார்.

மேலும் விஷால் உள்ளிட்ட நடிகர்களும் கண்டித்தனர்.

இதனிடையில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் ‘‘இந்த படத்தை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சில ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டு விட்டனர் என்று நினைத்தேன்.

பொருத்தமற்ற நிகழ்ச்சியில் தேவையற்ற நபர்கள் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசினர்’’ என்று ராதாரவியை கண்டித்தார்.

விக்னேஷ் சிவனின் இந்த பேச்சை படத்தயாரிப்பாளர் கண்டித்துள்ளார்.

கொலையுதிர் காலம் படத்தை வாங்கிக்கொள்வதாக சொன்ன வினியோகஸ்தர்கள் தற்போது வேண்டாம் என்று பின்வாங்கிவிட்டனர்.

டிஜிட்டல் உரிமையை வாங்குவதாக உறுதி அளித்த நிறுவனமும் இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டது.

எனவே படத்தின் நஷ்டத்துக்கு பொறுப்பு ஏற்கும்படி விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

96 பட த்ரிஷாவை ஜெராக்ஸ் எடுத்த பாவனா..; அட ஆமாம்ல…

96 பட த்ரிஷாவை ஜெராக்ஸ் எடுத்த பாவனா..; அட ஆமாம்ல…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)கடந்த ஆண்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம் 96.

பிரேம்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றதை அடுத்து மற்ற மொழிகளில் இதை ரீமேக் செய்ய போட்டி உருவானது.

கன்னட மொழியில் ‘99’ என்ற பெயரில் ரீமேக் செய்யவுள்ளனர்.

விஜய்சேதுபதி வேடத்தில் கன்னட நடிகர் கணேஷும் த்ரிஷா வேடத்தில் பாவனாவும் நடித்து வருகின்றனர்

த்ரிஷா கெட்டப்பில் இருக்கும் பாவனா போட்டோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More Articles
Follows