தர்பார் ரிலீசுக்கு ஹெலிகாப்டர்: உலக சினிமாவை மிரள வைக்க ரசிகர்கள் ஏற்பாடு

தர்பார் ரிலீசுக்கு ஹெலிகாப்டர்: உலக சினிமாவை மிரள வைக்க ரசிகர்கள் ஏற்பாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans arranged Helicopter for Darbar releaseலைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவுவை சந்தோஷ் சிவன் செய்ய இசையமைத்துள்ளார் அனிருத்.

தர்பார் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 2.39 மணி நேரம் படத்தின் கால அளவு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தின் மெய்யனூர் கிராமத்தில் உள்ள ARRS தியேட்டரில் தர்பார் படம் வெளியாகும் தினத்தன்று,

ஹெலிகாப்டர் மூலம் தியேட்டர் முன்பு மலர் தூவ கனகராஜ் என்ற ரஜினி ரசிகர் அனுமதி கோரியுள்ளார்.

பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் இந்த ஹெலிகாப்டரை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக, குறிப்பிட்ட இடத்தை மேற்பார்வை செய்து விரிவான அறிக்கையினை அனுப்புமாறு சேலம் வருவாய் கோட்டாட்சியர், சேலம் மேற்கு வட்டாட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தங்கள் அபிமான நடிகர் படங்களின் ரிலீசின் போது விதவிதமான ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்வார்கள்.

200அடி கட்அவுட் முதல் இலவச தலை கவசம் வரை வழங்கியுள்ளனர்.

ஆனால் இதுவரை இப்படியான ஹெலிகாப்டர் ஏற்பாட்டை ரஜினி ரசிகர்கள் செய்யவிருப்பது உலக சினிமா வரலாற்றில் இதுதான் முதன்முறை என கூறப்படுகிறது.

Rajini fans arranged Helicopter for Darbar release

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் புதிய படம் துவக்கம் !

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் புதிய படம் துவக்கம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Regina cassandraதிருடன் போலீஸ், உள்குத்து படங்கள் மூலம் விமர்சக ரீதியிலும் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்த இயக்குநர் கார்த்திக் ராஜு தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். Apple Tree studios தங்களது முதல் திரைப்படமாக தயாரிக்க உள்ள இப்படம் மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக தயாராகிறது. ரெஜினா கஸண்ட்ரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2020 ஜனவரி 13 முதல் துவங்கவுள்ளது.

Apple Tree studios ராஜ் சேகர் வர்மா கூறியதாவது..

ஒரு தயாரிப்பாளராக இல்லாமல் பார்வையாளனாகவே இயக்குநர் கார்த்திக் ராஜு சொன்ன கதை, என்னை மிகவும் ஈர்த்தது. எவரும் கேள்விப்பட்டிராத தளத்தில் வித்தியாசமான பாணியில் பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அவரது கதை இருந்தது. சமீப காலமாக பெண் பாத்திரங்களை மையமாக கொண்டு, நல்ல அழுத்தமாக கதையம்சம் கொண்ட படங்கள் தமிழ் திரையில் ஜெயித்து வருகிறது. அந்த வகையில் Apple Tree studios முதல் தயாரிப்பாக பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட திரில்லர் படத்தை தயாரிப்பது பெரும் மகிழ்ச்சி. கார்த்திக் ராஜு கதை சொன்ன போதே இந்த கதாப்பாத்திரத்திற்கு ரெஜினா கஸண்ட்ரா சரியாக இருப்பார் என நினைத்தேன் அவரும் கதை பிடித்து ஆவலுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த கதாப்பாத்திரத்தில் ரசிகர்கள் அவரை பெரிதும் ரசிப்பார்கள். தொடர்ந்து வித்தியாசமான கதாப்பத்திரங்களாக தேர்ந்தெடுத்து, ரசிகர்களை கவர்ந்து வரும் அவர் இப்படத்திலும் தன் திறமையை நிரூபிப்பார். கதாப்பாத்திரத்தின் மீது அவர் காட்டும் ஈடுபாடும் அதற்கு அவர் செய்துகொள்ளும் முன் தயாரிப்புகளும் திரைப்படத்தின் மீதான அவரது காதலை, அர்ப்பணிப்பை காட்டுகிறது. இப்படத்தை திரையில் பார்க்கும் போது நீங்களும் அதை காணலாம். இத்திரைப்படம் திரில்லர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றார்.

Production no 1 என தற்போதைக்கு தலைப்பிடபட்டிருக்கும் இத்திரைப்படத்தில் ரெஜினா கஸண்ட்ரா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கவுள்ளார். தற்போது அவர் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே நடிக்க பயிற்சி எடுத்து வருகிறார். படப்பிடிப்பு 2020 ஜனவரி 13 முதல் குற்றாலத்தில் துவங்கவுள்ளது. படத்தின் பெரும்பான்மை காட்சிகள் நேரடி லொகேஷன்களில் படம்பிடிக்கப்படவுள்ளது. படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் விவரம் ஃபர்ஸ்ட் லுக்குடன் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவுக்கப்படும் என்றார் தயாரிப்பாளர் ராஜ் சேகர் வர்மா.

” தமிழரசன் ” படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு

” தமிழரசன் ” படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayaraajaபின்னணி இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டும் தான்.
SNS மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில்,
விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.
ஏற்கெனவே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இது ஒரு முக்கியச் செய்தி என்றால் இதைவிட மிக முக்கியச் செய்தியாக இருப்பது தமிழரசன் படத்திற்காக இசைஞானி இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வருகிறார். அவர் இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்டில் நடத்தியதே இல்லை. ஒட்டுமொத்த வாத்தியக் கலைஞர்களையும் வீட்டுக்கு வரவழைத்து பின்னணி இசையை லைவ்-ஆக அசத்தி இருக்கிறார் இளையராஜா.
2020-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த பின்னணி இசை பாடல்களைக் கொண்ட படமாக தமிழரசன் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் உடல் உறுப்பு தானம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் உடல் உறுப்பு தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi fans*மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது
202 ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்பு தான செய்த சான்றிதழ்களை சமர்பித்தனர்.
இது இந்திய வரலாற்றில் முதல் முறையாக திருச்சி மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்க நிர்வாகிகள் வழங்கினர்கள்.

வருடாந்திர உடல் உறுப்பு தானம் செய்பவர் தமிழ்நாட்டு கணக்கெடுப்பில் 2016இல் 185 பெயரே அதிகமானது
மேலும் இதுநாள் வரையில் தமிழ்நாட்டில் உடலுறுப்பு செய்தவர்கள் எண்ணிக்கை 1338

இன்று ஒரே நாளில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி நிர்வாகிகள் 202 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்து அசத்தினர்

தர்பார் சிறப்பு காட்சி ரத்து; விஜய் ரசிகர்கள் மீது கடுப்பில் ரஜினி ரசிகர்கள்

தர்பார் சிறப்பு காட்சி ரத்து; விஜய் ரசிகர்கள் மீது கடுப்பில் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbar special shows cancelled Rajini fans condemned Vijay fansரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் ஜனவரி 9ல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவில் சாதனை படைக்கும் எனத் தெரிகிறது. சில தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய உடனே டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்துவிட்டன.

அதிகாலை காட்சிகளின் டிக்கெட்டு முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டதில் தர்பார் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என போலீசார் அறிவித்துள்ளனர்.

மேலும் இனி எந்த நடிகரின் பட சிறப்பு காட்சிக்கும் கிருஷ்ணகிரியில் அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர்.

விஜய் நடித்த பிகில் பட ரிலீசின் போது கிருஷ்ணகிரியில் சிறப்பு காட்சிகள் திரையிட கால தாமதம் ஆனது.

அப்போது ஆர்வக் கோளாறில் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சுமார் 40 பேர் வரை கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த ரகளை சம்பவத்தின் எதிரொலியாகவே தர்பார் பட சிறப்பு காட்சிக்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்களாம். அவர்கள் செய்த தவறுக்கு எங்களுக்கு ஏன் காட்சிகள் மறுக்கப்படுகிறது.

நாங்களும் அவர்களும் ஒன்றா? என இணையத்தளங்களில் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

Darbar special shows cancelled Rajini fans condemned Vijay fans

பால் தாக்கரேவாக சாருஹாசன்..; விஜய்ஸ்ரீ வெளியிட்ட அதிரடி போஸ்டர்

பால் தாக்கரேவாக சாருஹாசன்..; விஜய்ஸ்ரீ வெளியிட்ட அதிரடி போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sri reveals Bal Thackeray look of Charuhassan in Dhadha 902019ல் ரஜினியின் காலா படத்திற்கு இணையாக ‘தாதா 87’ போஸ்டர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

இதில் 87 வயது தாதாவாக நடித்திருந்தார் சாருஹாசன்.

அண்மையில் வாழ்நாள் சாதனையாளர் விருதை சாருஹாசன் பெற பெரும் பங்காற்றியவர் விஜய் ஸ்ரீ.

இந்த நிலையில் இன்று தனது 90வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் சாருஹாசன்.

இதனை முன்னிட்டு இயக்குனரான விஜய்ஸ்ரீ ஜி, தனது அடுத்தபட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சாருஹாசனை வைத்து ‘தாதா 90’ என்ற படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் வட இந்தியாவில் இந்து தேசியத்துவக் கட்சியின் நிறுவனரும் தலைவருமான பால் தாக்கரே’ கேரக்டரில் நடிக்கிறாராம் சாருஹாசன்.

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் பப்ஜி படத்தை இயக்கி முடித்துள்ளார் விஜய்ஸ்ரீ ஜி.

இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Vijay Sri reveals Bal Thackeray look of Charuhassan in Dhadha 90

More Articles
Follows