தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பி. வாசு இயக்கத்தில் கன்னடத்தில் உருவான சிவலிங்கா மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படத்தை தமிழிலும் இதே பெயரில் உருவாக்கியுள்ளார் வாசு.
லாரன்ஸ், ரித்திகா சிங், சக்திவாசு, வடிவேலு, ராதாரவி, பானுப்ரியா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.
அப்போது லாரன்ஸ் பேசியதாவது…
நான் இந்த படத்தில் 4வது ஹீரோதான். பர்ஸ்ட் ஹீரோ ரித்திகா சிங், 2வது வடிவேலு, 3வது சக்திவாசு.
என் தலைவன் ரஜினியை இயக்கியவருடன் நான் பணிபுரிந்துள்ளேன் என்பது நான் செய்த பாக்கியம்.
என் மேல் கண் பட்டு இருப்பதாக ராதாரவி அண்ணன் சொன்னார்.
அவரைப் போன்ற நல்லவர்களின் ஆசி இருக்கும்போது என்னை எதுவும் ஒன்றும் செய்யாது.” என்றார்.
இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ரவீந்திரன் தயாரித்துள்ளார்.