தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பவர் பாண்டி-கடம்பன்-சிவலிங்கா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது.
இந்த மூன்று படங்களுமே ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.
இந்த படங்கள் வெளியாகி 3 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த வார சென்னை வசூல் நிலவரம் எவ்வளவு என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனுஷ் இயக்கி தயாரித்து நடித்துள்ள ப பாண்டி படம், சென்னையில் 170 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.51,29,540 வசூல் செய்துள்ளது.
இப்படத்திற்கு குடும்பங்களின் ஆதரவு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராகவா இயக்கத்தில் ஆர்யா நடித்த கடம்பன் திரைப்படம், 168 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.47,04,608 வசூல் ஆகியுள்ளது.
இளைஞர்களை இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
பி. வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்த, சிவலிங்கா படம், 258 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.90,02,408 வசூல் செய்துள்ளது.
இப்படம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.