தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டை நடத்தி வலியுறுத்தி தமிழக இளைஞர்கள் அறவழிப் போராட்டங்களை 4 நாட்களாக நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டங்களுக்கு தினமும் சென்று நேரில் ஆதரவு கொடுத்து வருகிறார் லாரன்ஸ்.
போராட்ட களத்தில் இருந்த ஒரு கைக்குழந்தைக்கு தமிழ் அரசன் என்று பெயர் வைத்தார்.
மேலும் ரூ. 1 கோடி பணத்தையும் கொடுத்து, உணவுகளை வழங்கி வருகிறார்.
இவையில்லாமல் போராட்டத்தில் உள்ள பெண்களுக்கு உதவிடும் வகையில் தன் கேரவனையும் கொடுத்துள்ளார்.
இவரின் உயர்ந்த எண்ணங்களை மதித்து தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் லாரன்ஸ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள சிவலிங்கா படத்தை மட்டும் அன்றே இணையத்தில் வெளியிட மாட்டோம் என தெரிவித்து இருக்கிறார்களாம்.
தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையத்தளம் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் நாளே அன்றே இணையத்தில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
TamilRockers @Tamilrockersoff
We will not release #Sivalinga on the same day, #respect #wesupportjallikattu
Tamil Rockers site said they wont release Sivalinga movie on net on same release date