‘மஞ்சுமல் பாய்ஸ்’ போலத்தான் J-பேபி.. கன்டெண்ட்தான் முக்கியம்.. – வெங்கட் பிரபு

‘மஞ்சுமல் பாய்ஸ்’ போலத்தான் J-பேபி.. கன்டெண்ட்தான் முக்கியம்.. – வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மஞ்சுமல் பாய்ஸ்’ போலத்தான் J-பேபி.. கன்டெண்ட்தான் முக்கியம்.. – வெங்கட் பிரபு

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க, சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘J.பேபி.’

ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார். அவருடன் படத்தின் கதைநாயகி ஊர்வசி, இயக்குநர் பா. இரஞ்சித், இயக்குநர் சுரேஷ் மாரி, படத்தின் நாயகன் தினேஷ், முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள மாறன், நடிகை சபீதா ராய், நடிகை இஸ்மத் பானு, நடிகை மெலடி, வசனகர்த்தா தமிழ் பிரபா, படத்தின் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், காஸ்ட்யூம் டிஸைனர் ஏகன் ஏகாம்பரம், கலை இயக்குநர் ராமு தங்கராஜ், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை, மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் இயக்குநர் லெனின், பொம்மை நாயகி படத்தின் இயக்குநர் ஷான், நடிகர் அரவிந்த் ஆகாஷ், நடிகர் யாத்திசை சேயோன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

*நிகழ்வில் இயக்குநர் வெங்கட் பிரபு பேசியபோது..

”ரஞ்சித் என்னிடம் சென்னை 28-ல கூட இருந்தார். அந்த டீம்லதான் இந்த படத்தோட சுரேஷ் மாரியும் இருந்தார். ரஞ்சித் அதுக்கு முன்னாடியே சில படங்கள்ல அசிஸ்டண்டா ஒர்க் பண்ணினாலும் நாங்கள்லாம் டீமா, குடும்பமா சேர்ந்து ஒர்க் பண்ண படம்னா அது சென்னை 28-தான்.

அடுத்து அவர் அட்டகத்தி படம் இயக்க போனப்போ நான் மங்காத்தா பண்ணிட்டிருந்தேன். அட்டகத்தி முடிச்சுட்டு அந்த படத்துக்கு ஒரு ஷோ ஏற்பாடு பண்ணோம். தயாரிப்பாளர் இயக்குநர் வெற்றிமாறன் சார் வந்து படத்தை அவ்ளோ என்ஜாய் பண்ணி பார்த்தார்.

அவர் அப்படி ரசிச்சதுதான், அந்த படத்தை ஞானவேல் ராஜா வாங்கி ரிலீஸ் பண்றதுக்கு முக்கிய காரணமா இருந்துச்சு. அந்த காலகட்டத்திலேருந்தே ரஞ்சித்தோட வளர்ச்சியை, அவர் டீமோட வளர்ச்சியை நான் பாத்துக்கிட்டிருக்கேன். அப்போ ஆரம்பிச்சு இப்போவரை நாங்க எல்லாரும் குடும்பமாத்தான் இருக்கோம்.

எங்க டீம்ல இருந்து ஒவ்வொருத்தரும் படம் இயக்கி வெற்றியடையறதை பார்க்கிறேன். அதுல பெருமையும் சந்தோஷமும் எனக்குத்தான் அதிகம். சுரேஷ் மாரியை பா.இரஞ்சித் அறிமுகப்படுத்துறது இன்னும் சந்தோஷமா இருக்கு.

இந்த ஜெ பேபி படத்தை நான் இன்னும் பார்க்கலை. என் வீட்ல பாத்து ரொம்ப என்ஜாய் பண்ணிருக்காங்க. இப்போ மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தை எல்லோரும் கொண்டாடிக்கிட்டிருக்காங்க.

நம்ம தமிழ்நாட்ல அந்த படத்தை கொண்டாடுறதை பார்க்கிறப்போ கலைக்கு மொழி முக்கியமில்லை, கன்டெண்ட்தான் முக்கியம்னு புரியுது.

அதே மாதிரியான படம்தான் இது. ஆனா, இதை ரொம்ப நாள் முன்னாடியே எடுத்துட்டாங்க. ஊர்வசி மேடத்தை வெச்சு ஒரு படம்கிறப்போ அதுவே ஸ்பெஷல்தான். அவங்க அவ்ளோ பெரிய ஆர்டிஸ்ட்; அவ்ளோ பெரிய என்டர்டெயினர். நாம எல்லாருமே அவங்க ஃபேன்தான். படம் கண்டிப்பா ஃபன் ரைடாதான் இருக்கும்.

படத்துல நடிச்சிருக்கிற எல்லாருக்கும், டெக்னிசியன் எல்லாருக்கும் வாழ்த்துகள். நல்ல படங்களை எடுக்குற ரஞ்சித்துக்கு நன்றியும் வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்.

இது எங்க குடும்பத்திலேருந்து வர்ற மற்றுமொரு படம். எல்லாரும் ஆதரவு தரணும்னு கேட்டுக்கிறேன்” என்றார்.

*இயக்குநர் சுரேஷ் மாரி பேசியபோது,*

‘நான் விஷ்ணு வர்தன் சார்கிட்ட அப்பரண்டிஸா சேர்ந்து, அந்த படம் ரிலீஸான பிறகு நடிகர் அரவிந்த் ஆகாஷ் மூலமா வெங்கட் பிரபு சாரை பார்க்க முடிஞ்சுது. அப்படித்தான் நான் அந்த கூட்டத்துல, குடும்பத்துல சேர்ந்தேன். அதுலேருந்து மங்காத்தா, சரோஜா, பிரியாணினு பல படங்கள்ல அவரோட டிராவல் பண்ணேன். நான் பொறுமையானவன்னு சொல்றாங்க. அந்த பொறுமை வெங்கட் பிரபுகிட்டேயிருந்து கத்துக்கிட்டது.

அடுத்து ரஞ்சித்கூட இணைஞ்சேன். ரஞ்சித்கூட கபாலில ஒர்க் பண்றப்போதான் கவனிச்சேன். அவர்கிட்டே இருந்தவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம். ஒருத்தர் கம்யூனிஸ்ட், ஒருத்தர் பெமினிஸ்ட், ஒருத்தர் சோஷியலிஸ்ட். நான் என்ன ரகம்னு புரியாமலே இருந்தேன். அப்படியெல்லாம் இருந்துதான் இப்போ தனியா படம் இயக்கிருக்கேன். அதுவும் அவரோட தயாரிப்புல.

இந்த கதை என் குடும்பத்துலேருந்து, பெரியம்மாவோட வாழ்க்கையிலயிருந்து எடுத்த கதை. அம்மாங்கிறவங்க எவ்ளோ முக்கியம்கிறதை நிறையப் பேரு புரிஞ்சுக்காம ஓடிக்கிட்டேயிருக்கோம். அவங்களுக்கெல்லாம் அம்மாங்கிற உயிரோட மதிப்பை, அவங்கள எப்படி மதிக்கணும்கிறதை இந்த படம் புரிய வைக்கும். அழவைக்கும். அதே நேரம் பயங்கரமா சிரிக்கவும் வைக்கும். அதாவது வெங்கட் பிரபு பாதி, ரஞ்சித் படம் பாதி அப்படித்தான் இந்த படம் இருக்கும்.

டோனி பிரிட்டோ போட்டுக்கொடுத்த பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு பொருத்தமா இருக்கும்.

தினேஷ் நல்ல நடிகர்னு ஏற்கனவே புரூப் பண்ணிட்டார். அவர்கிட்டே இந்த கதையை சொல்லி உடம்பு இப்படி இருக்கணும்னு சொன்னேன். அதுக்கேத்தமாதிரி வெய்ட் கூடி வந்தார்.

கோவிட் காலத்துல வெஸ்ட் பெங்கால்ல ஷூட் பண்ணோம். நிறைய சவால்களை சந்திச்சோம்.

காமெடி நடிகரா இதுவரை பார்த்த மாறனை இதுல வேற மாதிரி பார்க்கலாம். அவருக்குன்னு இருக்கிற ஸ்டைல்ல கவுண்டர் டயலாக்கும் இருக்கும். ரொம்ப சூப்பரா இருக்கும். திணேஷ், மாறன் ரெண்டு பேரோட நடிப்பையும் பார்த்து கண்கலங்கிட்டேன்.

இந்த கதையை உருவாக்கினப்போ என்னோட முதல் சாய்ஸா ஊர்வசியம்மாவைத்தான் நினைச்சிருந்தேன். நான் சின்ன வயசிலேருந்து அவங்க படங்களை பார்த்து ரசிச்சிருக்கேன். அவங்க கேரக்டர் எப்படின்னா சட்னு கோபப்படுவாங்க; சட்னு திட்டுவாங்க, அடிப்பாங்க, சாப்பாடு ஊட்டி விடுவாங்க, சட்னு காமெடியா எதையாச்சும் பண்ணுவாங்க. அவங்ககிட்டே இந்த கதையை சொன்னப்போ அவங்களுக்கு பிடிச்சுது. ஆனா, நான் பாட்டியா பண்ண மாட்டேன். என் பசங்கள்லாம் கேள்வி கேட்பாங்க அது இதுன்னு சில விஷயங்கள் சொன்னாங்க.

அவங்களைத் தவிர யார் பண்ணாலும் சரியா இருக்காதுன்னு தொடர்ந்து கேட்டுக் கேட்டு சம்மதிக்க வெச்சேன்.

ஃபர்ஸ்ட் டைமா இந்த படத்துல அம்மாவுக்குன்னு பயங்கர பில்டப், இன்ட்ரோ சாங் வெச்சிருக்கோம்.

நடிப்புன்னு பார்த்தா எங்க பெரியம்மாவை அப்படியே கண் முன்ன நிறுத்தினாங்க. அவங்க ஃபெர்பாமென்ஸ் என்னை பல தடவை கண் கலங்க வெச்சிது” என்றார்.

J Baby movie is like Manjummal Boys says Venkat Prabu

சாதி என்பது உணர்வே.. அரசியல் சினிமாவை விட்டு விலக மாட்டேன்.. – ஆர்.கே. சுரேஷ்

சாதி என்பது உணர்வே.. அரசியல் சினிமாவை விட்டு விலக மாட்டேன்.. – ஆர்.கே. சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாதி என்பது உணர்வே.. அரசியல் சினிமாவை விட்டு விலக மாட்டேன்.. – ஆர்.கே. சுரேஷ்

காடு வெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’.

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர், இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது:-

“என்னைப்பற்றிய எத்தனையோ கட்டுக்கதைகள் கற்பனைகளை கிளப்பிவிட்டார்கள். நான் 100 படங்கள் விநியோகம் செய்திருக்கிறேன். எத்தனையோ படங்கள் தயாரித்திருக்கிறேன்; 40 படங்கள் நடித்திருக்கிறேன்.

சினிமாவில் எனக்கு 15 வருட உழைப்பு உண்டு. எல்லா அரசியல்வாதிகள் எல்லா சாதிக்காரர்களுடனும் பழக்கம் உண்டு. அப்படியான சூழலில் என்னைப்பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது. 15 வருடமாக சினிமாவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நான் தவறு செய்திருப்பேனா?

வடமாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். அதனால் சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன். இப்போது காடுவெட்டிக்கு வருவோம். இந்த கேரக்டரில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.

இயக்குனர் சோலை ஆறுமுகம் கதையை சொன்னதுமே அவரை மைண்ட்ல வச்சுதான் நடித்தேன். குரு ஐயாவின் குடும்பத்துக்கு சொல்றேன். இந்தப்படம் உங்களுக்கு பெருமை சேர்க்கும். இது உணர்வு சார்ந்த படம்.

இதை தமிழ்நாடு முழுவதும் வரவேற்பார்கள். இது சாதி படம் இல்லை. நான் எந்த சாதியையும் தவறாக பேச மாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே.”

இறுதியாக படத்தின் இயக்குனர் சோலை ஆறுமுகம் பேசியதாவது:-

“காடுவெட்டியை என்னால் இயக்க முடிந்தது என்றால் அதற்கு முதல் காரணம் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ்தான். இந்த படத்திற்கு சென்சார் 31 கட்டுகள் கொடுத்தது.

சென்சார் பிரச்சனை, கோர்ட் வழக்கு என்று வந்தபோது அண்ணன் மகேந்திரன்தான் நம்பிக்கையையும் 100 யானை பலத்தையும் தந்தார்.

காடுவெட்டி என்ற தலைப்பை வைக்கக்கூடாது என்று சொன்ன சென்சார் போர்டிடம் எனது விளக்கத்தை கொடுத்தேன். காடுவெட்டி பெயருக்கு பெரிய வரலாறு இருக்கிறது.

அந்த காலத்தில் மன்னர்கள் போர் பயிற்சிக்காக காட்டில் ஒரு இடத்தை தேர்வு செய்து மரங்களை வெட்டி போர் பயிற்சிக் களமாக பயன்படுத்துவார்கள்.

அதனை போர்க்குடி மக்கள் விவசாய நிலமாக மாற்றுவார்கள். பிறகு அதனை ஊர்களாக மாற்றுவார்கள். அப்போது அதற்கு காடுவெட்டி என்று பெயர் வைப்பார்கள். இப்படி தமிழ் நாட்டில் 11 இடங்கள் உள்ளன. ஆக காடுவெட்டி ஒரு சரித்திரம் என்று விவாதித்தேன். இந்த தலைப்பு கிடைத்தது.

காதல் என்ற சப்பை காரணத்துக்காக எல்லோரையும் ஒழிக்க நினைத்தால் அது தலைமுறை தலைமுறையாக வன்முறையை சேர்க்கும். இந்தப்படம் தமிழ் சினிமாவில் வட மாவட்டத்து மக்களின் வாழ்வியலை, கலாச்சாரத்தை, அரசியலை உள்ளது உள்ளபடி பேசும்.

நிறைய ஹீரோக்களிடம் இந்த கதையை சொன்னபோது அவர்களுக்கு கதை பிடித்திருந்தது. டைட்டிலை சொன்னபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள். ஆனால் படத்தின் தலைப்புக்காகவே இந்த படத்தில் நடிக்க ஆர்.கே.சுரேஷ் சம்மதித்தார். தமிழ் சினிமாவில் இப்படியொரு ஹீரோ கிடைப்பது அரிது. அவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றி” என்றார்.

I wont quit Cinema and Politics says RK Suresh

ஆர்.கே.சுரேஷ் பெரிய நடிகன். அவனுக்குள் 9 ரஜினி இருக்கார்… – ஆர்.வி.உதயகுமார்

ஆர்.கே.சுரேஷ் பெரிய நடிகன். அவனுக்குள் 9 ரஜினி இருக்கார்… – ஆர்.வி.உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காடுவெட்டி ஜாதி படம் கிடையாது ஆர். கே. சுரேஷ் பேச்சு, சினிமா, அரசியலை விட்டு போகமாட்டேன் ஆர்.கே.சுரேஷ் அதிரடி, காடுவெட்டி படம் செய்யப்போகும் சம்பவம்,
இயக்குனர் மோகன் ஜி பரபரப்பு பேச்சு,

காடு வெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’.

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர், இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது:-

“ தல, தளபதி படங்களுக்கு இணையாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கிறது. நடிகர் பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ‘மலையூர் மம்பட்டியான்’ படம்தான் அவரை பெரிய ஹீரோவாக்கியது.

‘சீவலப்பேரி பாண்டி’ படத்துக்கு பிறகு நெப்போலியன் பெரிய ஹீரோவாக வளர்ந்தார். அதேபோல் ‘காடுவெட்டி’ படத்துக்கு பிறகு ஆர்.கே.சுரேஷ் பெரிய ஹீரோவாக உயர்வது நிச்சயம். பலருடைய கெட்ட எண்ணங்களை இந்த காடுவெட்டி வெட்டிவிடும்.

சமுதாய கதைகளில் பெரிய ஹீரோக்கள் நடிப்பதில்லை. இந்த மாதிரி கதைக்கு ஆர்.கே.சுரேஷ் மாதிரியான ஹீரோதான் வேண்டும். இது பெண்களுக்கான விழிப்புணர்வு படமாகவும் பெற்றோர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படமாகவும் இருக்கும் சமுதாயத்தில் பெண்கள் முன்னேறிவிட்டதாக ஒரு பார்வை இருக்கிறது.

ஆனால் அரசியல்வாதிகளோ தமிழ் நடிகைகளை பார்த்து அயிட்டம் என்று பெயர் வைக்கிறார்கள். நீங்கள் எங்கேயோ குடித்துவிட்டு கூத்தடித்தவர்கள் நடிகைகளை பற்றி தவறாக பேசுகிறார்கள். இங்கு எல்லா நடிகைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும்.”

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசியபோது…

“இந்தப்படத்தில் நானே ஷாக் ஆகிற மாதிரி வணக்கம் தமிழா சாதிக், கானா பாடலை பண்ணியிருக்கிறார் அவருக்கு வாழ்த்துகள். இந்தப்படத்தில் நிறைய ஆக்ஷன் இருந்தாலும் நல்ல மெசேஜ் இருக்கிறது. முக்கியமா படத்தின் பின்னணி இசை மிகப்பெரிய வெற்றியை பெரும். நாயகன் ஆர்.கே. சுரேஷின் நடிப்பை பார்த்தபோதே படத்திற்கு தன்னாலேயே இசை வந்துவிட்டது. ‘காடுவெட்டி’ பெரிய வெற்றியை அடையும்” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் பேசியதாவது:-

“இப்படியொரு படத்தை எடுக்க பயங்கர தில் வேண்டும். காடுவெட்டி கேரக்டரில் ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கிறார். காடுவெட்டி குரு எந்த அரசியல்வாதியையும் மதிக்கமாட்டார்.

தன்னுடைய ராஜ்ஜியம் தனி என்று வாழ்ந்த மகான். அதனால் இந்தப்படத்துக்கு பிரமாண்டமாக வேலை செய்ய வேண்டும் என்று தோன்றியது.
முக்கியமாக இங்கு ஒரு விஷயத்தை பேசியாகவேண்டும்.

ராமர் கோவில் பிரதிஷ்டை நடந்தபோது உலகத்தில் உள்ள அத்தனை இந்துக்களும் மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி சொன்னார். ஆனால் ராமருடைய நிறமான நீலத்தை தயாரிப்பு நிறுவனத்தின் பெயராக வைத்திருக்கும் இயக்குனர் “6 மணிக்கு மேல் விளக்கேற்றாவிட்டால் நம்மை தீவிரவாதிகள் என்று சொல்லிவிடுவார்கள்” என்று வன்மத்தோடு பேசியது வேதனை அளிக்கிறது”

கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் பேசியபோது,

“இந்தப் படத்தின் தலைப்பை பதிவு செய்ய வந்தபோது நான் தரமாட்டேன் என்று சொன்னேன். ஏனெனில் காடுவெட்டி என்பது மாவீரனின் பெயர். அதை யாரும் மிஸ் யூஸ் செய்துவிடக்கூடாது என்று பயந்தேன்.

ஆனால் இப்போது டிரைலரை பார்த்த பிறகு சரியானவர்களுக்கு இந்த தலைப்பை கொடுத்திருப்பது புரிகிறது. காடுவெடி குரு வீரப்பரம்பரை. அந்த கேரக்டரில் நடிப்பதற்கு வீரம் வேண்டும். அந்த வீரன்தான் ஆர்.கே.சுரேஷ்”என்றார்.

இயக்குனர் மோகன் ஜி பேசியதாவது:-

“இந்தப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து வெளிவர உள்ளது. ‘திரெளபதி’ படத்தின் ரிலீசுக்காக நான் பட்ட கஷ்டம் அதிகம். அதேபோல் காடுவெட்டியும் பல பிரச்சனைகளையும் வழக்குகளையும் சந்தித்துள்ளது. பிரச்சனைகளை சந்தித்து ரிலீஸ் ஆகும் படங்கள் பெரிய வெற்றியை அடைந்துள்ளது.

அந்தவகையில் ‘காடுவெட்டி’ மிகப்பெரிய ஹிட் ஆகும். குறிப்பாக இளைஞர்கள் கொண்டாடுவார்கள். தமிழ் நாட்டில் தவறான காதலை எதிர்த்தவர் காடுவெட்டி குருதான். சாதிக்கின் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. கனல் கண்ணன் மாஸ்டர் ஆக்ஷன் ப்ரியர்களுக்கு பெரிய ட்ரீட்டையே வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அடுத்த வீரமான ஹீரோ ஆர்.கே.சுரேஷ்தான். இந்தப்படத்தில் பெரிய சம்பவம் இருக்கு. ‘திரெளபதி 2’ விரைவில் தொடங்கும். அதற்குமுன் ‘காடுவெட்டி’யை கொண்டாடி முடியுங்கள்”

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது:-

“நான் காடுவெட்டி குருவின் ரசிகன். கிட்டத்தட்ட இதே கதைதான் ‘சின்னக்கவுண்டர்’. இந்த டிரண்டை ஆரம்பித்து வைத்ததே நான்தான்.

ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டால் அந்த படத்தின் இயக்குனரும் ஹீரோவும் என்ன ஆட்டம் ஆடுகிறார்கள் தெரியுமா?.. கஷ்டங்கள் வலிகளை கடந்து வெற்றி பெறும்போதுதான் அடுத்தவர்களை மதிக்கும் பன்பு வரும்.

இங்கு எல்லோரும் இதயப்பூர்வமாக வாழ்த்தியுள்ளார்கள். அதனால் இந்தப்படம் நிச்சயம் வெற்றியை தரும். ஆர்.கே.சுரேஷ் சாதாரண ஆள் இல்லை. மிகப்பெரிய நடிகன். அவனுக்குள் ஒரு ரஜினி இல்லை ஒன்பது ரஜினி இருக்கார்.

வெற்றி பெறப்போகும் மனிதன்தான் அதிக விமர்சனங்களுக்கு உள்ளாவான். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அத்தனையையும் தகர்த்து ஆர்.கே.சுரேஷ் முன்னேறுவார். அவன் அடித்தால் 60 அடி தூரம் போய் விழுவாங்க. நடிச்சா எல்லோருடைய இதயமும் விழும்.

பேரரசு இயக்கிய ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ படங்கள் விஜய்க்கு பெரிய திருப்புமுனையை தந்தது. அந்த கூட்டணி மீண்டும் சேரனும். வளர்த்து தூக்கிவிட்ட இயக்குனர்களை சேர்த்துக்கொண்டு போவதுதான் பண்பாடு. ஆனால் வெற்றிபெற்ற பிறகு அதற்கு காரணமானவர்களை மறந்துவிடும் பழக்கம் சினிமாவில் இருக்கு. இது நியாயமே இல்லை என்பது எனது கருத்து”

9 Rajini hide within RK Suresh says Udhayakumar

CHIYAAN 62 தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

CHIYAAN 62 தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

CHIYAAN 62 தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

சீயான் விக்ரமுடன் இணையும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு,

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, ‘சீயான் 62’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘சீயான்’ விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் ‘சீயான் 62’ எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார்.

மேலும் இவரின் நடிப்பில் வெளியான ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’, ‘டிரைவிங் லைசன்ஸ்’, ‘ஜன கன மன’, ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’ ஆகிய படங்களிலும் இவரது தனித்துவமான நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இவர் முதன்முறையாக தமிழில் ‘சீயான் 62’ படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

‘சீயான்’ விக்ரம்- எஸ். ஜே. சூர்யா -சுராஜ் வெஞ்சாரமூடு என தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த விருது பெற்ற நட்சத்திர கலைஞர்கள் ஒன்றிணைygந்திருப்பதால் ‘சீயான் 62’ படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Malayala Actor Suraj Venjaramoodu debuts in Kollywood

விஜய் அரசியல் மக்கள் கையில்..; என் அரசியல் காலம் கையில்.. – பிரசாந்த்

விஜய் அரசியல் மக்கள் கையில்..; என் அரசியல் காலம் கையில்.. – பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் நடிகர் பிரசாந்த் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசத்தை (ஹெல்மெட்) வழங்கி, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்…

“தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதனை வலியுறுத்தும் வகையிலும், வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்புவுடன் செல்வதை அறிவுறுத்தும் வகையிலும், அனைவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதனை விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் தனது ரசிகர் மன்றம் மூலமாக தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது..

இதற்கு முன்பு பல்வேறு நல்ல விஷயங்களை ரசிகர் மன்றம் செய்து இருந்தாலும்s, இது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய விஷயம் என்பதால் வெளிப்படையாக செய்து வருகிறேன்.

என்னை போன்ற நடிகர், பிரபலமானவர்கள் கூறும் போது மக்களிடம் எளிதாக சென்றடையும். நடிகர் விஜய்யுடன் நடிக்கும் GOAT திரைப்படம் நன்றாக போய் கொண்டு இருக்கிறது.

நானும் சகோதரர் விஜய்யும் நடிக்கும் திரைப்படம் மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பது மட்டுமின்றி, மக்களை மகிழ்விப்பது மட்டுமின்றி திரையரங்குகளுக்கு வரும் மக்கள் சூப்பர் என்று கூற வேண்டும் என்பதற்காக இது போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்களை செய்து கொண்டிருக்கிறோம்.

தமிழில் மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிப்பது கல்லூரி வாசல் (அஜித் உடன்) திரைப்படத்தில் இருந்து தொடங்கிவிட்டது.

தற்போது நான், சகோதரர் விஜய், பிரபுதேவா எல்லோரும் இணைந்து நடிக்கின்றோம். மிகவும் சந்தோஷமாக உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருடைய ஒரே எண்ணம் மக்களுக்கு சூப்பரான படம் கொடுக்க வேண்டும், எல்லாமே சூப்பராக அமைந்து கொண்டிருக்கிறது.

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பது நல்ல விஷயம்.

இதற்கான பதில் மக்கள் தான் சொல்வார்கள். தற்போது நான் ஒரு நடிகன் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும் அதை செய்து கொண்டிருக்கிறேன். நான் அரசியலுக்கு வருவதை காலம்தான் முடிவு செய்யும்

சாதாரண மனிதனாக இருந்து மக்களுக்கு சேவை செய்யலாம்.
நடிகர் விஜய் அரசியலுக்கு அழைத்தால் வருவீர்களா? எனக் கேட்கிறீர்கள். அதற்குக் காலம் தான் பதில் சொல்லும். இப்போது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் அதற்கு மட்டும்தான் வந்துள்ளேன்.

நடிகர் விஷால் கட்சி ஆரம்பித்தாலும் அதுவும் நல்ல விஷயம் தான் என்றும். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் தற்போது இல்லை தற்போது நான் ஒரு நடிகர் மட்டும் தான் என்றார்.

நடிகை திரிஷா பற்றிய விமர்சனங்கள் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நடிகை என்பதை விட அவர் முதலில் ஒரு பெண். நம்ம வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதனை உணர வேண்டும். யாராக இருந்தாலும் அப்படி பேசியது மிகவும் தவறு.

தமிழகத்திற்கு இன்று ஒரு பண்பாடு உள்ளது. நாம் யாரையும் குறைத்தோ, தவறாக பேசக்கூடாது. மக்கள் நல்லது நடந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள், மக்களை யாரும் ஏமாற்ற முடியாது.

தமிழகத்தில் சில திரையரங்குகள் முடுவதற்கு சில காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதை இடத்தில் பல திரையரங்குகள் உருவாகி வருகிறது, ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு கஷ்டங்கள் இருக்கும் அதற்கு அரசு நிச்சயமாக உதவும்” என்றார்.

Prashanth talks about GOAT movie and his politics

இந்து அறநிலையத்துறை அதிகாரி & நரிக்குறவப் பெண்ணாக ஹன்சிகா

இந்து அறநிலையத்துறை அதிகாரி & நரிக்குறவப் பெண்ணாக ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Masala Pix நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர் கண்ணண் தயாரித்து, இயக்க, நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், “காந்தாரி” திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இப்படம் வெளிவரவுள்ளது .

தமிழ் திரையுலகில் குடும்பங்களோடு கொண்டாடும் ரசனை மிக்க படங்களை வழங்கி வருபவர் இயக்குநர் கண்ணன். குடும்பங்கள் கொண்டாடும் ஜெயம் கொண்டான், கண்டேன் காதலைப் படங்களுடன் இளைஞர்கள் கொண்டாடும் ‘சேட்டை, இவன் தந்திரன், பிஸ்கோத்’ முதலாக பல வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு R.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான “தி கிரேட் இண்டியன் கிச்சன்” திரைப்படம், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.

இந்த வரிசையில் தற்போது நாயகி ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கமர்ஷியல் கலந்த ஹாரர் டிராமாவாக “காந்தாரி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்து அறநிலையத்துறை அதிகாரியாக வேலை பார்க்கும் இளம்பெண், பல காலத்திற்கு முன் ஒரு மன்னன் கட்டிய கந்தர்வக்கோட்டையை ஆராயச் செல்கிறார். பொக்கிசங்களைத் தேடிச் செல்லும் அவருக்கு, அங்கே பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. பல திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதையில், இப்படம் ரசிகர்களுக்குப் புத்தம் புது அனுபவமாகவும் இருக்கும்.

நடிகை ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் முதன்முறையாக இந்து அறநிலையத்துறை அதிகாரி, நரிக்குறவப் பெண் என இரட்டை வேடத்தில், நடிக்கிறார். நரிக்குறவப்பெண்ணாக நடிப்பதற்காக சில பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார். அவரது திரைப் பயணத்தில் இப்படம் அவரது நடிப்பிற்குப் பெயர் சொல்லும் படமாக இருக்கும்.

இப்படத்திற்காகச் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் 60 லட்சம் ரூபாயில், ஒரு பிரம்மாண்டமான மலைக் குகை அமைத்து, 1943 ல் நடக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்கியுள்ளது படக்குழு.

காந்தாரி

இப்படத்தின் ஒளிப்பதிவும், இசையும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி நடிக்க, மெட்ரோ ஷிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், ஸட்ண்ட் சில்வா, வினோதினி, பவன், பிரிகிடா சகா, வடிவேல் முருகன், கலைராணி ஆகியோர் முக்கியப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் கண்ணன் Masala Pix நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரித்து, இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதையைத் தொல்காப்பியன் எழுதியுள்ளார், திரைக்கதையை தனஞ்செயன் எழுதியுள்ளார். வசனங்களை ஸ்ரீனி எழுதியுள்ளார். ஒளிப்பதிவை பாலசுப்பிரணியம் செய்கிறார்.

படத்திற்கு LV.முத்து கணேஷ் இசையமைத்துள்ளார், எடிட்டிங் பணிகளை ஜிஜிந்த்ரா கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை ஸட்ண்ட் சில்வா வடிவமைத்துள்ளார்.

தயாரிப்பு மேற்பார்வை பணிகளை சிவசங்கரன் செய்துள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார்.

படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். இப்படத்தினை கோடை விடுமுறையை குடும்பங்களோடு கொண்டாடும் வகையில் வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

காந்தாரி

Gandhari featuring Hansika Motwani in dual role

More Articles
Follows