ஓர் அழகான குடும்ப கதையை சொல்ல மகளிர் தினத்தில் வருகிறாள் ‘ஜெ பேபி’

ஓர் அழகான குடும்ப கதையை சொல்ல மகளிர் தினத்தில் வருகிறாள் ‘ஜெ பேபி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி.

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே
வெளிவந்திருக்கிறது.

‘ஜெ பேபி ‘ படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

ஜெ பேபி

ஜெ பேபி திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவினரையும்
படத்தின் இயக்குனர் சுரேஷ் மாரி, படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் , சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் அவசியம் தங்களது அம்மாக்களையும் அழைத்து வாருங்கள்.

இது எல்லோருக்குமான படம்” என்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.

‘ஜெ பேபி’ படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

ஜெ பேபி

J Baby movie set to release on womens day

கௌதம் படங்களில் அஜித் சூர்யாவை பிரமிப்புடன் பார்த்தேன்.. இன்று என்னை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன்.. – வருண்

கௌதம் படங்களில் அஜித் சூர்யாவை பிரமிப்புடன் பார்த்தேன்.. இன்று என்னை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன்.. – வருண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் வருண் தனது திரை இருப்பைப் பொருட்படுத்தாமல் பலவிதமான கதாபாத்திரங்களை அச்சமின்றி ஏற்று, தனது கடின உழைப்பை ஒவ்வொரு படத்திலும் கொடுத்துள்ளார்.

ஒரு ரொமாண்டிக்கான கதாபாத்திரம், பல படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடிப்பது என்ற நிலையில் இருந்து தற்போது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படத்தில் அவர் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் மார்ச் 1, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் வருண்…

“கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற புகழ்பெற்ற இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு ஆர்வமுள்ள நடிகருக்கும் கனவு. அது எனக்கு நிறைவேறி இருக்கிறது.

எல்லா ஹீரோக்களும் அவரது இயக்கத்தில் உருவாகும் ஸ்டைலிஷான காதல் கதையில்தான் நடிக்க விருப்பப்படுவார்கள்.

ஆனால், அவர் என்னை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது எனக்கு மகிழ்ச்சியான சர்ப்ரைஸாக இருந்தது. அவருடன் பணிபுரிந்தது எனக்கு முழுமையான ஆசீர்வாதம். மேலும், எனக்கு படப்பிடிப்பு தளத்தில் எண்ணற்ற ஃபேன் பாய் தருணங்களும் இருந்தது.

கமல், சூர்யா, அஜித் போன்ற தமிழ் சினிமாவின் ஐகானிக் கதாநாயகர்களை கெளதம் திரைப்படங்களில் பிரமிப்புடன் பார்த்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கதாநாயகனாக நான் நடித்தது உண்மையிலேயே நம்பமுடியாத அனுபவமாக இருந்தது.’ஜோஷ்வா இமை போல் காக்க’ ஆக்‌ஷன் பிரியர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆக்‌ஷன் டைரக்டர் யானிக் பென் மற்றும் அவரது குழுவினரின் பணியை ஒவ்வொரு ஃப்ரேமிலும் பார்க்க முடியும். என்னுடைய சக நடிகர்களான ராஹே, கிருஷ்ணா மற்றும் பிறரின் அசைக்க முடியாத ஆதரவிற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருக்க, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் படத்தைத் தயாரித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ராஹே நாயகியாக நடித்திருக்க, கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கிறார்.

*தொழில்நுட்ப குழு:*

ஒளிப்பதிவு: எஸ்ஆர் கதிர் ஐஎஸ்சி,
எடிட்டிங்: ஆண்டனி,
இசை: கார்த்திக்,
கலை இயக்குநர்: குமார் கங்கப்பன்,
ஆடைகள்: உத்தாரா மேனன்,
பாடல் வரிகள்: மதன் கார்க்கி, விவேக், விக்னேஷ் சிவன், சூப்பர் சுபு, கானா குணா,
ஆக்‌ஷன்: யானிக் பென்,
நிர்வாக தயாரிப்பாளர்: கே அஸ்வின் குமார்,
கலரிஸ்ட்: ஜி பாலாஜி,
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி & அழகியகூத்தன்,
ஒலிக்கலவை: சுரேன் ஜி.

Varun talks about Joshua imai pol kakka experience

90ஸ் கிட்ஸ் பள்ளி நினைவுகளை மீண்டும் கொண்டு வந்த ‘நினைவெல்லாம் நீயடா’

90ஸ் கிட்ஸ் பள்ளி நினைவுகளை மீண்டும் கொண்டு வந்த ‘நினைவெல்லாம் நீயடா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘நினைவெல்லாம் நீயடா.

இசைஞானி இளையராஜா இசையமைத்த 1417வது படம் என்கிற பெருமையுடன் அழகான காதல் காவியமாக வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ளார். மனீஷா யாதவ், யுவலட்சுமி மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்க இன்னொரு நாயகனாக ரோஹித் நடித்துள்ளார்.

நினைவெல்லாம் நீயடா

முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

பள்ளிக்கால நினைவுகளை மையப்படுத்தி வெளியாகும் படங்கள் எல்லாமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று விடுவதில்லை..

ஆனால் ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தை ரசிகர்களின் மனதை தொடும் விதமாக சரியான கலவையாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆதிராஜன்.

இந்தநிலையில் சமீபத்தில் இப்படத்தின் சிறப்புக்காட்சியை இயக்குநர் கதிர், நடிகர் சம்பத்ராம் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டுகளித்தனர்.

இயக்குநர் கதிர் கூறும்போது…

“ரொம்ப நாளைக்கு பிறகு ரசித்து பார்த்த படம். பள்ளிக்கூட காட்சிகள் ரசிக்கும் விதமாக இருக்கின்றன” என பாராட்டினார்.

நடிகர் சம்பத்ராம் கூறும்போது, “90களின் மாணவர்கள் காலகட்டத்தை நம் கண் முன் நிறுத்தி உள்ளார்கள். 96 படம் போலவே இன்னொரு விதமாக இந்தப்படம் நம்மை கவர்கிறது” என சிலாகித்துள்ளார்..

நினைவெல்லாம் நீயடா

படம் பார்த்த பலரும் இப்படத்தில் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக படமக்கப்பட்டிருப்பதாக பாராட்டி வருகிறார்கள்.

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தை தயாரித்துள்ளார்.

https://we.tl/t-NIvTgcjORx

Ninaivellam Neeyada movie updates

சட்ட விரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்களுடன் பணியாற்ற மாட்டேன்… – அமீர்

சட்ட விரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்களுடன் பணியாற்ற மாட்டேன்… – அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் இயக்குனருமான அமீர் விடுத்துள்ள அறிக்கையில்…

மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.!

கடந்த இரண்டு நாட்களாக, எனது “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த 22-ம் தேதி நான் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை.

தயாரிப்பாளர் ஜாஃபர்

எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.!

நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர்.

அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்.

“இறைவன் மிகப் பெரியவன்”

அன்புடன்,
அமீர்

26.02.2024
சென்னை

அமீர்

Ameer statement about Producer Jaffer Sadhiq

ilaiyaraja Biopic : தனுஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் இணையும் ரஜினி – கமல்?

ilaiyaraja Biopic : தனுஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் இணையும் ரஜினி – கமல்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் இளையராஜா. இவர் இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.

எனவே இவரது வாழ்க்கை படத்தை திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்து இருந்தார் பாலிவுட் இயக்குனர் பால்கி.

இளையராஜாவின் வாழ்க்கை படத்தில் இளையராஜாவாக நடிக்க இருப்பவர் நடிகர் தனுஷ் என்பது நமக்குத் தெரிந்த செய்திதான்.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கியமான சிறப்பு தோற்றத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் இளையராஜாவிற்கு நெருக்கமான நண்பர்கள் என்பதும் ரஜினி, கமல் வாழ்வில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் இளையராஜா தந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுவரை இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Rajini Kamal will join in ilaiyaraja Biopic

காளிதாஸ் உடன் நடிக்க யோசிக்கனும்.. அவருக்காக மன்னிப்பு கேட்கிறேன்.. – அர்ஜுன் தாஸ்

காளிதாஸ் உடன் நடிக்க யோசிக்கனும்.. அவருக்காக மன்னிப்பு கேட்கிறேன்.. – அர்ஜுன் தாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”.

டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ் ஹிந்தி என இரட்டை மொழிகளில் வரும் மார்ச் 1 முதல் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற

*இயக்குநர் பிஜோய் நம்பியார் பேசியதாவது,*

“போர்” திரைப்படம் ஒரு நேரிடையான தமிழ்ப்படம் எடுக்க வேண்டும் என்பதற்கான என்னுடைய மூன்றாவது முயற்சி ஆகும். ஷோலோ திரைப்படத்தையும் அந்த எண்ணத்தில் தான் உருவாக்கினேன். ஆனால் அதை தியேட்டர்களில் வெளியிட முடியாமல் போயிற்று. பந்த் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் வந்து அதை தடை செய்துவிட்டது. ”போர்” திரைப்படம் ஒரு முழுமையான தமிழ்ப்படம். இதில் நடித்திருக்கும் முக்கிய நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் அனைவருமே தமிழ் தெரிந்தவர்கள். தமிழ் வெர்ஸனை மிகச் சிறப்பாக உருவாக்க எனக்கு ஸ்ரீகாந்த் உதவினார்.

இது ஒரு கலப்படமற்ற முழுத் தமிழ் திரைப்படம். கல்லூரி கால வாழ்க்கைத் தொடர்பானத் திரைப்படம். எனக்கு எப்போதுமே கல்லூரி தொடர்பான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் உண்டு. இப்படம் முழுக்க முழுக்க குறிப்பாக கல்லூரி செல்லும் இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம். தமிழ்த் திரை உலகிற்குள் ஒரு தமிழ் திரைப்படத்தைக் கொண்டு நுழைய வேண்டும். தமிழ் பார்வையாளர்கள் என்னை ஒரு தமிழ் இயக்குநராகவே பார்க்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படும் மூன்றாவது முயற்சி.

போர்

முதலில் இப்படத்தை மலையாளத்தில் எடுக்க வேண்டும் என்று தான் எண்ணினேன். பிறகு தமிழ் மற்றும் இந்தியில் எடுத்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. எனக்கு எப்போதும் தமிழ் வார்த்தைகளின் மீதும் அந்த ஒலி வடிவங்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் ஒரு மயக்கம், காதல் உண்டு. இப்படத்தில் தமிழ் வடிவத்திற்கான வசனங்கள் மிகுந்த கவித்துவத்துவத்துடன் வந்திருப்பதாகத் தோன்றுகிறது. போர் திரைப்படத்திற்காக எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கிய நடிகர் நடிகைகள் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் ஒரு படத்தை உருவாக்கும் போது நடிகர் நடிகைகளுக்கான சிக்கல்கள் அதிகம். அதைப் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்த நடிகர் நடிகைகளுக்கும் எங்கள் தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.

இரண்டு மொழிகளிலும் இப்படம் எடுக்கப்பட்டாலும் கதையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு மொழிகளிலும் ஒரே கதை தான். அர்ஜூன் தாஸை நான் தான் ஹிந்திக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கின்ற தேவை இல்லை. அவர் ஏற்கனவே ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.

அர்ஜூன் தாஸுக்கு சண்டைக் காட்சியில் அடிபடும் போது நாங்கள் பாண்டிச்சேரியில் சூட்டிங்கில் இருந்தோம். அடிபட்டவுடன் சூட்டிங்கை நிறுத்திவிட்டு, சென்னை சென்றுவிடுவோம், ஒரு நாள் அவர் ஓய்வில் இருக்கட்டும், பின்னர் சூட்டிங்கை துவங்குவோம் என்று தான் முடிவு செய்தோம். ஆனால் அவர் என்னிடம் வந்து தனியாகப் பேசினார்.

சூட்டிங்கை நிறுத்தினால் தேவையில்லாத பண இழப்புகள் தோன்றும். எனக்கு ஒன்றும் பெரிய அடியில்லை; சூட்டிங்கை முடித்துவிட்டுத் தான் செல்கிறோம் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அவரது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது.

போர் கல்லூரி தொடர்பான கதை என்றாலும் கூட ஏன் போர் என்கின்ற தலைப்பை தேர்வு செய்தோம் என்பது சுவாரஸ்யமானது. “பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஒரு போர்க்களக் காட்சியில் சண்டைக்காட்சி இயக்குநர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வந்த தெலுங்கு நடிகர் நடிகைகளிடம் மைக்கில் ‘இது போர், போர், போர்” அந்த முகபாவனையுடன் நில்லுங்கள், இது போர் போர்” என்று சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தார். எனக்கு அது மனதில் பதிந்துவிட்டது.

உடனே என் நண்பரைக் கூப்பிட்டு அந்த டைட்டிலை பதிவு செய்யச் சொன்னேன். இரண்டு எதிர் எதிர் கதாபாத்திரத்தின் யுத்தத்திற்கு போர் என்கின்ற தலைப்பு சரியாக இருக்கும் என்று தோன்றியது என்றார்.

போர்

*நாயகன் அர்ஜூன் தாஸ் பேசும் போது…

இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த பிஜோய் நம்பியார் அவர்களுக்கு என் முதல் நன்றி. எனக்கு இப்படத்தின் கதையை ஒரு ஹோட்டலில் வைத்து தான் கூறினார். அதற்கு முன்னரே காளிதாஸ் படத்தில் புக் ஆகி இருந்தார். படப்பிடிப்பின் போது இயக்குநர் எங்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார்.

பொதுவாக இரு மொழிகளில் ஒரு படத்தின் சூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு மொழியில் நடிப்பவர்களுக்கு பிற மொழியில் எடுக்கப்பட்ட காட்சிகளைக் காட்டமாட்டார்கள்.

ஆனால் பிஜோய் எங்களுக்கு அதையும் காட்டிவிட்டு இயல்பாக நடிக்கச் சொன்னார். படத்தில் எங்கள் அனைவருக்கும் பேருதவியாக இருந்த உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. காளிதாஸ் சூட்டிங்கில் இருப்பதால் இங்கு வர முடியவில்லை. அவருக்காக நான் உங்களிடம் மன்னிப்பும் நன்றியும் கேட்டுக் கொள்கிறேன்.

போர் திரைப்படம் ஒரு கல்லூரி கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். கொண்டாட்டத்திற்கான திரைப்படம், நட்பும் படத்தில் சிறிய அளவில் இருக்கிறது. வேறு வேறு விதத்திலான உணர்வுகள் படத்தில் கொட்டிக்கிடக்கிறது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த தயாரிப்பாளர் மது சாருக்கு நன்றி. T Series குழுவினருக்கு நன்றி. பிரத்யேக உதவி புரிந்த சிகை கலைஞர்கள், ஒப்பனைக் கலைஞர்களுக்கு நன்றிகள்.

காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் டேக் செல்வதற்கு முன்பு வரை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். ரொம்பவே சேட்டை செய்வான். மற்றபடி மிகச்சிறந்த நண்பன். காளிதாஸ் உடன் சேர்ந்து நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது’ என்றார்.

போர்

Arjundass speaks about Kalidass at Por Trailer launch

More Articles
Follows