தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் ‘பொன்னியின் செல்வன் 2’.
இப்படம் உலகம் முழுவதும் நாளை ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் கைப்பற்றியுள்ளது.
FDFS காட்சிகள் நள்ளிரவு 1 மணி அல்லது அதிகாலை நேரங்களில் திரையிடப்படும்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் FDFS காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் FDFS காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் அட்வான்ஸ் புக்கிங் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி இதுவரை 17 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ponniyin selvan 2 fdfs shows canceled by tn government