‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் 3 நாள்கள் வசூல்.; PS2 – PS1 ஒப்பீடு

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் 3 நாள்கள் வசூல்.; PS2 – PS1 ஒப்பீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

‘பொன்னியின் செல்வன் 2’ படம் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இப்படம் இரண்டாம் நாளில் முடிவில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்ததாக அறிவித்தனர்.

இந்த நிலையில், 3 நாள் ஞாயிற்றுக்கிழமை, ‘பொன்னியின் செல்வன் 2’ படம் ரூ.30 கோடி மட்டுமே வசூலிக்க முடிந்தது.

‘பொன்னியின் செல்வன் 2’ படம் திரையிடப்பட்ட முதல் வாரத்தில் ரூ 200 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இப்படம் உலகம் முழுவதும் ரூ 130 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

மேலும், செப்டம்பர் 30, 2021 அன்று வெளியான இப்படத்தின் முதல் பாகமான ‘பொன்னியின் செல்வன் 1’ முதல் 3 நாட்களில் ரூ 230 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘Ponniyin Selvan 2’ Box Office third Day Collection Update

அஜித் பிறந்தநாளில் சூப்பர் ஹிட்டான ‘துணிவு’ தரும் பாடல் விருந்து

அஜித் பிறந்தநாளில் சூப்பர் ஹிட்டான ‘துணிவு’ தரும் பாடல் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் இந்த ஆண்டு 2023 ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதே நாளில் தான் விஜய் நடித்த ‘வாரிசு’ படமும் வெளியானது. இந்த இரு படங்களும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

துணிவு படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.

துணிவு

இந்த படத்தில் இடம்பெற்ற சில்லா… சில்லா… காசேதான் கடவுளடா மற்றும் கேங்ஸ்டா ஆகிய பாடல்கள் பெரும் ஹிட்டானது.

இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்த இருந்த நிலையில் இன்று மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு கேங்ஸ்டா என்ற பாடலின் வீடியோவை வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இன்று மாலை 5 மணிக்கு இந்த பாடல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

release Gangstaa Video song From Thunivu Today at 5 PM

தேனாண்டாள் முரளி தலைவரானார்.; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் முடிவுகள்

தேனாண்டாள் முரளி தலைவரானார்.; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் முடிவுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஜானகி ராமச்சந்திரன் கலைக் கல்லூரியில் நேற்று ஏப்ரல் 30ல் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு துவங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

இந்த தேர்தலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ராதாரவி, மோகன், ராமராஜன், நாசர், பாகயராஜ், பூர்ணிமா பாக்யராஜ், எஸ்.வி.சேகர், ஆர்யா, ஸ்ரீகாந்த், சசிகுமார், சின்னி ஜெயந்த் , டெல்லி கணேஷ், விக்னேஷ், விஷ்ணு விஷால், ராதிகா, இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, அமீர், ஆர்.மாதேஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.ஆர், வேல்முருகன், சித்ராலட்சுமணன், ஷக்தி சிதம்பரம், மனோஜ்குமார், திருமலை, சுரேஷ், சாலை சகாதேவன் மற்றும் தயாரிப்பாளர்கள், எஸ்.தாணு, டி.ஜி.தியாகராஜன், மோகன் நடராஜன், பிரமிட் நடராஜன், சிவசக்தி பாண்டியன், டி.சிவா, ராசாராம், கே.எஸ்.சீனிவாசன், விஸ்வா சுந்தர், பெப்சி விஜயன, கனல் கண்ணன் வெள்ளையன், புகழேந்தி, ஆர்.வி.உதயகுமார், வேதா, கருணாகரன், வெடிமுத்து, மற்றும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இதில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் , டி. மன்னன் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டனர்.

கலைப்புலி.ஜி.சேகரன், சிங்காரவடிவேலவன், ராஜேஷ்வரி வேந்தன், வைராஜாவை., ஆகியோர் சுயேச்சையாக நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட்டனர்.

இன்று (1.5.2023) காலை 9.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை துவங்குகியது. தற்போது மாலைக்குள் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிட்டது.

தேர்தல் முடிவு விவரங்கள் இதோ…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

தேர்தல் 2023 2026

தலைவர்
என்.இராமசாமி
615
வெற்றி

மன்னன்
482

செயலாளர்கள்
கதிரேசன் 651
ராதாகிருஷ்ணன் 586
இருவரும் வெற்றி

துணைத்தலைவர்கள்
தமிழ்குமரன் 537
அர்ச்சனா 485

பொருளாளர்
S. சந்திரபிரகாஷ் ஜெயின்
536
வெற்றி

இணைச்செயலாளர்
5-செளந்தரபாண்டியன்.
511
வெற்றி

என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன்
தலைமையிலான
நலம் காக்கும் அணியின்
தலைவர்
துணைத்தலைவர்கள்
செயலாளர்கள்
பொருளாளர்
இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அனைவரும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

தேனாண்டாள் முரளி

thenandal murali won in tamilnadu producer council election

விஜய் 68 பட அப்டேட் கொடுத்த ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஜீவா

விஜய் 68 பட அப்டேட் கொடுத்த ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

விஜய் இதையெடுத்து ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய்யின் அடுத்த படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இப்படத்தை நடிகர் ஜீவா தனது ஹோம் பேனரில் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘தளபதி 68’ குறித்த அப்டேட் குறித்து ஜீவாவிடம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்கள்.

கேள்விக்கு பதிலளித்த நடிகர் ஜீவா , இது விரைவில் செய்யப்படும் என்றார்.

மேலும், ‘தளபதி 68’ படத்தை ஏற்கனவே விஜய்யின் ‘பிகில்’, ‘மெர்சல்’, ‘தெறி’ படங்களை இயக்கிய அட்லி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மற்றும் அட்லி நான்காவது கூட்டணியாக ‘தளபதி 68’ இருக்கும்.

Thalapathy 68 movie update giving jiiva

‘மாமன்னன்’ போஸ்டரில் கெத்து காட்டும் உதயநிதி – பகத்பாசில் – வடிவேலு

‘மாமன்னன்’ போஸ்டரில் கெத்து காட்டும் உதயநிதி – பகத்பாசில் – வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

“மாமன்னன்” படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.

முன்னதாக இப்படத்தின் First Look போஸ்டர் மே 1 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சமூக வலைதளங்களில் போஸ்டர் கசிந்ததால் படக்குழுவினர் நேற்றே இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்.

இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் “மாமன்னன்” திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மே 1ம் தேதி மற்றொரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் உதயநிதி பகத்பாசில் வடிவேலு ஆகியோர் கெத்தாக போஸ் கொடுக்கின்றனர்.

நேற்று வெளியான போஸ்டரில் உதயநிதி கையில் வீச்சருவா வைத்திருக்க வடிவேலு துப்பாக்கி வைத்திருப்பதாக ஆக்சன் போஸ்டர் வெளியானது.

மாமன்னன் படத்தை ஜூன் மாதம் வெளியிட உதயநிதி முடிவெடுத்து அதை போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.. ஆனால் தேதியை குறிப்பிடவில்லை.

மாமன்னன்

Udhayanidhi’s Maamannan movie first look poster release

அஜித்தின் ‘விடாமுயற்சி’.: தமிழை மதிக்கும் தல..; மதிக்காத தளபதி விஜய்.?!

அஜித்தின் ‘விடாமுயற்சி’.: தமிழை மதிக்கும் தல..; மதிக்காத தளபதி விஜய்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மே ஒன்றாம் தேதி நடிகர் அஜித் தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அஜித் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் அஜித் 62 ஆவது படத்தின் தலைப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்ற பெயரிட்டு அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசையமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீப காலமாகவே அஜித் மற்றும் விஜய் படங்கள் தயாராகும்போது சூட்டிங் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகே அந்தப் படத்தின் தலைப்பை வெளியிடுவார்கள்.

ஆனால் அஜித் 62 படத்தின் தலைப்பை லைக்கா நிறுவனம் இப்போதே வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் முக்கியமாக விடாமுயற்சி என்ற தமிழ் தலைப்பை வைத்து தமிழ் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் விஜய் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான ‘பீஸ்ட்’ & ‘வாரிசு’ ஆகிய படங்களுக்கு முதலில் ஆங்கில டைட்டில் மட்டுமே வெளியானது.

வாரிசு தமிழ் தலைப்பாக இருந்தாலும் தமிழ் டிசைன் வடிவில் வெளியாகவில்லை

இந்த படங்களின் ரிலீஸ் சமயத்தில் தான் ‘பீஸ்ட்’ மற்றும் ‘வாரிசு’ தமிழ் வடிவமைப்பு வெளியானது. இது சம்பந்தமான செய்திகளை நாம் FILMISTREET தளத்தில் நாம் வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதும் கூட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் டைட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே டிசைன் வெளியானது. மேலும் ‘லியோ’ என்பது ஆங்கில சொல்லாகும்.

ஆனால் இந்த முறை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ‘லியோ’ டைட்டில் வெளியானது இங்கே கவனிக்கத்தக்கது.

Ajiths respect for Tamil language but Vijay movies never does it

More Articles
Follows