மீண்டும் ‘ரெமோ’… சிவகார்த்திகேயனுடன் பி.சி. ஸ்ரீராம்

மீண்டும் ‘ரெமோ’… சிவகார்த்திகேயனுடன் பி.சி. ஸ்ரீராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PC Sreeram with sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ரெமோ இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது.

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து விரைவில் மோகன்ராஜா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவருடன் நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்திற்கும் பி.சி.ஸ்ரீராமே ஒளிப்பதிவு செய்கிறார்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிட்டல் கேமராவிற்கு பலரும் மாறியுள்ள நிலையில், பி.சி.ஸ்ரீராம் இப்போதும் பிலிம் கேமராவில் பணி புரிகிறார்.

எனவேதான் அவரால் இந்தளவு குவாலிட்டியை கொடுக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெமோ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சியளித்த தமிழக அரசு

ரெமோ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சியளித்த தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo latest stillsஅண்மை காலமாக நமக்கு தெரியாத தமிழ் சொற்களாக இருந்தாலும், அதை தமிழ் படங்களுக்கு தலைப்பாக வைத்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்குதான்.

ஆனால் இன்று வெளியாகியுள்ள ரெமோ படத்திற்கு இச்சலுகை கிடைக்காது என சொல்லப்பட்டது.

காரணம் ரெமோ தமிழ் சொல் அல்ல என்றும் பரவலாக பேசப்பட்டது.

ஆனால் எவரும் எதிர்பாராத வண்ணம், இப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இது ரெமோ குழுவினருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

பல சமூக கருத்துக்களை கொண்ட ஜோக்கர் என்ற படத்திற்கு இச்சலுகை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோக்கர் தமிழ் வார்த்தை அல்லவே.

மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையும் ஏஆர். ரஹ்மான்

மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையும் ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and ar rahmanவிஜய் படங்களில் எப்போதும் பாடல் படு ஸ்பெஷலாக இருக்கும்.

அப்படி இருந்தும், விஜய் நடிப்பில் வெளியான உதயா மற்றும் ‘அழகிய தமிழ் மகன் ஆகிய இரு படங்களுக்கு மட்டுமே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.

அட்லி இயக்கவிருப்பதாக கூறப்படும் இப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களாம் தயாரிப்பு குழுவினர்.

எனவே, விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

பாகுபலி புகழ் எஸ்எஸ் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கான ஸ்க்ரிப்ட்டை எழுதியிருக்கிறார்

ரஜினிக்காக வழிவிட்டு ஒதுங்கும் பாலிவுட் பிரபலங்கள்

ரஜினிக்காக வழிவிட்டு ஒதுங்கும் பாலிவுட் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali rajinikanthரஜினி படம் வருகிறது என்றால், மற்ற படங்கள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு வெளியாக போவதில்லை.

கபாலி படம் ரிலீஸ் நாளன்று அறிவிக்கப்படாத விடுமுறை நாள் போலவே காணப்பட்டது.

அப்படி ஒரு எதிர்பார்ப்பு ரஜினி படத்திற்கு என்றைக்கும் இருந்து வருகிறது.

இந்நிலையில், பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கும் கோல்மால் படத்தின் நான்காம் பாகமான கோல்மால் அகையின் படத்தை இயக்க இருக்கிறார்.

இதில் அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை அடுத்த ஆண்டு 2017ஆம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தார்களாம்.

ஆனால் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தையும் தீபாவளிக்கு வெளியிடவிருப்பதை அறிந்த, இவர்கள் ‛கோல்மால் அகைன்’ படத்தின் ரிலிஸ் தேதியை தள்ளி வைத்து இருக்கிறார்களாம்.

ஆதி- சன்னி லியோன்-ரம்யா நம்பீசன் இணையும் ‘ராத்ரி’

ஆதி- சன்னி லியோன்-ரம்யா நம்பீசன் இணையும் ‘ராத்ரி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DIRECOR AADHI RAJAN WITH RAMYA NAMBEESAN 3இந்திய சினிமாவின் பிரபல நிறுவனமான ஸ்ரீ பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்து, ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை குவித்த படம் “ராகினி எம்.எம்.எஸ் 2“.

பெரும் வெற்றிப் பெற்ற இந்த ஹிந்தி படத்தை தமிழ், தெலுங்கிலும் “ராத்ரி“ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடுவதன் மூலம், தென்னிந்திய திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறது.

இப்படத்தில் கவர்ச்சி புயல் சன்னி லியோன் நடித்திருக்கிறார்.

இவர் கவர்ச்சியுடன் பயமுறுத்தும் பேயாகவும நடித்துள்ளார்.

இவருடன் சாமுராய் “புகழ் அனிதா, பர்வீன் தபாஸ், சந்தியா மிருதுல், கரண் தாலுஜா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

பூஷன் பட்டேல் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சித்ரஞ்சன் பட், மீட்பராய் அஞ்சான், யோ யோ ஹனிசிங், பிரனாய் ரிஜியா, அமர் மொஹைல் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.

இந்த படத்தில் சன்னி லியோன் நடனமாடிய “பேபி டால்“ என்ற சுப்பர் ஹிட் பாடலை இதுவரை சுமார் 8 கோடி பேர் யூடியூப்பில் பார்த்து ரசித்திருக்கின்றனர்.

ராத்ரி படத்தின் வசனங்களையும், பாடல்களையும் சிவந்தி, ரணதந்த்ரா, அதர்வணம் போன்ற படங்களின் இயக்குனரான ஆதிராஜன் எழுதியிருக்கிறார்.

இவர் எழுதிய “ஜொலி ஜொலிக்கும் டிஜிட்டல் பொண்ணு“

“தெறி தெறிக்கப் பார்த்தா ஜின்னு “ என்று தொடங்கும் ஸ்டைலிஷான (பேபி டால்) பாடலை தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகை ரம்யா நம்பீசன் கிக் ஏற்றும் குரலில் பாடியிருக்கிறார்.

ஷோபா கபூர், ஏக்தா கபூர் ஆகியோர் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர்.

sunny leone rathiri

சந்தானம், சூரி இடத்தில் விஜயகாந்த் பட இயக்குனர்

சந்தானம், சூரி இடத்தில் விஜயகாந்த் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Panam Kaaikkum Maram stillsகேப்டன் விஜயகாந்த் நடித்த ‘சுதேசி’ மற்றும் கரண் நடித்த ‘உச்சத்துல சிவா’ ஆகிய படங்களை இயக்கியவர் ஜேப்பி.

இவர் உச்சத்துல சிவா படத்தில் சிறிய வேடத்திலும் நடித்திருந்தார்.

எனவே, இப்படத்தை தொடர்ந்து, ‘பணம் காய்க்கும் மரம்’ என்கிற காமெடி படத்தை இயக்கி இதிலும் நடித்துள்ளார்.

நாயகனாக அக்(ஷ)ய் நடிக்க, நாயகிகளாக அகல்யா, அன்விகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ராஜ் குல்கர்ணி மற்றும் சோனு பாண்டே ஆகியோர் வில்லன்களாக நடிக்க, போஸ் வெங்கட், படவா கோபி, பாரதி கண்ணன், பாலு ஆனந்த், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் பிரபல இசையமைப்பாளரான எல்.வைத்தியநாதனின் மகன் L.V.கணேசன் இசையமைக்க, உச்சத்துல சிவா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஹார்முக் இதிலும் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை தொடர்ந்து ஆனந்தலிங்க குமார் இப்படத்தின் படத் தொகுப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

படத்தை தர்ஷ் ஷோ கம்பெனி தயாரிப்பில் A.ராமலிங்கம் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு ராதா ஜெயபிரகாஷ்.

இப்படம் குறித்து ஜேப்பி கூறியதாவது…

இதில் நான் ஹீரோவின் அண்ணனாக நடிக்கிறேன்.

தயாரிப்பாளர் ஏ. ராமலிங்கம் சூட்டிங் ஸ்பாட்டில் என் நடிப்பை பார்த்துவிட்டு என்னை நடிக்க இப்படத்தில் நடிக்க வற்புறுத்தினார்.

சந்தானம், சூரி போன்றவர்கள் நடிக்க வேண்டிய கேரக்டர் அது.

முதலில் தயக்கம் இருந்தாலும், அதன்பின்னர் முதல் பிரதியை பார்த்தபோது நிறைவாக செய்திருக்கிறேன் என்கிற நிம்மதி ஏற்பட்டது” என்கிறார் இயக்குனர் ஜேப்பி.

More Articles
Follows