தீபாவளியில் ‘லால் சலாம்’ டீசர்.. பொங்கலுக்கு ரிலீஸ்.; மத அரசியலைப் பேசும் ரஜினி

தீபாவளியில் ‘லால் சலாம்’ டீசர்.. பொங்கலுக்கு ரிலீஸ்.; மத அரசியலைப் பேசும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடித்து உள்ள படம் ‘லால் சலாம்’.

லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் தம்பி ராமையா, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நவம்பர் 12 தீபாவளி விருந்தாக ‘லால் சலாம்’ படத்தின் டீசர் வெளியானது.

கிரிக்கெட் போட்டி மத மோதலாக உருவாகி பெரும் கலவரம் வெடிப்பதுடன் இந்த டீசர் தொடங்குகிறது.

இந்த டீசரில் மொய்தீன்பாய் கேரக்டரில் ரஜினி பேசும் வசனங்கள் பட்டையை கிளப்புகின்றன..

“விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க… குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சுருக்கீங்க… தப்பு..” என்கிறார்.

2024 பொங்கல் தினத்தில் லால் சலாம் படம் வெளியாகிறது. இதன் வெளியிட்டு உரிமையை உதயநிதியின் ரெட்ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Rajinis Lal Salaam teaser goes viral

சைலன்டாக வந்த ‘சைரன்’ டீசர்.; கைதியாக ஜெயம்ரவி.. போலீஸாக கீர்த்தி சுரேஷ்

சைலன்டாக வந்த ‘சைரன்’ டீசர்.; கைதியாக ஜெயம்ரவி.. போலீஸாக கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் ‘சைரன்’.

இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ், அனுபமா, சாந்தினி ஆகியோர் நடிக்க யோகிபாபு, சமுத்திரகனி, அழகம் பெருமாள் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காஞ்சிபுரத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த படம் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

நாயகன் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

அரசியல், ஆம்புலன்ஸ் சேவைகளை கலந்து ஆக்சன் திரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தீபாவளி விருந்தாக சைரன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி ஜெயில் கைதியாக நடிக்க போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

பிக் பாஸ் 7 சீசனில் இந்த டீசர் வெளியிடப்பட்டது. 14 வருட சிறை தண்டனைக்கு பிறகு பரோலில் வரும் ஒரு கைதியின் கதை இது என்பது டீசரில் தெளிவாக தெரிகிறது.

விறுவிறுப்பாக செல்லும் இந்த டீசரில் ஜெயம் ரவியின் குரலும் கீர்த்தி சுரேஷின் குரலும் பின்னணியில் ஒலிக்கிறது.

டிசம்பர் மாதத்தில் ‘சைரன்’ படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jayam Ravi and Keerthy Suresh starrer Siren teaser

‘மேற்கு தொடர்ச்சி மலை – தேன்’ படங்களின் வசனகர்த்தா நடிகர் ராசீ தங்கதுரை மரணம்

‘மேற்கு தொடர்ச்சி மலை – தேன்’ படங்களின் வசனகர்த்தா நடிகர் ராசீ தங்கதுரை மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் லெனின் பாரதி இயக்கத்தில் உருவான படம் ’மேற்கு தொடர்ச்சி மலை’.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மலைவாழ் மக்களின் வாழ்வியலையும் சுமைதூக்கும் தொழிலாளர்களின் சிரமங்களையும் சினிமாத்தனம் இல்லாமல் இயக்குநர் படைத்திருந்தார்.

இளையராஜாவின் இசையும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்தது.

இதில் நாயகனாக ஆண்டனி, அவரின் மனைவியாக காயத்ரி, கம்யூனிஸ்ட் சகாவாக அபு வலையங்குலம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் வசனங்கள் இதன் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை கொடுத்தது. இந்த வசனங்களை எழுதியவர் ராசி தங்கதுரை @ தாமஸ்.

மேலும் பெரும் வரவேற்பை பெற்ற ‘தேன்’ படத்திலும் வசனம் எழுதி மருத்துவர் கேரக்டரில் நடித்திருந்தார் ராசி தங்கதுரை. இவருக்கு தற்போது 53 வயதாகிறது.

இந்த நிலையில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் நவம்பர் 13ஆம் தேதி இன்று ஆண்டிப்பட்டியில் காலமானார்.

இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dialogue writer Rasi Thangadurai passes away

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிணமாக நடித்த பிரபுதேவா.; நாயகி இவரா..?

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிணமாக நடித்த பிரபுதேவா.; நாயகி இவரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார்.

இதில் ஒரே பாடலில் பிரபுதேவா 13 கெட்டப்புகளில் தோன்றுகிறாராம். அதில் போலீஸ் ஒன்று. அந்த போஸ்டர் தான் இணையங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதில் நாயகியாக மடோனா செபஸ்டியன் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘லியோ’ படத்தில் விஜய் சகோதரியாக மடோனா நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு, ஜான் விஜய், ஆடுகளம் நரேன், மதுசூதனராவ், ரோபோ சங்கர், சாய் தீனா, எம்.எஸ்.பாஸ்கர், ரெடின் கிங்ஸ்லி, ஒய்ஜி மகேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்க கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் கவிஞர் மு ஜெகன் கவிராஜ் எழுதியிருக்கிறார். ஏற்கெனவே இவரது வரிகளில் உருவான “சீரக பிரியாணி.. என் ஜீவனே நீதாண்டி..” என்ற பாடல் பிரியாணி காதலர்கள் இடையே வைரலானது குறிப்பிடத்தக்கது.

டிரான்ஸ் இண்டியா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிட் சார்பில் எம்.ராஜேந்திர ராஜன் தயாரிக்கிறார்.

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. சக்தி சிதம்பரம் படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. எனவே இதுவும் ஒரு காமெடி திருவிழாவாக இருக்கும் என நம்பலாம்.

கமல் தயாரித்து கெஸ்ட் ரோலில் நடித்த ‘மகளிர் மட்டும்’ படத்தில் நாகேஷ் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் பிணமாக நடித்திருந்தார். பிணமாக நடித்திருந்தாலும் நாகேஷ் செய்த காமெடியை கண்டு நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது.

தற்போது அந்த பாணியில் இந்த புதிய படத்தில் பிரபுதேவா கிட்டத்தட்ட 1 மணி நேரம் பிணமாக நடித்துள்ளார் என தகவல்கள் வந்துள்ளன. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் மட்டுமே அவர் (உயிருடன்) நடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை என்றாலும் மக்கள் இந்த படத்தின் தலைப்பை தேர்ந்தெடுப்பார்கள் எனவும் விரைவில் தலைப்பு அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

மடோனா

Prabudeva and Madonna starring in Sakthi Chidambaram direction

JIGARTHANDA 2 REVIEW உங்கள் இதயத்தை திருடிவிடும் என தனுஷ் பாராட்டு

JIGARTHANDA 2 REVIEW உங்கள் இதயத்தை திருடிவிடும் என தனுஷ் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி கொண்டாட்டமாக நாளை வெளியாகிறது “ஜிகர்தண்டா 2” திரைப்படம். இப்படத்தைப் பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார் தனுஷ்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா 2 படத்தில், முதல் முறையாக வழக்கத்திற்கு மாறாக தன் தோற்றம் மேனரிசம் முதல் அனைத்தையும் மாற்றி, வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஜிகர்தண்டா படத்தின் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் எனப் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் நாளை 10.11.2023 தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தினை முன்னதாக பார்த்த நடிகர் தனுஷ், தன் சமூக வலைத்தள பக்கத்தில் இப்படத்தையும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பையும் பாராட்டிப் பதிவு செய்துள்ளார் அப்பதிவில்…

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்த்தேன். @karthiksubbaraj இன் அருமையான படைப்பு, அற்புதமான நடிப்பைத் தருவது @iam_SJSuryahக்கு வழக்கமானதாகிவிட்டது.

ஒரு நடிகராக @offl_Lawrence புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். @Music_Santhosh படத்திற்கு அழகு. கடைசி 40 நிமிடம் இந்த திரைப்படம் உங்கள் இதயத்தைத் திருடிவிடும்.

படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் தனுஷின் பதிவையொட்டி நடிகர் ராகவா லாரன்ஸ்

சகோதரரே உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. உங்களின் கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய ராகவேந்திரா ஸ்வாமியை பிரார்த்திக்கிறேன். என்று நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.

இரண்டு முன்னணி நடிகர்களின் ஈகோ இல்லாத இந்த உரையாடல்களை, ரசிகர்கள் இணையத்தில் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhanush appreciated Jigarthanda double x team

சினிமா டிக்கெட் விலை 20% உயர்வு.; ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த கலெக்டர்

சினிமா டிக்கெட் விலை 20% உயர்வு.; ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த கலெக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. புத்தாடைகள் இனிப்பு வகைகள் பட்டாசுகள் வாங்கி தீபாவளி கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

சினிமா ரசிகர்கள் புது படங்களை திரையரங்குகளில் காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

புதுப்படங்கள் என்றாலே முதல் நாள் காட்சிக்கு டிக்கெட் விலை அதிகமாக உள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக டிக்கெட் விலையை உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

தற்போது புதுச்சேரி திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது

அதன்படி ரூ. 150க்கு விற்க்கப்பட்ட பால்கனி டிக்கெட் ரூ.170 ஆகவும், ரூ.100க்கு விற்க்கப்பட்ட முதல் வகுப்பு டிக்கெட் ரு. 130க்கும், இரண்டாம் வகுப்பு ரூ. 70 லிருந்து ரூ. 100, மற்றும் மூன்றாம் வகுப்பு ரூ. 50ல் இருந்து ரூ. 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கைக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கூடுதல் தகவல்…

8-ஆண்டுகளுக்கு பின்னர் புதுச்சேரியில் சினிமா டிக்கெட் விலை 20% உயர்ந்துள்ளது. நாளை நவம்பர் 10 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்த ஜப்பான், லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் x, விக்ரம் பிரபு ஸ்ரீதிவ்யா நடித்த ரெய்டு மற்றும் காளி வெங்கட் நடித்த கிடா உள்ளிட்ட படங்கள் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Theatre cinema tickets price raised 20% in Puducherry

More Articles
Follows