தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படம் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இடையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்த படம் சமீபத்தில் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி நவம்பர் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது.
‘லியோ’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ரித்து வர்மா, பார்த்திபன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அக்டோபர் 24 ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த ட்ரெய்லரில் சட்டத்திற்கு கட்டுப்படாத ஒரு அணியை விக்ரம் தலைமையில் அமைப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நாட்டிற்கு எதிரான தீய சக்திகளை அழிப்பதாக காட்சிகள் உள்ளது. ஜான் என்ற கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார்.
“ஹே பாடு. நான் வரேன்டா…” என அவர் பேசும் வசனத்துடன் இந்த ட்ரெய்லர் முடிகிறது.
Vikram starrer Dhruva Natchathiram Trailer goes viral