விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்.; ஏன் தெரியுமா.?

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ படத்தில் பார்த்திபன் மற்றும் லியோதாஸ் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் நடிகர் விஜய்.

இந்த படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் லியோ படத்தில் பார்த்திபன் கேரக்டர் லுக்கையும் மற்றும் நடிகர் இயக்குனர் பார்த்திபனின் உண்மையான தோற்றத்தையும் இணைத்து டிசைன் செய்துள்ளனர்.

நடிகர் பார்த்திபன் லியோ பார்த்திபனாக என கேப்சன் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்து விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும் என பதிவிட்டுள்ளார் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்.

Mr Vijay fans மன்னிக்க! இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு!

பார்த்திபன்

Parthiban post about Parthibàn character in Leo

லியோ-வில் தம்மாத்துண்டு கேரக்டர்.; என்னையே மன்னிக்க முடியல.. திரைச்சித்தன் லோகி.. – மன்சூர் அலிகான்

லியோ-வில் தம்மாத்துண்டு கேரக்டர்.; என்னையே மன்னிக்க முடியல.. திரைச்சித்தன் லோகி.. – மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் வெளியான ‘லியோ’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் மன்சூர் அலிகான்.

ஆனால் லியோ படத்தில் தனக்கு சின்ன கேரக்டர் தம்மா துண்டு கொடுத்து விட்டதாக லோகேஷ் கனகராஜை மறைமுகமாக குறை சொல்லி இருந்தார் மன்சூர் அலிகான்.

தற்போது இதற்கு புது விளக்கம் அளித்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். அதன் விவரம் வருமாறு…

லோகி ஒரு திரைச் சித்தன்!
மன்சூர் அலிகான் புகழாரம்!!

யாவோரும் இன்புற்றிருக்க நினைப்பது வேயின்றி யாமொன்றறியேன் பராபரமே!.. குண்டு போட்டு மனிதம் கொல்லும் நரமாமிச பட்சிகளின் உலக அரசியல் மன அழுத்தத்தில், நேற்று மீம்ஸ் போன்று நான் போட்ட பதிவு என்னையே அதிர்ச்சியடைய வைத்தது. ‘லியோவில் தம்மாத்தூண்டு’ என்ற சொல் பதம் என்னையே நான் மன்னிக்க முடியாதவனா ஆக்கிவிட்டது.

அதற்காக லோகேஷ், அவரது குழுவினர் சக்தி, சந்தோஷ், நிமெட், கௌதம். பாலா, ராம்குமார் ஆகியோர் எவ்வளவு மெனக்கெட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். லோகி ஒரு திரைச் சித்தன்.

3000 பேரை வைத்து வேலை வாங்குகையில், இருக்கிற இடம் தெரியாமல் நாமெல்லாம் கைபேசியை வைத்து மகிழ்ச்சிக்கு பயன்படுத்துகையில், அவர் அது போன்ற உபகரணங்களை பாத்திரங்களை படைப்பதற்கு, சதா சிந்தனையுடன் தேனியைப் போன்று செயலாற்றுவது கண்டேன்.

சில பாத்திரப் படைப்புக்கள் நீட்ட குறைத்தலின் போது, நாம் ஒன்றும் செய்ய முடியாது. கேப்டன் பிரபாகரன் 15,000 அடி. ஆனால் எடுக்கப்பட்டது
ஒரு லட்சத்து பதினாயிரம் அடி!

என் வாழ்நாளில் 350’க்கு மேற்பட்ட இயக்குனர்களுடன் நான் பணியாற்றி இருந்தாலும், லோகியைப் போன்று வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்று அலட்டிக் கொள்ளாமல் குடும்பம் மறந்து, உடலை வருத்திய படைப்பாளியை பார்த்ததில்லை. நான் தம்பி விஜய்யுடன் பல படங்களில் மெயின் வில்லனாக தேவா, நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன் என அழிச்சாட்டியம் செய்திருந்தாலும், அந்த காலகட்டம் வேறு! இப்போது குடும்பம் குடும்பமாக, குழு குழுவாக திரையரங்கை திருவிழாவாக மக்களை மகிழ்விக்க பாடுபட வேண்டியிருக்கிறது.

தவறாக வசூல் காட்டி வெளியே Heena வைப்போல் பலர் குறைக்கின்றனர். நான் யதேச்சையாக பேசுவது ஊடகங்களில் பலமாக பரப்படைகிறது.

பிணியில் கிடக்கும் நம் மண்ணை மீட்க இனி தன்னலம் மறந்து அரசியல், திரைப் பணியில் என்னை அர்பணிப்பேன். என்னுடைய சொந்தப்பட படைப்பு காரணமாக லியோவில் என்னை நினைத்தபடி, உடலை வடிவமைத்து அர்பணிக்க முடியவில்லை. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். இன்றிலிருந்து சுக, தன்னலம் துறந்த மன்சூர் அலிகான் மக்களுக்காக, மண்ணின் பெருமைக்காக!

சக்சஸ் மீட்டில் நவம்பர் ஒன்றாம் தேதி சந்திப்போம்…
நெஞ்சார்ந்த நன்றிகள்!
—-மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்

Mansoor Alikhan explain for Leo movie character

நடிகர் விஜய்யுடன் இணைவது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அப்டேட்

நடிகர் விஜய்யுடன் இணைவது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ்.

இவரது இயக்கத்தில் வெளியான பீட்சா, சூது கவ்வும், இறைவி, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலம் பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதை பெற்று தந்தவர் கார்த்திக் சுப்புராஜ்.

ரஜினியின் தீவிர ரசிகரான இவர் ‘பேட்ட’ என்ற படத்தை இயக்கி 1990-களின் ரஜினியை ரசிகர்களுக்கு கொடுத்தார்.

மேலும் தனுஷ் நடிப்பில் உருவான ‘ஜகமே தந்திரம்’ மற்றும் விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

அந்த இரண்டு படங்களும் தோல்வியுற்ற நிலையில் தற்போது லாரன்ஸ் – எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் ஜிகர்தண்டா xx புரமோஷன் நிகழ்ச்சி கலந்து கொஆண்ட இயக்குநர் அப்போது நடிகர் விஜய் படத்தை இயக்குவது குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு இரண்டு கதைகளை சொன்னேன்.. அவருக்கு கதை பிடிக்கவில்லை. அவருக்கு பிடித்த கதையுடன் விஜய்யை சந்திப்பேன்” என தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

Vijay and Karthik Subbaraj movie updates

உங்களுடன் ஒப்பிடாதீர்கள்.. நீங்க தலைவர்.. மக்களுக்கு தெரியும்..; ரஜினி பதிவுக்கு அமிதாப் பதில்

உங்களுடன் ஒப்பிடாதீர்கள்.. நீங்க தலைவர்.. மக்களுக்கு தெரியும்..; ரஜினி பதிவுக்கு அமிதாப் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

ஞானவேல் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க ரஜினியுடன் பான் இந்தியா ஸ்டார்ஸ் நடித்து வருகின்றனர்.

அமிதாப், ராணா, பகத், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிப்பது குறித்து…, “33 ஆண்டுகளுக்குப் பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் லைகாவின் “தலைவர் 170” படத்தில் எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப்பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது! என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார் ரஜினிகாந்த்.

இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் நேற்று பார்த்தோம்.

ரஜினியின் இந்த பதிவுக்கு அமிதாப் பதில் அளித்துள்ளார். அவரின் பதிவில்…

“ரஜினிகாந்த் சார் நீங்கள் என் மீது மிகவும் கருணை காட்டுகிறீர்கள், ஆனால் படத்தின் தலைப்பைப் பாருங்கள், அதில் தலைவர் 170 என உள்ளது. தலைவர் என்றால்.. லீடர், ஹெட், மற்றும் சீஃப், நீங்கள் தான் லீடர், நீங்கள் தான் ஹெட், நீங்கள் தான் சீஃப். இதில் ஏதாவது சந்தேகம் இருக்கா மக்களே? என்னை உங்களுடன் ஒப்பிட முடியாது. மீண்டும் உங்களுடன் பணியாற்றுவதில் பெருமிதம்” என தெரிவித்துள்ளார் அமிதாப்பச்சன்.

அமிதாப்பச்சன்

Amitabh bachchan reply to Rajini You are Thalaivar Leader

தியேட்டர்களில் உங்களைக் கொன்ற ‘இறைவன்’ இப்போ ஓடிடி-யில் வருகிறான்

தியேட்டர்களில் உங்களைக் கொன்ற ‘இறைவன்’ இப்போ ஓடிடி-யில் வருகிறான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘இறைவன்’.

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் முக்கிய வேடங்களில் நடிகர் நரேன், விஜயலட்சுமி நடித்திருந்தனர்.

செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மோசமான விமர்சனங்களை சந்தித்தது. படத்தில் கொலை கொலை என ரசிகர்களை வச்சி செய்து இருந்தனர்.

தற்போது இந்த படத்தை ஓடிடி-யில் காணலாம் என அறிவித்துள்ளது படக்குழு.

அக்டோபர் 26-ஆம் தேதி நெட்பிளிக் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இறைவன்

Jayam Ravi and Nayanthara starrer Iraivan Ott release date

இசைக்கலைஞர்கள் செய்யும் துரோகம்.; இசையமைப்பாளர் இமான் ஓபன் டாக்

இசைக்கலைஞர்கள் செய்யும் துரோகம்.; இசையமைப்பாளர் இமான் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களாக கோலிவுட்டை மிகவும் பரபரப்பாகிய விஷயம் என்னவென்றால் இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்த துரோகம் தான்.

என் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அதை வெளியே சொல்ல முடியாது என இமான் பேசியிருந்தது சிவகார்த்திகேயனின் மீதான இமேஜை ரசிகர்கள் மத்தியில் முற்றிலும் டேமேஜ் செய்துள்ளது.

இந்த நிலையில் மற்றொரு துரோகம் குறித்து பேசி உள்ளார் இசையப்பாளர் இமான்.

இவரது சமீபத்திய பேட்டியில்.. “இசை கலைஞர்கள் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். சிலர் பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கின்றனர்.

பெரும்பாலான மேடைக் கச்சேரிகளில் இசைக்கலைஞர்கள் முழுவதுமாக பாடுவது கிடையாது. பின்னணியில் அந்தப் பாடல் ஒலிக்கும் போது அவர்கள் வாயை மட்டும் அசைப்பார்கள். இது அந்த நிகழ்ச்சியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இசை கலைஞர்கள் செய்யும் துரோகம்” என பேசி உள்ளார் இமான்.

Live Music Concert issue Imman open talk

More Articles
Follows