மிஷ்கினுக்கு என்னாச்சு.. ஆபிஸ்ல வெய்ட் பண்ண வச்சிட்டாங்க – சசி

மிஷ்கினுக்கு என்னாச்சு.. ஆபிஸ்ல வெய்ட் பண்ண வச்சிட்டாங்க – சசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதித்யா இயக்கத்தில் விதார்த் – பூர்ணா நடித்துள்ள படம் ‘டெவில்’.

இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஆகிறார் இயக்குநர் மிஷ்கின்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் வின்சென்ட் செல்வா பேசும் போது..

“யூத் படப்பிடிப்பில் இருக்கும் போது மிஷ்கின் என்னை வந்து சந்தித்தார். அப்பொழுது அவர் ஒரு கேசட்டை கொடுத்தார், அந்த கேசட்டில் 15 டியூன்கள் இருந்தன. அதை கேட்கும் போது ராஜா சாரின்

டியூன்கள் போலவே இருந்தது. இன்று டெவில் இசை வெளியீட்டில் கேட்ட பாடல்களும் இளையராஜா சாரின் பாடல்கள் போல் தான் இருக்கின்றது. மிஷ்கின் இளையராஜாவின் தீவிரமான ரசிகர். இசை குறித்த நல்ல ஞானம் மிஷ்கினுக்கு உண்டு. எந்த இடத்தில் இசை வரக்கூடாது என்பது எடிட்டர் லெனினுக்கு நன்றாகத் தெரியும். அவருக்கு அடுத்து அதை சரியாக புரிந்து வைத்திருப்பது மிஷ்கின் தான். அவரின் இந்த புதிய முயற்சியும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.” என்று பேசினார்.

தயாரிப்பாளர் தாணு பேசும் போது…

“இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த டிரைலரை பார்க்கும் போதே அதன் தரம் என்ன என்பதும், அதற்கு பின் இருக்கும் அவர்களின் உழைப்பையும் அறிய முடிகிறது. அவர்களின் உழைப்பைப் பார்த்து நான் உச்சி முகர்ந்தேன்.

எனக்கு தெரிந்த விநியோகஸ்தர்களிடம் படம் சிறப்பாக வந்திருக்கிறது, வாங்கி வெளியிடுங்கள் என்று சிபாரிசு செய்தேன். மிஷ்கின் எந்தவொரு விசயத்தை எடுத்துக் கொண்டாலும் நன்றாக ஆலோசித்து அந்த விசயத்தை ஊன்றி கவனித்து அதைப் பற்றி தெரிந்த பின்னரே அதில் இறங்குவார். அந்த வகையில் இந்த புதிய துறையிலும் அவர் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்” என்று பேசியுள்ளார்.

இயக்குநர் பூ சசி பேசும் போது…

நான் எப்பொழுதெல்லாம் ஆர்.ஏ.புரத்தை கடந்து செல்கின்றேனோ அப்பொழுதெல்லாம் மிஷ்கினின் அலுவலகத்திற்கு செல்வது வழக்கம். அப்படி போகும் போதெல்லாம் உடனடியாக மிஷ்கினை சந்தித்து விடுவேன்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் செல்லும் போது உதவி இயக்குநர்கள் என்னை வழக்கத்திற்கு மாறாக காத்திருக்கச் சொன்னார்கள். சிறிது நேரம் கழித்து மிஷ்கினின் அறைக் கதவை திறக்கும் போது உள்ளிருந்து தபேலா இசைக்கும் சத்தம் வந்தது.

நான் மிஷ்கினை இவனுக்கு என்ன ஆயிற்று என்பது போல் தான் பார்த்தேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.

இயக்குநர் கருணாகரன் பேசும் போது…

நானும் இயக்குநர் கதிர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவன் தான். இப்படி ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை நான் பார்த்ததே இல்லை. இசையமைப்பாளரே தன் திறமையை நம் கண்முன் நிருபித்திருக்கிறார்.

இப்படம் வெற்றி அடைய வேண்டும் என்று படத்தின் இயக்குநர் ஆதித்யா மற்றும் இயக்குநர் மிஷ்கின் ஆகியோருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

I dont know what happen to Mysskin says Sasi

மிஷ்கின் டெவில்தான்.. என் அசிஸ்டென்ட் மிஷ்கின் – வெற்றிமாறன் பேசிட்டே இருப்பாங்க – கதிர்

மிஷ்கின் டெவில்தான்.. என் அசிஸ்டென்ட் மிஷ்கின் – வெற்றிமாறன் பேசிட்டே இருப்பாங்க – கதிர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.

‘சவரக்கத்தி’ படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் போது, ”இந்த உலகத்தில் இருக்கிற எல்லா விசயங்களையும் குறித்து கருத்து சொல்பவன் நான், ஆனால் ஒன்றைக் குறித்துப் பேச மட்டும் எனக்குத் தகுதியில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக இசை குறித்துத்தான். ஏனென்றால் எனக்கு இசையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஒரு பாமரனாக இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களும், பின்னணி இசையும் எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த டெவில் இசையமைத்திருக்கும் இப்படம் மாபெரும் வெற்றியை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.

எழுத்தாளர் தேவி பாரதி பேசும் போது, “எனக்கு கொஞ்சம் உடல்நலம் சரியில்லை. நான் பல ஆண்டுகளாகவே இலக்கியத்தில் இருந்து வருகிறேன். நாவல், சிறுகதை, கட்டுரை போன்றவற்றை எழுதி இருக்கிறேன். காலச்சுவடு பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணியாற்றினேன். இப்பொழுது உடல்நிலை சரியில்லை என்பதால் என்னால் அதிகமாகப் பேச முடியவில்லை. விரைவில் நான் உடல்நலம் சரியாகி வருவேன். அதற்குப் பிறகு திரைப்படங்கள் எனக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறேன். ” என்று பேசினார்.

இயக்குநர் மிஷ்கினுக்கு குருவாக இருந்து இசை கற்றுத் தரும் இசை மேதை பீம்சென் ஜோஷி அவர்களின் சிஷ்யரான 90 வயது நிரம்பிய இசை பண்டிதர் ராமமூர்த்தி அவர்கள் பேசும் போது…

”இன்று காலையில் கூட நாங்கள் இருவரும் சேர்ந்து இரண்டரை மணி நேரம் பயிற்சி செய்தோம். ஸ்வாதி சிந்து என்னும் ஒரு புதுவகையான ராகத்தை இரண்டு ராகங்களை கலந்து நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம்.

நான் 53 வருட காலமாக குறைந்தது 10000 நபர்களுக்கு இசை கற்று கொடுத்திருப்பேன். சைந்தவி, விஜய் பிரகாஷ் ஆகியோர் எனது மாணவர்கள் தான்… ஆனால் என்னுடைய சிறந்த மாணாக்கன் என்றால் அது மிஷ்கின் என்று தான் சொல்வேன். ஏனென்றால் ஒரு நாளில் எட்டரை மணி நேரம் பயிற்சி செய்கிறான்.

நான் போன் செய்தால் பேசுவது இல்லை, அவன் பயிற்சி செய்யும் ஓசை தான் கேட்கிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் வேலை செய்தால், இசை தானாகவே வரும். அது மிஷ்கினுக்கு நடந்திருக்கிறது. என்னுடைய சிறந்த மாணவனின் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பேசினார்.”

இயக்குநர் கதிர் பேசும் போது…

“உண்மையாகவே மிஷ்கின் ஒரு டெவில் தான், ஏனென்றால் என்னிடம் பணியாற்றும் போது பேய்த்தனமாக அசுரத்தனமாக வேலை செய்வான். எல்லா உதவி இயக்குநர்களும் தூங்கிவிடுவார்கள். மிஷ்கினும் வெற்றிமாறனும் மட்டும் பேசிக் கொண்டே இருப்பார்கள். Casual Affair புத்தகத்தைப் பற்றி விடியவிடிய பேசிக் கொண்டு இருந்திருக்கிறோம். அதை மிஷ்கின் குறைந்தது 25 முறையாவது படித்திருப்பான். அவனுக்கு இப்பொழுது இசை பைத்தியம் பிடித்திருக்கிறது. கண்டிப்பாக ஒரு இயக்குநராக வெற்றி பெற்றதைப் போல் ஒரு இசையமைப்பாளராகவும் மிஷ்கின் வெற்றி பெறுவான் என்று நம்புகிறேன். மிஷ்கினுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

Mysskin is really Devil says Director Kathir

40 குழந்தைகளுடன் ‘பிக்பாஸ்’ பாலாஜியை ஆசையாக அழைக்கும் மஹானா

40 குழந்தைகளுடன் ‘பிக்பாஸ்’ பாலாஜியை ஆசையாக அழைக்கும் மஹானா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா எஸ்பிஆர் தயாரிக்கும் திரைப்படம் “வா வரலாம் வா”. தயாரிப்பாளர் எஸ்பிஆர், இயக்குநர் எல்.ஜி. ரவிசந்தர் உடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் நடித்த மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார்.

வில்லனாக “மைம்” கோபி நடிக்க, முதன்மையான கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லீ, காயத்ரி ரேமா நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் நடிகை சிங்கம்புலி, சரவண சுப்பையா,தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், பிரபாகரன், யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட மேலும் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். முக்கியமாக இந்த படத்தில் 40 குழந்தைகளும் நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளராக தேனிசைத்தென்றல் தேவா, ஒளிப்பதிவாளராக கார்த்திக் ராஜா, எடிட்டராக ராஜா முகமது, நடன இயக்குநராக நோபல், சண்டை பயிற்சியாளராக இடிமின்னல் இளங்கோ என பிரபலமானவர்களே பணியாற்றி உள்ளனர்.

ஏற்கனவே ‘வா வரலாம் வா’ படத்தின் First Look வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.

அதன்படி “வா வரலாம் வா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை, படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.ஜி,எஸ் கிரியேட்டிவ் மீடியா தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் தேதி “வா வரலாம் வா” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக பாடல்கள் வெளியீட்டு விழாவும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

Bigg Boss Balaji and Mahana starring Va Varalam Va

நான் லீனியர் முறையில் உருவான ‘ரெய்டு’.. – விக்ரம் பிரபு

நான் லீனியர் முறையில் உருவான ‘ரெய்டு’.. – விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி இயக்கத்தில் முத்தையா வசனத்தில் விக்ரம் பிரபு – ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் ‘ரெய்டு’.

நவம்பர் 10ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் பங்கேற்ற நடிகை ஸ்ரீதிவ்யா.. “‘ரெய்டு’ படம் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். ‘மருது’ படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்”.

நடிகர் விக்ரம் பிரபு…

” நெகட்டிவிட்டியை வைத்துதான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைதான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்‌ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குநர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார்” என்றார்.

Raid based on Non linear method says Vikram Prabu

முத்தையா மாமா.. விக்ரம் பிரபு அண்ணா..; ‘ரெய்டு’ கார்த்திக் கலகல

முத்தையா மாமா.. விக்ரம் பிரபு அண்ணா..; ‘ரெய்டு’ கார்த்திக் கலகல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி இயக்கத்தில் முத்தையா வசனத்தில் விக்ரம் பிரபு – ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் ‘ரெய்டு’.

நவம்பர் 10ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் பங்கேற்ற இயக்குநர் கார்த்தி…

“இது என்னுடைய முதல் படம். இந்த சந்தோஷத்தைக் கொடுத்த முத்து மாமாவுக்கு நன்றி. விக்ரம் பிரபு எனக்கு அண்ணன் போல. அந்த அன்பு கடைசி வரை இருக்கும். ஸ்ரீதிவ்யா சிரித்த முகமாகவே இருப்பார். என்னை நம்பி இந்தப் படத்திற்குள் வந்த அனைவருக்கும் நன்றி. படம் 10ஆம் தேதி வெளியாகிறது”.

இயக்குநரும் இந்தப் படத்தின் வசனகர்த்தாவுமான முத்தையா, “‘கொம்பன்’, ‘மருது’ போன்ற மண் சார்ந்த படங்களை முடித்துவிட்டு சிட்டி சார்ந்த ஒரு கதை எடுப்போம் என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கையை என் மீது கொடுப்போம் என ‘ரெய்டு’ படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை வாங்கினேன். அந்த சமயத்தில் ‘டாணாக்காரன்’ நல்ல ரீச் இருந்தபோது விக்ரம் பிரபு சாரிடம் படம் காட்டி கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். என் தங்கச்சி பையன் சின்சியராக செய்திருக்கிறான். என் பெயருக்காக இதில் பல பேர் வந்திருப்பது மகிழ்ச்சி. ‘ரெய்டு’ படம் நன்றாக வந்திருக்கிறது. தீபாவளிக்கு நல்லபடியாக வெற்றி பெற வேண்டும்”.

Muthuaiya uncle Vikram Prabu Anna says Karthi

நம் நாட்டை கீழான நிலையில் இருந்து மீட்க கலைஞர்கள் தேவை – வேலு பிரபாகரன்

நம் நாட்டை கீழான நிலையில் இருந்து மீட்க கலைஞர்கள் தேவை – வேலு பிரபாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி இயக்கத்தில் முத்தையா வசனத்தில் விக்ரம் பிரபு – ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் ‘ரெய்டு’.

நவம்பர் 10ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் பங்கேற்ற இயக்குநர் வேலு பிரபாகரன்…

“இந்தப் படத்தில் இயக்குநர் கார்த்திக், விக்ரம் பிரபு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. என்னை ஒரு இயக்குநராக அறிமுகப்படுத்தியதில் நடிகர் பிரபுவுக்கு முக்கிய பங்குண்டு. அப்படியானவரின் மகனுடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த நாட்டை கீழான நிலையில் இருந்து மீட்க கலைஞர்கள் முக்கியம். சாதி ஒழிப்பு, சனாதனத்தை கலை மூலம் முன்னெடுக்க வேண்டும். வாய்ப்புக்கு நன்றி”.

நடிகர் கண்ணன் பொன்னையா..

” முத்தையா சாரின் வசனத்தில் நடித்தது எனக்கு பெருமை. இயக்குநர் கார்த்தி சின்ன பையனாக இருந்தாலும் சிறப்பாக வேலை பார்த்துள்ளார். சூர்யாவுக்கு ‘காக்க காக்க’ போல, விக்ரமுக்கு ‘சாமி’ போல, விக்ரம் பிரபுவுக்கு ‘ரெய்டு’ ஒரு பிராண்டாக அமையும்”.

நடிகர் செல்வா…

“‘வலிமை’ படத்தில் இருந்து தொடர்ந்து நான்காவது போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என் அப்பாவுக்காக போலீஸ் கதாபாத்திரங்கள் செய்வேன். போலீஸ் பற்றி நிறைய நெகட்டிவான விஷயங்கள் வருகிறது. அவர்கள் பற்றி நல்லது வைரல் ஆவதில்லை. அப்பாவின் நினைவாக என் சம்பளத்தில் இருந்து சில நல்ல விஷயங்கள் செய்ய இருக்கிறேன். ரெய்டு படம் வெற்றி பெற வாழ்த்துகள்”.

நடிகை அனந்திகா..

” இது எனக்கு முதல் படம். நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

Velu Prabakaran speech at Raid audio launch

More Articles
Follows