தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆதித்யா இயக்கத்தில் விதார்த் – பூர்ணா நடித்துள்ள படம் ‘டெவில்’.
இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஆகிறார் இயக்குநர் மிஷ்கின்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் விதார்த் பேசும் போது…
“நான் முதலில் மிஷ்கின் சார் படத்தில் தான் நடிக்க அழைக்கிறார்கள் என்று தான் போனேன். ஆனால் அங்கு போன பிறகு தான் இயக்குநர் ஆதித்யா என்பதே தெரிந்தது.
இப்படத்தில் நடித்து முடித்தப் பின்னர் தான் இப்படம் என் வாழ்நாளில் ஒரு மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. எனவே இப்படி ஒரு அருமையான வாய்ப்பு கொடுத்த மிஷ்கின் சாருக்கு நன்றி. ஆதித்யா உண்மையாகவே அருமையான ஒரு இயக்குநர். அதைவிட மிகச்சிறந்த நடிகரும் கூட, என்னிடம் பிரமாதமாக நடித்துக் காட்டியிருக்கிறார். மிஷ்கின் சாரின் இயக்கத்தில் நடிக்க முடியவில்லை என்றால் கூட, அவரது இசையில் நடித்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. ” என்று பேசினார்.
நடிகர் வசந்த் ரவி பேசும் போது…
இந்த மேடையில் நானும் இருப்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. நான் இங்கு வந்திருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான். அது மிஷ்கின் சார் மீது எனக்கு இருக்கும் அன்பு தான். அவர் எப்போதுமே மனதில் இருந்து பேசுவார். உண்மையாக என்ன நினைக்கிறாரோ அதை மட்டுமே பேசுவார்.
இந்த நட்பு, தரமணி படத்தின் படப்பிடிப்பின் போது துவங்கியது. ராக்கி படத்தில் அவரோடு இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. கடைசி நிமிடத்தில் அது நடக்கவில்லை. கூடிய விரைவில் இருவரும் சேர்ந்து நடிப்போம் என்று நம்புகிறேன். இது போன்ற அன்புடன் கூடிய அண்ணன் தம்பியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.
Devil is important movie for me says Vidharth