ஆடு-மாடு நாங்க பாத்துக்குறோம்..; பீட்டா மீது பாண்டிராஜ் பாய்ச்சல்

ஆடு-மாடு நாங்க பாத்துக்குறோம்..; பீட்டா மீது பாண்டிராஜ் பாய்ச்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pandirajகடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி , 2D ராஜ் சேகர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து , இளவரசு , ஸ்ரீமண் , மனோஜ் குமார் , நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு , பானு ப்ரியா , மௌனிகா , ஜீவிதா , இந்துமதி , கலை இயக்குனர் வீர சமர் , எடிட்டர் ரூபன் , இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசியது :-

படத்தின் துவக்கத்தில் கார்த்தி சார் என்னுடைய கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பாரா என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது.

அவருடன் பயன் செய்ய ஆரம்பித்ததும் எல்லாம் சரியாக இருந்தது. யாரோ நான் நடிகர்களோடு கோபமாக இருப்பேன் என்ற புரளியை கிளப்பியுல்லார்கள்.

அது சுத்த பொய். படத்தில் இடம்பெற்ற ரேக்ளா ரேசை ரசிகர்கள் அனைவரும் ரசித்து கொண்டாடுகிறார்கள். அதை படத்தில் கொண்டுவர நானும் ராஜா சாரும் மிகவும் சிரமப்பட்டோம் என்பது தான் உண்மை.

பீட்டாவை சேர்ந்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள்.

எங்கள் ஆடு , மாடுகளை நாங்கள் அண்ணன் , தம்பியாக பார்த்து வருகிறோம். நானும் ஆடு , மாடு மேய்த்து வந்தவன் தான்.

எங்களை விட சிறப்பாக அவர்களை யாராலும் பார்க்க முடியாது. உங்களால் ஆட்டை அல்லது மாட்டை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓட்டி கூட்டி செல்ல முடியுமா ? கண்டிப்பாக முடியாது ?

அப்படி உங்களுக்கு என்ன அக்கரை எங்களுக்கு இல்லாதது ? நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எங்கள் ஆடுமாடுகளை. நீங்கள் யாரும் கவலை பட வேண்டாம்.

ஒரு கல்யாணவீட்டுக்கு சென்றால் கூட நாங்கள் மாடு சாப்டாம இருக்குமே , தண்ணி வைக்கனுமே என்று ஓடி வருவோம் அவர்களை கவனிக்க ? மட்டன் , சிக்கன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு இது எப்படி தெரியும்”

நல்ல படம் ஓடும் தியேட்டரில் மல்லி பூ வாசம் வீசும்..: கார்த்தி பெருமிதம்

நல்ல படம் ஓடும் தியேட்டரில் மல்லி பூ வாசம் வீசும்..: கார்த்தி பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthiகடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி , 2D ராஜ் சேகர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து , இளவரசு , ஸ்ரீமண் , மனோஜ் குமார் , நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு , பானு ப்ரியா , மௌனிகா , ஜீவிதா , இந்துமதி , கலை இயக்குனர் வீர சமர் , எடிட்டர் ரூபன் , இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் கார்த்தி பேசியது..

நிறைய பேர் நல்ல படம் ஜெயப்பதில்லை என்று சொல்கிறார்கள் ஆனால் அது பொய். நிஜமாகவே நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக ஓடும்.

திரையரங்கில் மல்லி பூ வாசம் மற்றும் குழந்தைகள் அழும் சத்தம் கேட்கிறது என்று சொல்லும் போது படத்துக்கு அனைவரும் குடும்பத்தோடு வருகிறார்கள் என்று தெரிகிறது.

நாங்கள் ஸ்டாப் என்ற அமைப்பை தற்போது உருவாக்கியுள்ளோம்.

இதன் மூலம் வைட் சுகரை எப்படி நிறுத்துவது , நாம் கம்மியாக உபயோகிக்கும் மஞ்சளை எப்படி நமது தினசரி வாழ்கையில் எடுத்து வருவது என்பதை பற்றி ( தினமும் நாம் உண்ணும் உணவில் மஞ்சள் சேர்த்தால் கேன்சர் வராது ), எப்படி நாம் தினமும் உண்ணும் காய்கறிகளிலிருந்து என்னை எடுத்து உபயோகிப்பது மற்றும் தானியங்களின் முக்கியத்துவும் பற்றி இந்த அமைப்பு மக்களிடம் கொண்டுசேர்க்கும் என்றார் கார்த்தி.

விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி; 5 விவசாயிகளுக்கு 10 லட்சம்; சூர்யா வழங்கினார்!

விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி; 5 விவசாயிகளுக்கு 10 லட்சம்; சூர்யா வழங்கினார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaகடைக்குட்டி சிங்கம் பட வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி, 2D ராஜ் சேகர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன், சூரி, மாரிமுத்து, இளவரசு, ஸ்ரீமன், மனோஜ் குமார், நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு , பானு ப்ரியா , மௌனிகா , ஜீவிதா , இந்துமதி , கலை இயக்குனர் வீர சமர் , எடிட்டர் ரூபன் , இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் சூர்யா பேசியது…:-

“ எல்லா புகழும் இறைவனுக்கே “ இயக்குநர் பாண்டிராஜை தவிர இப்படத்தை யாராலும் சிறப்பாக எடுத்து வெற்றி படமாக இதை கொடுத்திருக்க முடியாது.

பிளாக் பஸ்டர் மேடையை நான் பார்த்ததே வெகுநாளாகிவிட்டது.

இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த படம் சினிமாவின் மூலம் கண்டிப்பாக நல்ல செய்திகள் பலவற்றை சொல்ல முடியும் என்று நிருபித்துள்ளது.

இங்கே நமது தமிழ் நாட்டில் நிறைய டாக்டர்கள், என்ஜினியர்கள் என்று பலர் உள்ளனர்.

ஆனால் ஒரு விவசாயியை கொண்டு வருவது கடினமான ஓர் விஷயமாக உள்ளது.

இந்த படம் வெற்றி பெற்றதுக்கு முக்கியமான காரணம் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்பு தான்.

எங்களை விட அதிகமாக வேர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான். அதனால் தான் ரூபாய் ஒரு கோடியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.

எல்லோரும் கமர்ஷியலாக படமெடுக்கட்டும் ஆனால் நாங்கள் 2டி மூலம் மக்களுக்கு கருத்து சொல்லும் value based entertainment படங்களை தான் எடுப்போம்” என்றார் சூர்யா.

காட்டை அழித்து ரோடு போடும் பணக்கார்ர்கள் கடைக்குட்டி சிங்கத்தை பார்க்கனும் – சத்யராஜ்

காட்டை அழித்து ரோடு போடும் பணக்கார்ர்கள் கடைக்குட்டி சிங்கத்தை பார்க்கனும் – சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathyarajசூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம்.

பாண்டிராஜ் இயக்கிய இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தின் வெற்றி விழாவில்
நடிகர் சத்யராஜ் பேசியது..

இந்த படத்தை முதலில் மக்கள் மீது அக்கரைக்கொண்டு நாட்டை பாதுக்காக்கிறோம் என்றும் , சொகுசாக தாங்கள் செல்ல மரங்களை வெட்டி சாலை அமைக்கும் குழுக்களுக்கு படத்தை முதலில் போட்டு காட்ட வேண்டும்.

இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 2D நிறுவனம் விவசாயிகளுக்கு உதவியுள்ளது தான்.

படத்தில் நாங்கள் அனைவரும் ஒருவருக்குஒருவர் போட்டி போட்டு நடித்தோம்.

படத்தில் எல்லோருக்கும் நன்றாக நடிக்க ஸ்கோப் இருந்தது.

நான் முதலிலிருந்து கூறியது போலவே இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதுள்ளது.” என்று பேசினார்.

சூப்பர் மார்க்கெட்டால் அழியும் *பெட்டிக்கடை*; வாத்தியாராக நடிக்கிறார் சமுத்திரக்கனி

சூப்பர் மார்க்கெட்டால் அழியும் *பெட்டிக்கடை*; வாத்தியாராக நடிக்கிறார் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samuthirakaniலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு
” பெட்டிக்கடை ” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார்.

சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார்.

இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார்.
கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார்.

இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதா நாயகியாக நடிக்கிறார்.

மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத், ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – அருள், சீனிவாஸ் / இசை – மரியா மனோகர்
பாடல்கள் – நா.முத்துக்குமார், சினேகன், இசக்கிகார்வண்ணன்
நடனம் – வின்செண்ட் விமல் / ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ் /
கலை – முருகன் / தயாரிப்பு மேற்பார்வை – செல்வம்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் – இசக்கி கார்வண்ணன்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்.

நாம் ஒவ்வொரு தெருவிலும் பார்க்கும் பெட்டிக்கடைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்பட வைக்கும் காரணிகள்.

ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவர் எந்த சாதிக்காரர்களாக இருந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அன்பாக ” அண்ணாச்சி
” பாய்” “செட்டியார்” என்று எதோ ஒன்றை சொல்லி அழைப்போம்.

அந்த தெருவில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு அந்த கடைக்காரரும் ஒரு அங்கமாக இருப்பார்.

வியாபாரி வாடிக்கையாளர் என்பதை மீறி ஒரு உறவு சங்கிலி இருக்கும்.

இந்த சங்கிலியை அறுத்து எறிந்தது கார்ப்பரேட் முதலாளிகள்.
சாதாரண பெட்டிக்கடையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் குறைந்த அளவு கொள்முதல் செய்து உடனே விற்று விடுவதால் யாருடைய சுகாதாரமும் பாதிப்படைவதில்லை.

ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்த மாக கொள்முதல் செய்து மெதுவாக விற்பனை செய்வதால் சுகாதார சீர் கேடு.

இது புரியாமல் ஆடம்பர மோகம் கொண்டவர்களால் எப்படியெல்லாம் பெட்டிக்கடை உறவு சங்கிலி அறுபட்டது என்பதையும் கார்ப்பரேட் அட்டூழியத்தையும் தோலுரித்து காட்டும் படமே பெட்டிக்கடை.

படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

விரைவில் இசை வெளியீட்டு விழா நடை பெற உள்ளது என்றார்.

எம்ஜிஆர் மனைவியாக ரித்விகா; 5 பிரபலங்கள் இசையமைக்கின்றனர்.

எம்ஜிஆர் மனைவியாக ரித்விகா; 5 பிரபலங்கள் இசையமைக்கின்றனர்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress rythvikaபெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்’என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் வாழ்க்கை வரலாற்றினை மாபெரும் பொருட்செலவில் ‘எம். ஜி. ஆர்’ எனும் பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது .

இத்திரைப்படத்தில் எம்.ஜி .ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதிஷ் குமார் எம். ஜி. ஆர் வேடத்தில் நடிக்கிறார் .

எம். ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாராக ரித்விகாவும், M .R . ராதாவாக பாலாசிங், இயக்குநர் பந்துலுவாக Y .G மகேந்திரன், எம். ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடகக் கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை எட்வின் சகாய் கையாள படத்தொகுப்பை அகமது கவனிக்கிறார்.

எம் . ஜி . ஆர் தனது திரைப்படத்தில் கதைக்கும் தனது கதாபாத்திரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போன்றே படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.

அதனால்தான் அவரது பாடல்கள் இன்றும் சாகாவரம் பெற்று மக்களின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதே போன்றே இத்திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களும் இருக்க வேண்டும் என்பதால் எம். ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்களான கவிஞர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், மற்றும் கவிஞர் பூவை செங்குட்டுவன் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு பெரும்பாலான பாடல்களை எழுதியுள்ளனர் .

இப்படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளனர்.

அடுத்த வாரம் இத்திரைப்படத்தின் ‘டீசரை’ வெளியிட உள்ளதாக ‘எம். ஜி. ஆர்’ திரைப்படத்தின் இயக்குனர் , தயாரிப்பாளர் அ. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். .

சென்ற ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பினை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows