முதல் படம் தோல்வி.. 2வது படம் சூப்பர் ஹிட்.. 3வது படம் பான் இந்தியா.; பிரகாசிக்கும் பிரசாந்த்

முதல் படம் தோல்வி.. 2வது படம் சூப்பர் ஹிட்.. 3வது படம் பான் இந்தியா.; பிரகாசிக்கும் பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர் பிரசாந்த்.

தன் முதல் படத்தை இயக்கும் போதே தன் குருவின் பெயரையும் தன் பெயரோடு இணைத்துக் கொண்டு படத்தை இயக்க ஆரம்பித்தார்.

ஜீ.வி.பிரகாஷ் நடித்த ‘புரூஸ்லீ’ படத்தை இயக்கினார் பிரசாந்த் பாண்டிராஜ். இந்த படம் படுதோல்வியை தழுவியது என படக்குழுவினரே ஒத்துக் கொண்டனர்.

இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரசாந்த் இயக்கிய வெப் சீரிஸ் ‘விலங்கு’.

விமல், இனியா, பாலசரவணன், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, ரவி உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்த கிரைம் திரில்லர் தொடரை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்திருந்தார்.

இந்த தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பட்டித்தொட்டி எங்கும் இது பற்றியே பேசப்பட்டது.

தற்போது பிரசாந்த் பாண்டிராஜ், தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் பான் இந்தியா படத்தை இயக்க போகிறாராம்.

இதனை அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க இருக்கிறார் எனவும் தற்போது அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Director Prasanth Pandirajs next movie Pan India movie

Breaking சால்ட் & பெப்பர் லுக்கில் மாஸ் ரஜினி.; ‘ஜெயிலர்’ சூட்டிங்கை சென்டிமெண்ட் ஸ்பாட்டில் தொடங்கிய நெல்சன்

Breaking சால்ட் & பெப்பர் லுக்கில் மாஸ் ரஜினி.; ‘ஜெயிலர்’ சூட்டிங்கை சென்டிமெண்ட் ஸ்பாட்டில் தொடங்கிய நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் 169 படமாக உருவாகிறது ‘ஜெயிலர்’. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்படுகிறது. எனவே பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதில் ரஜினியுடன் , பிரியங்கா மோகன் , ரம்யா கிருஷ்ணன் , சிவராஜ் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கை இன்று தன் சென்டிம்மெண்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் தொடங்கியுள்ளார் நெல்சன்.

அதாவது தன்னுடைய வெற்றி படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை ராயப்பேட்டையில் தான் தொடங்கினார் நெல்சன்.

அதே இடத்தில் இன்று ஜெய்லர் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார்.

இன்றைய ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் நடந்து வருவது போல காட்சிகளை படமாக்க உள்ளனர்.

இதன் பின்னர் புனே மற்றும் ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

புனேவில் ஒரு பழமையான சிறைச்சாலை உள்ளது. அதில் படத்தின் முக்கியமான காட்சிகளை எடுக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ள.

இதில் ஜெயிலருக்கே உரிய கம்பீரமான தோற்றத்தில் ரஜினிகாந்த் நடந்து வருவது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் கண்ணாடி அணிந்தபடி வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரஜினி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரல் ஆக்கி வருகின்றனர்.

அடுத்த ஆண்டு 2023 கோடை விடுமுறையில் ஜெயிலர் படத்தை தியேட்டர்களில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Jailer shooting updates Rajinikanth First look goes viral

தாடி வைத்தவர்கள் சோம்பேறின்னா.. அப்போ மோடி – அமித்ஷா.? ‘டைட்டில்’ விழாவில் ராதாரவிக்கு பேரரசு கேள்வி

தாடி வைத்தவர்கள் சோம்பேறின்னா.. அப்போ மோடி – அமித்ஷா.? ‘டைட்டில்’ விழாவில் ராதாரவிக்கு பேரரசு கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜித் அவர்கள் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ டைட்டில் ‘ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, பிரபல நட்சத்திரங்கள் முன்னிலையில், நேற்று பிரசாத் ஸ்டுடியோவில் நடைப்பெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு வந்த அனைவருக்கும் தனது நன்றியை பதிவு செய்தார்.

பின்பு பேசிய R K சுரேஷ்… “ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பதனையும், குறிப்பாக ஒரு சிறிய படத்தினை விளம்பரம் செய்து திரையரங்கில் வெளியிடுவது என்பது சுலபமான விஷயம் அல்ல என்பதனையும் பதிவு செய்தார்.

மேலும் தனது வேண்டுக்கோளாக படத்தில் நடிக்கும் நடிகர்களை அந்த படத்தின் விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும்” என்றார்.

மைம் கோபி படத்தின் பெயரே டைட்டில் என்பதனால் பெயருக்கான அர்த்தம் என்ன என்று யாரும் கேட்க முடியாது” என்றார்.

இயக்குனர் ரகோத்து விஜய் பத்திரிகையாளர்களிடம் இந்த படத்தினை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதனை பதிவு செய்தார்.

இசையமைப்பாளர் அனல் ஆகாஷ் தனது தாய் மற்றும் சீதா பாட்டிக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

“என்னால முடியாது என்று நான் நினைத்த பொழுது என்னை நம்பி என்னால முடியும் என்று என்னை நம்பியவர் என் தாய். ஆறு படம் நின்னு போச்சு.. இது ஏழாவது படம்.. நிச்சயம் வெற்றி பெறும்” என்று கூறினார்.

தன் படத்தில் இருந்து ஒரு பாடலை பாடி அனைவரையும் சிலிர்க்க வைத்தார்.

டத்தோ ராதா ரவி தனது பேச்சால் அரங்கத்தில் சிரிப்பலையினை ஏற்படுத்தினார்.

மேலும் ஒரு படம் என்றால் அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதனை ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

நடிகர்கள் தங்களது சம்பளத்தை தாங்கள் ஏற்றிக் கொள்ளவில்லை எனவும் ஏற்றிக் கொடுத்தால் வாங்கி கொள்ளாமல் இருக்கவா முடியும்.? எனவும் வினவினார்.

மேலும் அவர் கூறுகையில், “எல்லாரும் படத்தை திரையரங்கில் பாக்கணும், OTT யில் பாத்தா வேலைக்கு ஆகாது.

திரையரங்கம் சென்றால் படம் பார்த்து விட்டு வர வேண்டுமே தவிர, பாப்கார்ன், ஸ்நாக்ஸ் போன்றவற்றை உண்ண வேண்டாம்” என்றார்.

மேலும் நடிகர்கள் தாடி வைத்திருப்பது தேவையற்றது. மேடையில் இருப்பவர்கள் பாக்யராஜ், பெசன்ட் ரவி என பலரும் தாடி வைத்துள்ளனர்.

தாடி வைப்பவர்கள் சோம்பேறிகள் என்ற பொருள் உண்டு. நான் தினமும் எழுந்தால் முதலில் செய்வது ஷேவிங் தான். ஒரு படத்தில் முஸ்லிமாக நடிக்க என்ன தாடி வைக்க சொன்னார்கள்.

தாடி வைக்க மாட்டேன். அதற்கு ஒட்டு தாடி இருக்கு. அதை வைத்துக் கொள்ளலாம். அப்போதுதான் ஒட்டு தாடி தயாரிக்கும் தொழிலாளிக்கு வேலை கொடுக்க முடியும் என்று சொன்னேன்.

இவ்வாறாக சர்ச்சையாக பேசினாலும், இறுதியில் தாய் தந்தையரை பேணி காக்க வேண்டும் என ஒரு செய்தியுடன் தன் உரையை நிறைவு செய்தார்.

அடுத்து பேசிய மிரட்டல் செல்வா.., இந்த திரைப்படத்தில் விஜய் அஜித் படத்திற்கு நிகராக சண்டை காட்சிகள் இதில் இருக்கிறது என்பதனை தெரிவித்தார்.

படத்தின் நாயகி அஸ்வினி… நாயகன் விஜித் தனக்கு ஒரு சிறந்த துணை நடிகராக இருந்தது தனக்கு பலம் அளித்ததாக பதிவு செய்ததுடன் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி” எனவும் தெரிவித்தார்.

நடிகர் பெசன்ட் ரவி.., ” ஒரு மனிதன் தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய ரோபோ ஷங்கர், தனக்கே உரித்தான நக்கல் பாணியில் அனைவரையும் சிரிக்க வைத்தார்.

பிறகு பேசிய இயக்குநர் பேரரசு, ராதா ரவியின் பேச்சை கண்டித்து எதிர்மறையாக பேசினார். மேலும் தனது பேச்சில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சாடினார். அவர்கள் தாடி வைத்துள்ளனர். அப்படின்னா அவர்களும் சோம்பேறிகள் தானே.” என்றார்.

(பாரதிய ஜனதா ஜனதா கட்சியை சேர்ந்தவர் ராதாரவி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒருவேளை மோடியை நினைவு இல்லாமல் ராதாரவி பேசி விட்டாரோ என்னவோ??!!.)

இயக்குனர் பாக்யராஜின் சிறப்பம்சங்கள் பற்றியும், எதிர்மறை தலைப்புகளை வைத்தாலும் வெற்றி குடுக்க முடியும் என்பதை எவ்வாறு நிரூபித்தார் என்பதனை கூறினார்.

திருப்பாச்சி படம் எவ்வாறு பெயர் பெற்றது என்ற கதையினை கூட தன் பாணியில் கூறினார்.

பிறகு பேசிய RV உதயகுமார்… மத்திய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையினை வைத்தார். அதாவது திரையரங்கில் டிக்கெட் எடுப்பதற்கு ஆன்லைன் இணையதளத்தையே பயன்படுத்த வேண்டும். அதுவே ஒரு சிறந்த வழி” என அவர் கூறினார்.

மேலும் யூடியூப் வலைதளங்களுக்கு ஒரு கோரிக்கையினை அவர் வைத்தார். “நாகரீகமாக டைட்டீல் வைங்க. தவறாக வழி நடத்தாதீங்க”.

கே பாக்யராஜ் அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் தன் ரசனை மிக்க பேச்சினால் அனைவரையும் ஈர்த்தார். “ஒரு படத்தின் தலைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அதுவே மக்களிடம் ஒரு திரைப்படத்தை கொண்டு சேர்க்கும். குறிப்பாக பெண்களை ஈர்க்கும் வண்ணமே ஒரு தலைப்பு இருக்க வேண்டும் என்று அந்த காலத்தில் ஒரு கருத்து நிலவி வந்தது.

எனது படத்தில் கூட நிறைய எதிர்மறை தலைப்பு வைக்கின்றேன் என பல்வேறு விதமான விமர்சனங்கள் எனக்கு வரும்..

தூறல் நின்னு போச்சு.. மௌன கீதங்கள்.. சுவரில்லா சித்திரம் ‘ என்ற படம் இது போன்ற எதிர்மறை அலைகளை மீறி வெற்றி பெற்றது.

எனது அனைத்து படங்களிலும் தலைப்பு என்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். அதே சமயத்தில் மக்களை யோசிக்க வைக்கும் வண்ணம் இருக்க வேண்டும்”.

தனது படத்தில் ஒரு தலைப்பு எவ்வாறு உருவாகும் என்பதனை தன் நகைச்சுவை பேச்சினால் அழகாக வர்ணித்தார். தனது ‘அந்த 7 நாட்கள் ‘ படத்தினை பற்றியும் அவர் ஒரு சில சுவாரசியமான செய்திகளை பதிவு செய்தார்.

இறுதியாக பேசிய இயக்குநர் S P முத்துராமன் அவர்கள்.. “ஒரு திரைப்படத்தை எவ்வாறு பிரபலமடைய செய்யலாம் என்பதனை விவரித்தது மட்டும் இல்லாமல் திரை உலகில் காலடி எடுத்து வைப்பதற்காக பொறுமை மற்றும் நம்பிக்கை தேவையோ அது உங்களிடம் இருக்கின்றது.

“நாம் ஒன்று கன்வின்ஸ் ஆகனும் இல்லை என்றால் கன்வின்ஸ் பண்ணனும். விட்டு குடுத்தால் தான் ஒரு படம் பண்ண முடியும்”, என்று கூறினார்.

இறுதியாக திரைப்படம் எடுப்பது என்பது பல்வேறு தியாகம் மற்றும் இழப்புகளை உள்ளடக்கியது.” என்று பேசினார்.

Radharavis controversial speech about Beard at Title movie meet

‘விருமன்’ & ‘திருச்சிற்றம்பலம்’.: அடடே.. இந்த ஒற்றுமையை கவனிச்சீங்களா.?

‘விருமன்’ & ‘திருச்சிற்றம்பலம்’.: அடடே.. இந்த ஒற்றுமையை கவனிச்சீங்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் ஆகஸ்ட் 12ஆம் தேதி முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படம் வெளியானது.

இந்த வாரம் ஆகஸ்ட் 18ஆம் தேதி மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெளியானது.

இந்த இரு படங்களின் கதைக்களத்தில் ஒரு முக்கிய ஒற்றுமை உள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்..

https://t.co/u0kYCxDLhJ

இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியானதால் நம் கண்ணில் பட்டதை சொன்னோம்.. (ஹீ…ஹி…ஹா..))

உங்களுக்கும் இது போல சில ஒற்றுமை விஷயங்கள் தெரிந்திருந்தால் கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்…

Unity of Viruman Thiruchitrambalam movies

#விருமன் #திருச்சிற்றம்பலம் படங்கள்ல இவ்ளோ ஒற்றுமை? Karthi Dhanush

சூப்பர் ஸ்டார் உடனான தருணங்கள்.; என்ன சொல்கிறார் லெஜன்ட் சரவணன்.?

சூப்பர் ஸ்டார் உடனான தருணங்கள்.; என்ன சொல்கிறார் லெஜன்ட் சரவணன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் மிக பிரபலமான ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ். இதன் உரிமையாளர் அருள் சரவணன் இந்த நிறுவன விளம்பரங்களில் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் அவருக்கும் ஹீரோ ஆசை வரவே சினிமா படங்களை தயாரித்து நாயகனாக நடித்த வருகிறார்.

அவரின் முதல் படமான ‘தி லெஜண்ட்’ படம் கடந்த ஜூலை மாதம் இறுதியில் வெளியானது.

ஜெடி – ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.

ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி, சுமன், விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

பான் இந்தியா முறையில் இந்தப் படம் உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியானது. ரூ 40 கோடி வரை படத்திற்கு நஷ்டம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தான் இருக்கும் படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் லெஜண்ட் சரவணன்.

அதில்… “ சூப்பர் ஸ்டார் உடனான தருணங்கள்’ என தெரிவித்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களை வெளியிட்டு என்ன சொல்ல வருகிறார் லெஜெண்ட் ? என்பது புரியாமல் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

லெஜண்ட் சரவணன்

Legend Saravanan tweeted Moments with Superstar photos

தனுஷ் – மித்ரன் ஜவஹரின் ஹாட்ரிக் வெற்றி.; ‘திருச்சிற்றம்பலம்’ வசூல் எவ்வளவு?

தனுஷ் – மித்ரன் ஜவஹரின் ஹாட்ரிக் வெற்றி.; ‘திருச்சிற்றம்பலம்’ வசூல் எவ்வளவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’ மற்றும் ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர்.

இந்த இரண்டு படங்களும் பெண்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்தக் கூட்டணிக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

எனவே 3வது முறையாக ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக தனுஷூடன் இணைந்தார் இயக்குனர் மித்ரன் ஜவஹர்.

இதில் நித்யாமேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ரேவதி உள்ளிட்ட பலரும் நடிக்க அனிருத் இசையமைத்து இருந்தார்.

இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

600 தியேட்டர்களில் வெளியான இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்தன. எனவே படத்தின் வசனங்களும் அதற்கு தகுந்தபடி ஏறுமுகமாகவே காணப்படுகிறது.

வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.9.5 கோடியும் இரண்டாவது நாளில் 12 கோடியும் வசூலித்துள்ளதாம்.

வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டத்தை திரையரங்குகளில் அதிகமாகவே காணமுடிகிறது.

Dhanush Thiruchitrambalam movie box office collection report

More Articles
Follows