சிங்கத்தை வசூல் மழையில் நனைக்கும் கடைக்குட்டி சிங்கம்

Suriya and his brother Karthi were happy about Kadaikutty Singam collectionsஅட.. இந்த காலத்துல பேமிலி செண்டிமென்ட் எல்லாம் ஒர்க் அவுட் ஆகாது என்ற ஒரு பேச்சு பல வருடங்களாக இருந்து வருகிறது.

ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கி வசூலை வாரி குவித்து வருகிறது கடைக்குட்டி சிங்கம்.

கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, சூரி நடித்திருந்த இப்படத்தை பாண்டிராஜ் இயக்க, நடிகர் சூர்யா தயாரித்திருந்தார்.

விவசாயத்தின் மேன்மையையும் கூட்டுக் குடும்பத்தையும் பற்றி சொன்ன இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படம் இதுநாள் வரை பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.

2 வாரங்களில் ரூ.62க்கு கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டித் தந்துள்ளதாம்.

இதனால் படத்தை தயாரித்த சூர்யா தரப்பு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

Suriya and his brother Karthi were happy about Kadaikutty Singam collections

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post