நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர்.; மீசை ராஜேந்திரன் கோரிக்கை

நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர்.; மீசை ராஜேந்திரன் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு மார்க் ஆண்டனி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இதற்கான விழாவில் நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்திக்கும் போது.. “விரைவில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் இதுபற்றி தெரிவித்துள்ளதாவது..

“விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை உருவாக்கியவர். பல இயக்குனர்களை உருவாக்கியவர். நடிகர் சங்க கடனை அடைத்தவர்.

எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தவர். ஆகவே, பாராட்டு விழாவோடு, நடிகர் சங்க புதிய கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும்” என நடிகர் மீசை ராஜேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.

New Building of Nadigar Sangam should be named Vijayakanth says Meesai Rajendran

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பில் இணைந்த ரஜினி பட நடிகர்

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பில் இணைந்த ரஜினி பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளனர்.

தனுஷின் மூத்த சகோதரனாக சிவராஜ்குமார் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சிவராஜ்குமார் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

மேலும், சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் மங்களூர் ஷெட்யூலில் சிவராஜ்குமார் தனது பகுதிகளை முடித்தார் என்பது குறிப்பிட்டதக்கது.

சிவராஜ்குமார்

Shivarajkumar joins the shoot of ‘Captain Miller’

ஷாருக்கானின் ‘ஜவான்’.; ஜகா வாங்கிய விஜய்.; RRR பட நடிகரை தேடிய அட்லி

ஷாருக்கானின் ‘ஜவான்’.; ஜகா வாங்கிய விஜய்.; RRR பட நடிகரை தேடிய அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜவான்’.

இப்படத்தை அட்லி இயக்க ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இசையமைக்கிறார்

இதில் உள்ள ஒரு கெஸ்ட் ரோலில் விஜய்யை நடிக்க வைக்க திட்டமிட்டாராம் அட்லி.. ஆனால் விஜய் மறுக்கவே தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடம் பேசினாராம்.

அவரும் மறுத்த நிலையில் ஆர்ஆர்ஆர் பட நடிகர் ராம்சரணிடம் அட்லீ பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

ஜவான்

director atlee has approached ramcharan to play a cameo in jawan

விரைவில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா.; விஷால் அறிவிப்பு.; பின்னணி இதுதான்.!

விரைவில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா.; விஷால் அறிவிப்பு.; பின்னணி இதுதான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், சுனில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

ஆதித் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இன்று மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால் பேசும்போது…

“நடிகர் சங்க கட்டிடத்தின் பத்திரத்தை மீட்டுக்கொடுத்தது நடிகர் விஜயகாந்த். அந்த இடத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்துவதுதான் சரியாக இருக்கும். ஓராண்டுக்குள் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு அதன்பின்னர் பாராட்டு விழா எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Appreciation ceremony for Vijayakanth soon

‘அகிலன்’ படத்தின் அதிகாரப்பூர்வ FDFS டைமிங் இதோ

‘அகிலன்’ படத்தின் அதிகாரப்பூர்வ FDFS டைமிங் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘அகிலன்’.

இப்படத்தில் தான்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது.

‘அகிலன்’ படம் மார்ச் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளுக்கு வருகிறது.

இந்நிலையில், ஜெயம் ரவியின் ‘அகிலன்’ FDFS நிகழ்ச்சி காலை 7 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FDFS show timing for ‘agilan’ movie is here

கடலுக்குள் சூட்டிங்.. வில்லனுக்கு ரொமான்ஸ்.. போர்க்கப்பலில் படம் – இயக்குநர் பிராஷ்

கடலுக்குள் சூட்டிங்.. வில்லனுக்கு ரொமான்ஸ்.. போர்க்கப்பலில் படம் – இயக்குநர் பிராஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆபரேஷன் அரபைமா’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் முன்னாள் கப்பல்படை வீரர் பிராஷ்.

இதில் ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இயக்குநர் பிராஷ் பேசியதாவது…

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் ஆபரேஷன் அரபைமா வாகத்தான் இருக்கும். நாம், இப்படத்தை கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் மூலம் எடுத்திருக்க முடியும். ஆனால், உண்மையான கப்பல்களை காட்டும் அழகு வராது. ஆனால், அந்த சவால்களையும் செய்துள்ளோம்.

ஆபரேஷன் அரபைமா

கடலில் ஒரு காட்சியை படம் பிடிப்பது கடினம். கடல் சீற்றம், காற்று என அனைத்தையும் கணித்து படம் பிடிக்க வேண்டும். நாங்கள் அதை செய்துள்ளோம்.

17 லொகேஷன்களை இப்படத்தில் காட்டியுள்ளேன். நம் நாட்டிற்கு புதியதாக அறிமுகமாகவிருக்கும் போதை பொருளின் பாதிப்பை சொல்லும் படம் தான் இது.

இப்படத்தில் நாயகனுக்கு காதலிக்கவே நேரமில்லை. ஆனால், வில்லன் காதலிக்கிறார், அவருடைய தம்பி ரொமான்ஸ் செய்கிறார். நிச்சயமாக படம் உங்களுக்குப் பிடிக்கும். மற்றபடி நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லவேண்டும். அதற்காக நான் காத்திருக்கிறேன் என்றார்.

ஆபரேஷன் அரபைமா

Shooting in the sea.. Romance for the villain.. – Director Prash

More Articles
Follows