தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.
இந்த படத்தில் ரித்து வர்மா, செல்வராகவன், அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக வினோத் தயாரித்துள்ளார்.
செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்தது
லைக்கா நிறுவனத்துக்கு விஷால் தரவேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் விஷால் செலுத்தாததால் இந்த உத்தரவு சில தினங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது நடைபெற்ற வழக்கு விசாரணையில் இன்று செப்டம்பர் 12 தேதி நடிகர் விஷால் நடித்து செப்டம்பர் 15 வெளிவரவுள்ள “மார்க் ஆண்டனி” திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதே சமயம் சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் விஷால்
தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என விஷாலுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்…2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான நடிகர் விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு;நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் ஆணை..
No objection in court to release the movie Mark Antony