தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்கும், இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்”.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகை ஷகீலா பேசியதாவது..
எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சில நாட்கள் மட்டும் தான் வேலை பார்த்தேன் எனக்கு நல்ல வேடம் தந்தார் இயக்குநர். ஜெய் ஆகாஷ் படைப்பாளியை உருவாக்கியதற்காக என் நன்றிகள். நான்கு பெண்கள் மேக்கப் இல்லாமல் மிக இயல்பாக நன்றாக நடித்துள்ளனர்.
எல்லோருமே சின்ன இயக்குநராக இருந்து, சின்ன நடிகராக இருந்து தான் பெரியாளாக ஆகிறார்கள். இப்படம் பெரிய வெற்றி பெறும் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.
தேசிய ஜனநாயக கட்சி துணைத் தலைவர் ஐ ஜே கே, ஜி பூபதி பேசியதாவது…
மிக நல்ல தலைப்பை வைத்துள்ளார் இயக்குநர். ஒரு நிகழ்ச்சியில் இயக்குநரின் பேச்சைக் கேட்டு ஆர்வமாகி அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவருடன் படம் செய்யலாம் என்று கேட்டேன். அப்போது இந்தப்படம் முடிந்தவுடன் செய்யலாம் என்றார். இந்தப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார் இயக்குநர். கண்டிப்பாக அவரது உழைப்பிற்கு இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் சமூகத்திற்கு தேவையான படைப்பை தந்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகர் பிர்லா போஸ் பேசியதாவது..
சினிமாவின் 24 கிராப்டிலும் தேர்ந்த திறமை கொண்டவர் ஜெய் ஆகாஷ். மிகப்பெரிய ஆளுமை. அவர் படத்தில் வேலை பார்த்தாலே எல்லாம் கற்றுக்கொள்ளலாம். சாய் பிரபாவும் மிகத் திறமையானவர், மிக கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் மிகப்பெரிய படம். நடிகர் சங்கத்திற்கு திரு விஜயகாந்த் அவர்களின் பெயரை வைக்க வேண்டுமென எல்லோரும் சொல்லி வருகிறார்கள்.
நடிகர் சங்க கட்டிடம் முதலில் நன்றாக வரவேண்டும் அதற்கு என் சம்பளத்தில் ஒரு பகுதியை இந்த மேடையில் தருகிறேன். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி.
Actress Shakeela speaks about Naangatha inimae headlines movie