தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் மக்களின் ஆதரவை பெற்ற நிலையில் நன்றி கூற பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.
இதில் பங்கேற்ற நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசியதாவது…
ஆதிக் ரவிச்சந்திரன் அடிக்கடி என்னிடம் வந்து கதை சொல்வார். அதை எனர்ஜியா சொல்லுவார்.. ‘சார்.. உங்க எனர்ஜிக்கு நீங்க எங்கேயோ இருக்க வேண்டிய ஆளு, என்னிடம் சொல்றீங்க, எனக்கு செட்டாக மாட்டேங்குது சார்’ என்றுதான் சொல்வேன்.
கொரோனா லாக்டவுன் காலத்தில், ஒரு கதையை சொன்னார். எனக்கு பிடித்திருந்தது. பண்ணலாம் என்று சொன்னேன்.
ஆனால் திடீரென வேறுஒரு நாள் வந்து. ‘சார், வேறு ஒரு படம் முதலில் பண்ணப் போறேன். விஷால் சார் தான் ஹீரோ, நீங்களும் பண்ணனும்’ என்றார்.
‘நல்ல பழுத்த பழமா, ஒரு கேங்ஸ்டர் ரோல் பண்ணனும்’ என்றார் ஆதிக். ‘சார்.. இப்போ தான் வாழ்க்கையில் போராடி ஏதோ ரோல் பண்ணிட்டு இருக்கேன். இப்போ போய், என்னை கிழவனா ஆக்கினால் எப்படி சார்’ என்று மறுத்துவிட்டேன்.
‘மாநாடு’ டப்பிங் போகும் போது, கீழே எனிமி படத்தின் பணிகள் போய்க் கொண்டிருந்தது.
அப்போ விஷால் என்னை பார்த்து ‘சார் அந்த கதை கேட்டீங்களா?’ என்று கேட்டார். வேண்டாம்’ என்றேன்.
‘சார்.. நீங்க கதை கேளுங்க, பிடிக்கலைனா வேண்டாம்’ என்றார். அன்று அவர் சொன்னதால் வேறு வழியின்றி கதை கேட்டேன்.
விஷால் என்னிடம் சொல்லாமல் போயிருந்தால், அதன் பின் ஆதிக் சாரை சந்தித்திருக்க மாட்டேன். இந்த படத்தை நான் மிஸ் பண்ணியிருப்பேன்.
கதை கேட்டதும் பயங்கர சூப்பரா இருந்தது. விஷாலை அப்பா, பையன் கேரக்டர் வைச்ச மாதிரி. எனக்கும் அப்பா, மகன் கேரக்டர் வைங்க, அப்போ நான் வர்றேன் என்று கூறினேன்.
அப்போது 20 நாள் கழித்து வருகிறேன் சார் என்று போனார். வந்தார் பாருங்க, அப்படி ஒரு நரேஷன். என்ன ஒரு இயக்குனர் சார் அவர். அவரை அப்படியே கட்டிப்பிடிச்சுட்டேன்.
மார்க் ஆண்டனி பார்த்துட்டு எங்க அக்கா பசங்கள் எல்லாம் என்னிடம் சொன்னார்கள், ‘ஏன் மாமா.. இந்த ஆதிக் ரவிச்சந்திரன் உங்க சின்ன வெர்ஷன் போல’ என்றார்கள். எங்களுக்குள் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி செட் ஆகிவிட்டது.”
இவ்வாறு எஸ்ஜே. சூர்யா பேசினார்.
My junior version is Adhik Ravichandran says SJ suryah