தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.
இந்த படத்தில் ரித்து வர்மா, செல்வராகவன், அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக வினோத் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
இந்தப் படத்தில் டி ராஜேந்தர் பாடிய அதிருதா என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது
செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது
லைக்கா நிறுவனத்துக்கு விஷால் தரவேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் விஷால் செலுத்தாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
High Court Ban Vishals Mark Antony release