கேப்டன் விஜயகாந்தை போல நடிகர் ஜெய்ஆகாஷ்… – மீசை ராஜேந்திரன்

கேப்டன் விஜயகாந்தை போல நடிகர் ஜெய்ஆகாஷ்… – மீசை ராஜேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்கும், இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்”.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில் நடிகர் மீசை ராஜேந்திரன் பேசியதாவது…

என்னை சினிமாவிலும் அரசியலிலும் அறிமுகப்படுத்திய தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு என் வணக்கம். கேப்டன் 53 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் அதே போல் இயங்கி வரும் ஜெய் ஆகாஷுக்கு என் வாழ்த்துக்கள். என் வெற்றிக்கு என் வாழ்வுக்கு காரணம் சினிமா தான்.

சினிமா பலரை வாழவைக்கிறது. சினிமா பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.

சினிமா தெரியாமலே இன்று நிறைய பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சினிமா மிக பவர்ஃபுல்லானது. அதில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல.

சாய் பிரபாவின் இரண்டு படத்திலும் நான் நடித்துள்ளேன், மிகப்பெரிய உழைப்பாளி. இந்தப்படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர்கள்
சாய் பிரபா மீனா
ராஜ் மித்ரன்
மீசை ராஜேந்திரன்
பிர்லா போஸ்
ஆஷா
கவிதா
சங்கீதா
கீர்த்தனா
கௌரவத் தோற்றத்தில் ஷகீலா

தொழில் நுட்ப குழு
இயக்கம் – சாய் பிரபா மீனா
தொழில் நுட்ப குழு
ஒளிப்பதிவு – பால்பாண்டி
இசை – சந்தோஷ் ராம்
எடிட்டிங் – நவீன் குமார்
சண்டை பயிற்சி – சூப்பர் குட் ஜீவா
ஆர்ட் டைரக்டர் – கிரண்&பண்டு
இணை இயக்குனராக – ஜே டி
தயாரிப்பாளர் – ராம்குண்டலா ஆஷா
மக்கள் தொடர்பு – A ராஜா

Jaiakash is like Vijayakanth says Meesai Rajendran

நாலு பொண்ணுங்க மேக்கப் இல்லாம.; ‘இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்’ குறித்து ஷகிலா

நாலு பொண்ணுங்க மேக்கப் இல்லாம.; ‘இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்’ குறித்து ஷகிலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்கும், இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்”.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில் நடிகை ஷகீலா பேசியதாவது..

எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சில நாட்கள் மட்டும் தான் வேலை பார்த்தேன் எனக்கு நல்ல வேடம் தந்தார் இயக்குநர். ஜெய் ஆகாஷ் படைப்பாளியை உருவாக்கியதற்காக என் நன்றிகள். நான்கு பெண்கள் மேக்கப் இல்லாமல் மிக இயல்பாக நன்றாக நடித்துள்ளனர்.

எல்லோருமே சின்ன இயக்குநராக இருந்து, சின்ன நடிகராக இருந்து தான் பெரியாளாக ஆகிறார்கள். இப்படம் பெரிய வெற்றி பெறும் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

தேசிய ஜனநாயக கட்சி துணைத் தலைவர் ஐ ஜே கே, ஜி பூபதி பேசியதாவது…

மிக நல்ல தலைப்பை வைத்துள்ளார் இயக்குநர். ஒரு நிகழ்ச்சியில் இயக்குநரின் பேச்சைக் கேட்டு ஆர்வமாகி அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவருடன் படம் செய்யலாம் என்று கேட்டேன். அப்போது இந்தப்படம் முடிந்தவுடன் செய்யலாம் என்றார். இந்தப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார் இயக்குநர். கண்டிப்பாக அவரது உழைப்பிற்கு இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் சமூகத்திற்கு தேவையான படைப்பை தந்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் பிர்லா போஸ் பேசியதாவது..

சினிமாவின் 24 கிராப்டிலும் தேர்ந்த திறமை கொண்டவர் ஜெய் ஆகாஷ். மிகப்பெரிய ஆளுமை. அவர் படத்தில் வேலை பார்த்தாலே எல்லாம் கற்றுக்கொள்ளலாம். சாய் பிரபாவும் மிகத் திறமையானவர், மிக கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் மிகப்பெரிய படம். நடிகர் சங்கத்திற்கு திரு விஜயகாந்த் அவர்களின் பெயரை வைக்க வேண்டுமென எல்லோரும் சொல்லி வருகிறார்கள்.

நடிகர் சங்க கட்டிடம் முதலில் நன்றாக வரவேண்டும் அதற்கு என் சம்பளத்தில் ஒரு பகுதியை இந்த மேடையில் தருகிறேன். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி.

Actress Shakeela speaks about Naangatha inimae headlines movie

இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்.. டைட்டிலுக்காகவே சாய் பிரபாவை பாராட்டுகிறேன்.. – சம்பத் ராம்

இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்.. டைட்டிலுக்காகவே சாய் பிரபாவை பாராட்டுகிறேன்.. – சம்பத் ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்கும், இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்”.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..,

நடிகர் சம்பத் ராம் பேசியதாவது…

இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ், இந்த டைட்டிலுக்காகவே இயக்குநர் சாய் பிரபாவை பாராட்டுகிறேன். எல்லோரும் ஹெட்லைன்ஸில் வர ஆசைப்படுவார்கள்.

இந்த சின்ன வயசில் ஒரு படத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார். பெரிய இயக்குநராக வர அவருக்கு என் வாழ்த்துக்கள். படத்தில் ஸ்டண்ட் சூப்பர் குட் ஜீவா சூப்பராக செய்துள்ளார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிகப்பெரியவெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் சாய் பிரபா மீனா பேசியதாவது…

இந்த இடத்தில் நான் நிற்க காரணம் என் ஆசான் ஜெய் ஆகாஷ் அவர்கள் தான், அவருக்கு என் நன்றி. சிறுபட தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்பு செல்வன் மிகப்பெரும் ஆதரவைத் தந்தார். தயாரிப்பாளர் ராம்குண்டலா ஆஷா அவர்கள் தான் படத்தை நம்பி எனக்கு வாய்ப்பு தந்து தயாரித்தார்கள்.

ஷகிலா மேடம் படபடவென பட்டாசு போல் நடித்து முடித்தார். மீசை ராஜேந்திரன் சார் நன்றாக நடித்து தந்தார். ஜெய் ஆகாஷ் சார் மூலம் தான் எனக்கு இங்குள்ள அனைவரையும் தெரியும். எல்லோருக்கும் என் நன்றிகள். பெண்களை மையப்படுத்தி, அவர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி, இந்தப்படத்தை எடுத்துள்ளேன். ஒளிப்பதிவாளர் மிகப்பெரும் உறுதுணையாக இருந்தார். இசையமைப்பாளரை நான் நிறைய டார்ச்சர் செய்திருக்கிறேன்.

இப்படத்தில் படம் நன்றாக வரவேண்டுமென எல்லோருடனும் சண்டை போட்டுள்ளேன். ஆனால் அவர்கள் படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். சின்ன படம் பெரிய படம் என எதுவும் இல்லை அதை வைத்து மனிதர்களின் திறமையை எடை போடாதீர்கள். உலகமே கிறுக்கன் என சொன்ன எலான் மஸ்க் இன்று உலகையே ஆளுகிறார். எனில் என்னைமாறி இளைஞர்களும் ஜெயிக்க முடியும் என நம்புகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள்.

தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆர். கே. அன்பு செல்வன் பேசியதாவது…

இயக்குநர் முதலில் யோக்கியன் என ஒரு படம் எடுத்தார். அது ரிலீஸாகி ஆறு மாதத்திற்குள் அடுத்த படத்தை எடுத்து டிரெய்லர் விழாவிற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் சாய் பிரபா. அவரது திறமைக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக வேண்டும். இப்போதெல்லாம் காசு வாங்கிக் கொண்டு மேடைக்கு வந்து அவர்களுக்கு தோன்றுவதையும், படஹீரோக்களையும் திட்டி பேசிவிட்டுபோகிறார்கள். படம் பற்றி பேச மறுக்கிறார்கள். இது மாற வேண்டும்.

சினிமாவில் யாரையும் ஏமாற்றக்கூடாது. நான் இருக்கும் வரை யாரையும் ஏமாற்ற விடமாட்டேன் எனக்கூறி விடை பெறுகிறேன் நன்றி.

நடிகர் ஜெய் ஆகாஷ் பேசியதாவது…

இயக்குநர் சாய் பிரபா என் தம்பி மாதிரி. எனக்காக என்னவேணாலும் செய்வான். அவனுக்கு ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. அவன் இயக்குநர் ஆக வேண்டும் என்று எடுத்த படம் தான் யோக்கியன்.

இப்போது அவனே அவன் முயற்சியில் இனிமே நாங்கதான் ஹெட்லைன்ஸ் படத்தை இயக்கியுள்ளான். டிரெய்லர் ஷாட்ஸ் எல்லாம் நன்றாக வந்துள்ளது. படத்தில் இருக்கும் அனைவரும் என் நண்பர்கள் தான். படத்தில் எல்லோரும் நன்றாக செய்துள்ளனர்.

நான் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளேன். ஆனால் சாய் தான் நன்றி மறக்காமல் இருக்கிறான். இவனிடம் உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ளது அவன் ஜெயிக்க வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

I appreciate Sai Praba Meena for inimae Naangatha headlines title says Sambathram

டோவினோ தாமஸ் நடிக்கும் மலையாள படத்திற்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு

டோவினோ தாமஸ் நடிக்கும் மலையாள படத்திற்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் திலகம் (Nadikar Thilakam) என்ற பெயரில், ஜீன் பால் லால் இயக்கத்தில், டொவினோ தாமஸ் நடிப்பில், மலையாளத்தில் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.

இதை அறிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், கேரள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், மலையாள நடிகர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே. சந்திரசேகரன் கடிதம் அனுப்பியிருந்தார்.

நடிகர் திலகம் – இது வெறும் பெயரல்ல… எங்கள் உயிர் மூச்சு.. இது வெறும் பட்டம் அல்ல. தமிழ் சினிமாவின் உயிரெழுத்து.

நடிகர் திலகம் என்ற பட்டம் தமிழ் சினிமாவின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து மறைந்த கலை உலகின் தவப்புதல்வன் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரசிகர்கள் அளித்த அடைமொழி.

எனவே இந்த டைட்டிலை மாற்றிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

டைட்டில் மாற்றத்திற்கு நன்றி எங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நடிகர் திலகம் என்ற திரைப்படத் தலைப்பை ‘நடிகர்’என்று மாற்றி வைத்ததற்கு உலகெங்கிலும் வாழும் நடிகர் திலகத்தின் சார்பிலும், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பிலும். நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள
கே. சந்திரசேகரன்
தலைவர், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை

நடிகர் திலகம்

Nadikar Thilakam Malayalam movie title changed

நான் பார்த்து வளர்ந்த பையன் விஜய்.; எனக்கு போட்டி இல்லை – ரஜினிகாந்த்

நான் பார்த்து வளர்ந்த பையன் விஜய்.; எனக்கு போட்டி இல்லை – ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’.

இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற ரஜினி பேசியதாவது…

‘ஜெயலர்’ விழாவில் நான் பேசிய காக்கா கழுகு பிரச்சனை தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. நான் விஜய் குறித்து பேசியதாக கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது.

நடிகர் விஜய் எனக்கு முன்னாள் வளர்ந்த பையன், நடிகர் விஜயை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன்.

தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பின் போது விஜய்யின் தந்தை என்னிடம் வந்து, என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. நீங்கள் கூறுங்கள் அவன் படித்துவிட்டு வந்தவுடன் நடிக்க வேண்டுமென தெரிவித்தார். நானும் விஜய் அழைத்து அட்வைஸ் செய்தேன்.

அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து உழைப்பால் உயர்ந்து உள்ளார். தற்போது நன்றாக நடித்து வருகிறார். தற்போது சமூக சேவைகள் செய்து அரசியலுக்கு வரும் முயற்சியில் உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது. அவரும் மேடையில் எனக்கு போட்டி நான் தான் என கூறியுள்ளார். எனக்கு போட்டி என்னுடைய படங்கள்தான் என்பதை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்..

நடிகர் விஜய் எனக்கு போட்டியாக நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை.. நானும் விஜய்க்கு போட்டியா நினைத்தால் அவருக்கும் மரியாதை இல்லை.. தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள் காக்கா கழுகு கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

ரஜினிகாந்த்

Superstar made conclusion for Rajini and Vijay fans war

மனைவி செல்போனில் ஸ்பை ஆப் இன்ஸ்டால் செய்த கணவன்

மனைவி செல்போனில் ஸ்பை ஆப் இன்ஸ்டால் செய்த கணவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள்.

மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை அதோமுகம் புதிய கோணத்தில் திரைப்படமாக வடிவமைத்துள்ளனர்.

ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கதைகளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

மலைகள், குளிர், மிஸ்ட் ஆகியவையுடன் டெக்னாலஜியுடன் கூடிய சஸ்பென்ஸ் திரில்லாராக படம் உருவாகியுள்ளது.

ஹீரோ தனது மனைவி மொபைல் போனில் அவருக்கு தெரியாமல் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை.

இதை சுற்றி பல திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையை வடிவமைத்து அதோமுகம் படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

கதையின் நாயகனாக சித்தார்த் எஸ். பி. கதையின் நாயகி சைத்தன்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் இயக்குனர் சுனில் தேவ், ஒளிப்பதிவு அருண் விஜயகுமார், எடிட்டர் விஷ்ணு விஜயன், பின்னணி இசை சரண் ராகவன், பாடல்கள் மணிகண்டன் முரளி என புதுமுக டெக்னிஷியன்கள் இணைந்து இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதுவரை பட வினியோக வியாபாரத்தில் இருந்து வந்த ரீல் பெட்டி நிறுவனம் தரிகோ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

நடிகர்கள் :

எஸ்.பி.சித்தார்த், சைதன்ய பிரதாப், அருண் பாண்டியன், மாத்யூ வர்கீஸ், ஆனந்த் நாக், J S கவி, பிபின் குமார், சரித்திரன்

படக் குழுவினர்:

எழுத்து & இயக்கம்: சுனில் தேவ்
ஒளிப்பதிவு: அருண் விஜய்குமார்
பாடல்கள்: மணிகண்டன் முரளி
பின்னணி இசை: சரண் ராகவன்
கலை இயக்குனர்: சரவணா அபிராமன்
படத்தொகுப்பு: விஷ்ணு விஜயன்
ஒலி வடிவம்: திலக்ஷன் (Noise Nexus)
ஒலி கலவை: T. உதயகுமார் (Knack Studios)
ஒப்பனை: நரசிம்மா, அம்மு பி ராஜ், சுப்ரமணி (அருண் பாண்டியன்)
பாடல்: சுனில் தேவ்
கிராபிக்ஸ்: Fix It In Post Studios
கலரிஸ்ட்: K. அருண் சங்கமேஸ்வர்
வண்ணம்: Firefox Studios
மக்கள் தொடர்பு – ஆர்.குமரேசன்

Husband installed Spy app in wife mobile Adhomugam storyline

More Articles
Follows