கொரோனா தனிமை… விவாகரத்து நோட்டீஸ்.. பேஜரானா பேட்ட வில்லன்

nawazuddin siddiqui with his wifeபாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவர் நவாசுதீன் சித்திக்.

‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’, ‘ராமன் ராகவ் 2.0’, ‘ரயீஸ்’, ‘போட்டோகிராஃப்’ உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் தாக்கரே படத்தில் பால்தாக்கரே வேடத்தில் நடித்துள்ளார்.

தமிழில் ரஜினிகாந்த் உடன் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இவர் ரம்ஜான் கொண்டாடுவதற்காக தன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

அப்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் இவரின் மனைவி ஆலியா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஆலியாவின் வழக்கறிஞர் கூறியுள்ளதாவது;

”விவாகரத்துக்கான காரணம் குறித்து என்னால் வெளிப்படையாகச் சொல்ல இயலாது. ஆனால், ஆலியா கூறியிருக்கும் குற்றச்சாட்டுகளை வெளியே சொன்னால் நவாசுதீன் மற்றும் அவரது குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும்.

விவாகரத்து நோட்டீஸ் நவாசுதீனின் வாட்ஸ் அப் மற்றும் இ மெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் அதுகுறித்துப் பதிலளிக்கவில்லை”.

இவ்வாறு அபய் சஹாய் கூறியுள்ளார்.

நவாசுதீன் சித்திக்கும் ஆலியாவுக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post