மாலத்தீவில் படமாக்கப்பட்ட ‘மாஸ்டர்’ மாளவிகாவின் மலையாள படம்

மாலத்தீவில் படமாக்கப்பட்ட ‘மாஸ்டர்’ மாளவிகாவின் மலையாள படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பேட்ட’, ‘மாஸ்டர்’ படப் புகழ் நடிகை மாளவிகா மோகனனும், மலையாள நடிகர் மேத்யூ தாமஸும் நடித்திருக்கும் புதிய ்படத்திற்கு ‘கிறிஸ்டி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரித்விராஜ், ஜெயசூர்யா, டோவினோ தாமஸ், நிவின் பாலி, சன்னி வெய்ன், உன்னி முகுந்தன், ஜாய் மாத்யூ, நடிகை மஞ்சு வாரியர், பஷில் ஜோசப், அந்தோணி பேப் ஆகியோர் தங்களது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘கிறிஸ்டி’.

இதில் நடிகர் மேத்யூ தாமஸ் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பென்யமின் மற்றும் ஜி. ஆர். இந்துகோபன் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை மனு ஆண்டனி கவனிக்க, சுஜித் ராகவ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராக்கி மவுண்டன் சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் சஜய் செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

காதல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு ‘கிறிஸ்டி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள பூவார் மற்றும் மாலத்தீவுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த ‘கிறிஸ்டி’ திரைப்படம் மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Malavika Mohanan next movie Title and first look release

கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் இருந்து உதயநிதி விலகினார்…!

கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் இருந்து உதயநிதி விலகினார்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி ஸ்டாலின் தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி நடிப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார்.

பிறகு, பத்திரிக்கையாளர் சந்திப்பில் தற்போது நடித்து கொண்டிருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் தான் எனது கடைசி படம் என்றார்.

மேலும், கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திலும் நடிக்க மாட்டேன் என்றும், இனிமேல் சினிமாவிலும் நடிக்க மாட்டேன் என்றும் உதயநிதி கூறினார்.

Udhayanidhi withdraws from Kamal Haasan’s production film

உதயநிதியின் ‘கலக தலைவன்’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உதயநிதியின் ‘கலக தலைவன்’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”.

நாயகியாக நிதி அகர்வால் நடிக்க, வில்லனாக ஆரங் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் கலையரசன் நடித்துள்ளார்.

‘கலக தலைவன்’ என்ற ஆக்‌ஷன் த்ரில்லரில் பெரிய திரைகளில் உலகமெங்கும் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகி அதிகமான விமர்சனங்களைப் பெற்றது.

மேலும், அதிக திரைகளில் வெளியிட தவறவிட்டதால், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் பெறவில்லை.

இருப்பினும், ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை OTT-யில் வெளியீட்டிற்கு படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை டிசம்பர் 16 முதல் பிரபலமான நெட்ஃபிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் வெளியீட்டு செய்யப்படுகிறது.

Udhayanidhi’s ‘Kalaga Thalaivan’ OTT release date announcement

மீண்டும் SR பிரபு தயாரிப்பில் இணைந்த ஜீவா.; டைரக்டர் & ஹீரோயின் யார்.?

மீண்டும் SR பிரபு தயாரிப்பில் இணைந்த ஜீவா.; டைரக்டர் & ஹீரோயின் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’ என ரசிகர்களுக்கு வித்தியாசமான கதைகளைக் கொடுப்பதில் முன்னணியாக இருப்பது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம்.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து தயாரித்து வருகிறது.

தங்களது அடுத்தப் படத்தின் பூஜையை இன்று விமரிசையாக நடத்தியுள்ளது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம். வித்தியாசமான கமர்ஷியல் படமாக உருவாகும் இதில் நாயகனாக ஜீவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனை டைரக்டர் செல்வராகவன் உதவியாளர் மணிகண்டன் இயக்கவுள்ளார்.

மேலும், நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக சித்தார்த், ஸ்டண்ட் காட்சிகளின் இயக்குநராக மெட்ரோ மகேஷ், ஆடை வடிவமைப்பாளராக சத்யா பணிபுரியவுள்ளனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது.

இன்று சென்னையில் நடைபெற்ற பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

முன்னதாக பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படமொன்றில் ஜீவா நாயகனாக நடித்துள்ளார். இதில் ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளது.

விரைவில் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

ஜீவா

Jeeva & Potential Studios Join hands again for new project

விஷாலுக்கு வீரவாள்.. பெண்களுக்கு தையல் மெஷின்.; வித்தியாசமான ‘லத்தி’ புரோமோசன்

விஷாலுக்கு வீரவாள்.. பெண்களுக்கு தையல் மெஷின்.; வித்தியாசமான ‘லத்தி’ புரோமோசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘லத்தி’ படத்தை வினோத்குமார் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை நடிகர்களும் விஷாலின் நெருங்கிய நண்பர்களுமான ரமணா மற்றும் நந்தா தயாரித்துள்ளனர்.

சுனைனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விஷால்

வருகிற டிசம்பர் 22ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் சென்னையில் பத்திரியாளர்களை சந்தித்த விஷால் & படக்குழுவினர் தற்போது தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.

கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சென்றுள்ளனர்.

விஷால்

சேலத்தில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் விஷால் பங்கேற்று பேசினார்.

இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்கு நடுவே விஷால் மக்கள் நல இயக்கத்தினர் ஏழைகளுக்கு உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இதில் விஷால் பங்கேற்று ஏழைப் பெண்களுக்கு தையல் மெஷின் & வேஷ்டி சேலைகளை உள்ளிட்டவைகளை வழங்கினார்.

விஷால் மக்கள் நல இயக்கத்தினர் அவருக்கு வெள்ளியிலான வீரவாள் ஒன்றை பரிசாக வழங்கினர்.

விஷால்

Vishals Laththi team doing promotions in different way

—-

.@VishalKOfficial to meet the students in the salem sakthi kailash women’s college 4 #LaththiPromotion

#LaththiFromDec22nd
#Vishalsalemvisit

@RanaProduction0 @nandaa_actor #Ramanaa @U1Records @JprFilms @balasubramaniem @adityamusic @dir_vinothkumar @TheSunainaa @PeterHeinOffl https://t.co/P5LhVm9CGu

———–

.@VishalKOfficial today provided welfare program assistance to the public in Salem district on behalf of #Vishal_Makkal_Nala_iyakkam Fans club.

@HariKr_official @VffVishal @GKReddy @johnsoncinepro @ajay_64403 https://t.co/MwVmbC01lW

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினி – கமல் வாழ்த்து

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினி – கமல் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்று கொண்டதற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவில்,

“தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில்,

“வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

rajini kamal wishes for minister udhayanidhi

More Articles
Follows