மீண்டும் கமலுடன் இணைய ஆசைப்படும் பேட்ட வில்லன் சிங்காரம்

மீண்டும் கமலுடன் இணைய ஆசைப்படும் பேட்ட வில்லன் சிங்காரம்

siddiqueபேட்ட படத்தில் சைலண்ட் வில்லனாக நடித்து அனைவரையும் அசத்தியவர் நவாசுதீன் சித்திக்.

அடிச்சது யாரு..? என்று இவர் சட்டை காலரை தூக்கி விட்டு பேசும் காட்சி எவராலும் மறக்க முடியாது.

தற்போது தாக்கரே என்ற ஹிந்தி படத்தில் பால் தாக்கரேவாக நடித்திருக்கிறார்.

அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில் ரஜினி மற்றும் கமல் பற்றி பேசியுள்ளார்.

யாரையும் காப்பி அடித்து நடிக்கக் கூடாது. உண்மையாக நடிக்க வேண்டும்.

என்னுடன் நடித்த நடிகர்களில் தமிழில் ரஜினியையும் விஜய் சேதுபதியையும், பிடித்தது.

ரஜினிகாந்த், எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார். ஆனால் இயக்குனர் சொல்வதை மட்டும்தான் செய்கிறார். இது பெரிய வி‌ஷயம்.

கமல் நடிப்பு, ரஜினி நடிப்பு என்று கம்பேர் செய்ய கூடாது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. கமல் மிகச்சிறந்த நடிகர். அவருடன் ஹேராம் படத்தில், நடித்தேன். ஆனால் அந்த காட்சி படத்தில் இல்லை.

ஆளவந்தான் இந்தியில் டப் செய்யப்பட்ட போது கமலுக்கு இந்தி பயிற்சியாளராக பணிபுரிந்தேன்.

கமலுடன் நடிக்கவேண்டும்”. இவ்வாறு நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி அம்மனை தரிசனம் செய்த சௌந்தர்யா ரஜினி

கன்னியாகுமரி அம்மனை தரிசனம் செய்த சௌந்தர்யா ரஜினி

soundarya rajinikanthரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் 2010ல் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சட்டப்படி பிரிந்தனர்.

தற்போது சவுந்தர்யா, தொழில் அதிபரும், நடிகருமான விசாகனை 2வது திருமணம் செய்ய இருக்கிறார்.

வருகிற பிப்ரவரி 11ந் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.

இந்தநிலையில் சவுந்தர்யா கன்னியாகுமரி சென்றுள்ளார். அதிகாலை சூரிய உதயம் தரிசனம் முடித்துக் கொண்டு, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.

தனது திருமண அழைப்பிதழை, அம்மன் காலடியில் வைத்து பூஜை செய்ததாக கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு அங்கிருந்து சென்னை திரும்பியுள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தலைப்பு இதானா?

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தலைப்பு இதானா?

sivakarthikeyan and nayantharaசீமராஜா மற்றும் கனா படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது.

இது அவரின் 13வது படமாக உருவாகுகிறது. ராஜேஷ்.எம் இயக்க, நயன்தாரா ஹீரோயின் நடித்து வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு மிஸ்டர் லோக்கல் என்று பெயரிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வாழ்க்கையில் சந்தித்த அற்புத அனுபவத்துக்குத் தங்கக் காசுகள் பரிசு: ‘கிரிஷ்ணம் ‘படக்குழுவின் புதுமை அறிவிப்பு!

வாழ்க்கையில் சந்தித்த அற்புத அனுபவத்துக்குத் தங்கக் காசுகள் பரிசு: ‘கிரிஷ்ணம் ‘படக்குழுவின் புதுமை அறிவிப்பு!

krishnamசினிமா ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நடந்த அற்புத அனுபவத்தைப் பேசி வீடியோ பதிவு செய்து அனுப்பினால் சுவையான பதிவுக்கு ‘கிரிஷ்ணம்’ படக்குழுவினர் தங்கக் காசுகள் பரிசு வழங்கவுள்ளனர். கிரிஷ்ணம் படக்குழுவின் இந்தப் புதுமையான அறிவிப்பைப் பயன்படுத்திப் பரிசுகளை அள்ளுங்கள்.

கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்துதான் ‘கிரிஷ்ணம் ‘படம் உருவாகியுள்ளது. அந்த ஒருவர் வேறு யாருமல்ல ,இப்படத்தின் தயாரிப்பாளர்தான்.

தனக்கு நேர்ந்த அனுபவத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் ,தானே தயாரிப்பாளராகி பி என்.பலராம் என்பவர் இப்படத்தை எடுத்துள்ளார். ‘கிரிஷ்ணம் ‘ என்கிற இப் படம் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வைக் கொண்டு உருவாகியுள்ளது.

அதே போல தங்கள் வாழ்வில் நிகழ்ந்த, பிறரால் நம்ப முடியாத ஆனால் உண்மையிலேயே நடந்த அற்புதமான அனுபவங்களை அனுப்புவோருக்குத் தங்கக் காசுகள் வழங்க கிரிஷ்ணம்’ தயாரிப்பாளர் முன் வந்துள்ளார்.

அப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர்கள் அதை வீடியோ பதிவாக்கி பேஸ்புக் ,வாட்சப், இன்ஸ்டாகிராம், லைக் , ஷேர் சாட் டிக் டாக், மூலம் அனுப்பி வைத்தால் தங்கக்காசு ஐந்து நாளைக்கு ஒருமுறை வழங்கவுள்ளதாக ‘கிரிஷ்ணம்’ படத்தின் தயாரிப்பாளர் பி.என் பலராம் கூறியுள்ளார். இப்பரிசு மழை ‘கிரிஷ்ணம் ‘படம் வெளியாகும் வரை தொடரும்.
இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். அக்ஷய் கிருஷ்ணன், நாயகனாக நடிக்க . நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சர்வதேச புனே திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

சர்வதேச புனே திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

director vasanth new filmஇயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு 23வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் திரைடப்பட்டு தற்போது சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது

இதற்கிடையில் கடந்தவாரம் சர்வதேச புனே திரைப்பட விழாவில் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது

வீடியோவை பார்க்க – https://youtu.be/SheNN0UUQTI

இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரத்யோகமாக பின்னனி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது குறிப்பிடதக்கது.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

இளையராஜா 75 பட்ஜெட் எவ்வளவு? உடனே நடத்தனுமா? ஐகோர்ட் கேள்வி

இளையராஜா 75 பட்ஜெட் எவ்வளவு? உடனே நடத்தனுமா? ஐகோர்ட் கேள்வி

Highcourt question Producer Council about Ilayaraja 75 event filed caseதிரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இசைஞானி இளையராஜாவுக்கு வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் சென்னையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

இதை பிரம்மாண்டமாக நடத்தபோவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்டோர் நேரில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியானது பொதுக்குழுவின் ஒப்புதல் இன்றி நடைபெறுவதாகவும், சங்கத்தில் இருந்த வைப்பு நிதி ரூ.7.5 கோடியை விஷால் முறைகேடு செய்திருப்பதாகவும் ஒரு சில தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இளையராஜா நிகழ்ச்சிக்கு தடை கோரி, தயாரிப்பாளர் சதீஷ் குமார், என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்தவாரம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சங்கத்தில் இருந்த வைப்பு நிதி என்ன ஆச்சு? விஷால் ஏன் ஆவணங்களை கொடுக்கவில்லை?

இளையராஜாவுக்கு ஏன் மூன்றரைக் கோடி ரூபாய் வழங்க வேண்டும்? நிகழ்ச்சியை ஏன் தள்ளி வைக்க கூடாது?

அந்த நிகழ்ச்சிக்காக செலவிடப்படும் தொகை எவ்வளவு? உள்ளிட்ட பல வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் எவ்வளவு வருமானம்? தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கிடைக்கும் என நாளை ஜனவரி 30 அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Highcourt question Producer Council about Ilayaraja 75 event filed case

More Articles
Follows