நிஜத்தில் எளிமை; திரையில் ஆளுமை.. ரஜினியை புகழும் நவாசுதீன் சித்திக்

நிஜத்தில் எளிமை; திரையில் ஆளுமை.. ரஜினியை புகழும் நவாசுதீன் சித்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nawazuddin Siddiqui talks about his experience in Rajinis Pettaரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கியுள்ள படம் ‘பேட்ட’.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் நடித்துள்ளார்.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், நவாசுதீன் சித்திக் அண்மை பேட்டியில் ரஜினியுடன் நடித்தது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

“ரஜினிகாந்த் அவர்களின் எளிமைதான் அவரை ரஜினிகாந்தாக வைத்துள்ளது.

நிஜவாழ்வில் அவர் எளிமையாக இருப்பதால், திரையில் அவரால் ஒரு ஆளுமையாக இருக்க முடிகிறது.

சிறுவயதிலிருந்து நிறைய ரஜினி படங்களைப் பார்த்திருக்கிறேன். அவரது ஸ்டைல் என்னை மிகவும் பாதித்துள்ளது. எனவே நான் ‘கேங்ஸ் ஆப் வாசிபூர்’ என்ற படத்தில் அவரை காப்பியடித்து நடிக்க முயற்சித்தேன்.” என தெரிவித்துள்ளார்.

Nawazuddin Siddiqui talks about his experience in Rajinis Petta

ஒரே நேரத்தில் 3 மொழி படங்களில் அறிமுகமாகும் திவ்யா கணேஷ்

ஒரே நேரத்தில் 3 மொழி படங்களில் அறிமுகமாகும் திவ்யா கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TV actress Divya Ganesh acting in 3 language moviesசின்னத்திரையிலிருந்து திரையுலகில் நுழைந்து புகழ் பெற்றவர்கள் பலருண்டு. ஷாருக்கான், மாதவன், சிவகார்த்திகேயன், சந்தானம் தொடங்கி பிரியா பவானி சங்கர் வரை இந்தப் பட்டியல் நீளும்.

இந்த வரிசையில் அண்மையில் இணைந்திருப்பவர் தான் திவ்யா கணேஷ்.

தமிழ் பெண்ணான இவர் சொந்த ஊர் இராமநாதபுரம். ஏராளமான தொலைக் காட்சித் தொடர்களில் நடித்திருப்பவர்.

தோற்றம், நடிப்புத் திறமை என ஒரு சினிமா நடிகைக்கான எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கிறார்.

இவர் இப்போது மலையாளத்தில் மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

தாழ்வு மனப்பான்மையும் சந்தேகப் புத்தியும் கொண்ட பெண்ணாக அந்தப் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை மதுசூதனன் என்பவர் இயக்குகிறார்.
அதே போல தெலுங்கில் ஒரு படத்திலும் நாயகியாக நடிக்கிறார் திவ்யா கணேஷ்.

பெரிய திரைக்கு வந்து மலையாளம் தெலுங்குப் படங்களில் வாய்ப்பு பெற்று நடிக்கும். திவ்யா கணேஷ் புதிய தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

திவ்யாவின் கனவு, அதிக தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தானாம். அந்தக் கனவு இந்தப்புத்தாண்டில் நிறைவேறட்டும்.

TV actress Divya Ganesh acting in 3 language movies

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புடன் இணையும் அர்ஜுன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புடன் இணையும் அர்ஜுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu and Arjun team up with Maanadu movieலைகா தயாரிப்பில் சுந்தர் சி இயக்கும் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு.

இப்படத்தை முடித்து விட்டு வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்நிலையில் சிம்புவை மிரட்டும் வில்லனாக அர்ஜுன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கெனவே வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் அர்ஜுன் சிறப்பான ரோலில் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Simbu and Arjun team up with Maanadu movie

ரஜினியிடம் அப்படி என்ன இருக்கு..? பேட்ட டிரைலரை கொண்டாடும் கோலிவுட்

ரஜினியிடம் அப்படி என்ன இருக்கு..? பேட்ட டிரைலரை கொண்டாடும் கோலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

petta trailerரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட பட டிரைலர் நேற்று வெளியானது.

இந்த டிரைலர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால் இதுவரை 11 மில்லியன் பார்வையாளர்களை யூடிப்பில் பெற்றுள்ளது.

இது குறித்து கோலிவுட் பிரபலங்கள் என்ன சொன்னார்கள் என்பது குறித்த ஒரு பார்வை இதோ….

கெளதம் மேனன்: இதுதான் ட்ரெய்லர். இன்னும் இதை அப்படியொரு ட்ரெய்லராகப் பார்க்காதவர்கள் இருக்கிறீர்களா? வாழ்த்துகள் கார்த்திக் சுப்பராஜ். சீன்களுக்கான முன்னோட்டம். ரஜினிஃபைட் தருணத்துக்காகக் காத்திருக்கிறேன் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? ரஜினி சாரை அவருடைய அடையாளங்களுடன் பார்ப்பதில் மகிழ்ச்சி. ரொம்ப இயல்பாக, ஈஸியாக, ஸ்டைலாக, நயமாக இருக்கிறார்.

லாரன்ஸ்: அற்புதம்… அசத்தல்… விவரிக்க வார்த்தைகள் இல்லை. தலைவர் வேற லெவல். கார்த்திக் சுப்பராஜ், சன் பிக்சர்ஸ் நன்றி. பேட்ட ரிலீஸ் நான் உட்பட ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளிதான். குத்து போடுங்க.

தனுஷ்: ரஜினிஃபைட் ஆகுங்கள்… தலைவரின் வேகம், தடுக்க முடியாத அவரது ஸ்டைல் தொடர்கிறது. அவரது ஆளுமையும், அந்த மந்திரமும் பேட்டயில் இருக்கிறது.

சிவகார்த்திகேயன்: பேட்ட ட்ரெய்லரை கொல மாஸ், மரண மாஸ் எது வேண்டுமானாலும் சொல்லலாம். நமது ரஜினிகாந்த் சாரை இப்படிப் பார்ப்பதில் பெரிய மகிழ்ச்சி. ஒட்டுமொத்தக் குழுவுக்கும் வாழ்த்துகள்.

ஆர்யா: செம்ம செம்ம செம்ம… தலைவரிடம் இதைவிட பெட்டராக எதுவும் கேட்க முடியாது. இப்படி ஒரு ட்ரீட் கொடுத்ததற்காக நன்றி கார்த்திக் சுப்பராஜ்.

லட்சுமி ராமகிருஷ்ணன்: இப்போதுதான் பேட்ட ட்ரெய்லர் பார்த்தேன். இதுதான் உண்மையான மரண மாஸ். அவ்வளவு அழகாக இருக்கிறார். சில காட்சிகளில் பார்ப்பதற்கு சிவகார்த்திகேயன் போல் இருந்தார்.

சூப்பர் ஸ்டார் இளமையாக இருக்கிறார். வசீகரிக்கிறார். சிம்ரன் ஒரே ஷாட்டில் உங்களை அடித்துக் காலி செய்துவிட்டார். கார்த்திக் சுப்பராஜிடம் ஏதோ ஒரு மந்திரம் இருக்கு.

குஷ்பூ: மற்ற நடிகர்களிடம் இல்லாத மந்திரம் இந்த ரஜினியிடம் அப்படி என்னதான் இருக்கிறது. அவரிடம் நிச்சயமாகவே ஏதோ சூப்பர் பவர் இருக்கிறது. சார், அந்த மந்திரத்தின் ரகசியத்தைச் சொல்லுங்களேன்…

பேட்ட ட்ரெய்லர் என்னை வசீகரித்துள்ளது. கடைசி சீனில் அவர் நடனமாடிக் கொண்டே நடப்பாரே… அதைப் பார்த்து செத்துவிட்டேன். சூப்பர் ஸ்டார்னா சூப்பர் ஸ்டார்தான்.

ஜீவா: பேட்ட டீமிடம் இருந்து ஒரு மாஸ் ட்ரெய்லர்! ரஜினி ஃபைட் தருணத்துக்காகக் காத்திருக்கிறேன். #PettaTrailer

டிடி: அல்டிமேட் இதுதான். பேட்ட ட்ரெய்லர் தெரிச்சிஃபைட். முழுக்க முழுக்க ரஜினிஃபைட்.

பா.இரஞ்சித்: பேட்ட, நிச்சயமாக பக்கா பொழுதுபோக்குப் படம். வாழ்த்துகள் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் குழுவினர். சூப்பர் ஸ்டார் வேற லெவல். பேட்டக்காகக் காத்திருக்கிறேன்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: முதன்முறையாக எனது பிறந்தநாள் குறித்து மிகுந்த உற்சாகமடைந்துள்ளேன். காரணம், பேட்ட ட்ரெய்லர். வாவ்… ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்.

விக்ரம் பிரபு: வாவ்! சூப்பர் ஸ்டாரின் இந்த மாஸை அனுபவிக்கக் காத்திருக்கிறேன்.

வைபவ்: கடவுளே… இப்படியும் ஒரு வியக்க வைக்கும் மாஸா..? ட்ரெய்லர் பக்கா தலைவா…

ஜெயம் ரவி: மாஸ் ட்ரெய்லர். பேட்டக்காக மரண வெயிட்டிங். ரஜினி சாரின் பெஸ்ட் இதுதான்.

விக்னேஷ் சிவன்: பேட்ட பராக்… ராக்கிங் ட்ரெய்லர். ரஜினிஃபைட் ஆகுங்கள். பேட்ட குழுவிற்கு சபாஷ். சிறப்பான பணி.

சதீஷ்: அடேங்கப்பா… 90-களின் தலைவரை 2018-ல் கொண்டு வந்திருக்கிறீர்கள். பேட்ட மரண மாஸ் தலைவா. நன்றி கார்த்திக் சுப்பராஜ், அனிருத்.

கதிர்: பேட்ட சும்மா அதிருது… வேற லெவல் தலைவர் ரஜினிகாந்த். கார்த்திக் சுப்பராஜ் சார், நீங்கள் எல்லோரையும் ரஜினிஃபைட் ஆக்கிவிட்டீர்கள். இதை இன்னும் பெரிதாக்கியுள்ளீர்கள். இது ஒரு ப்ளாக்பஸ்டராக அமைய மனமார்ந்த வாழ்த்துகள்.

இயக்குநர் திரு: நாங்கள் விரும்பிய தலைவர் இங்குதான் இருக்கிறார்.

இசையமைப்பாளருடன் பிரேமம் கொண்டாரா மடோனா செபாஸ்டின்..?

இசையமைப்பாளருடன் பிரேமம் கொண்டாரா மடோனா செபாஸ்டின்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madonna sebastianதென்னிந்திய சினிமாவை கலக்கிய பிரேமம் என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் மடோனா செபாஸ்டின்.

தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும், கவண், ஜுங்கா படங்களில் நடித்தார்.

தற்போது, சசிகுமார் ஜோடியாக கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ராபி ஆபிரகாமுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை மடோனா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘‘சிலருடன் இருக்கும்போது மட்டும்தான் நாம் நாமாக இருக்க முடியும். அதுதான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் எனது வாழ்க்கையில் இருப்பது அதிர்ஷ்டம்’’ என பதிவிட்டுள்ளார்.

எனவே அந்த நபர் அவரின் காதலான இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மடோனா எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொல காண்டு ரஜினியை தொடர்ந்து கொல மாஸ் அஜித் வருகிறார்

கொல காண்டு ரஜினியை தொடர்ந்து கொல மாஸ் அஜித் வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithவருகிற 2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி நடித்துள்ள பேட்ட படமும், அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படமும் ரீலீசாகவுள்ளது.

இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் இந்த மோதலை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று பேட்ட டிரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

இதில் குடும்பம் பொண்டாட்டி சென்டிமெண்ட் உள்ளவன் எல்லாம் ஓடிப்போயிடு கொல காண்டு இருக்கேன் கொல்லாம விட மாட்டேன் என ரஜினி பன்ச் டயலாக் பேசியிருந்தார்.

இதனையடுத்து சிவா இயக்கியுள்ள விஸ்வாசம் படத்தின் டீசர் அல்லது டிரைலர் வெளியாகுமா? என அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர்.

அவர்களுக்கு விடை கொடுக்கும் விஸ்வாசம் பட எடிட்டர் ரூபன் ட்விட்டர் பக்கத்தில், கொல மாஸாக ஒரு டிரைலர் வருது. விஸ்வாசம் டிரைலர் விரைவில்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இதில் அஜித்துடன் நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

More Articles
Follows