மரண மாஸ்; தலைவர் குத்து… டிரெண்ட்டாகும் *பேட்ட* ரஜினி

மரண மாஸ்; தலைவர் குத்து… டிரெண்ட்டாகும் *பேட்ட* ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Marana Mass Thalaivar Kuthu Rajinis Petta poster goes viralரஜினிகாந்த் நடித்த 2.0 படம் நேற்று முன் தினம் வெளியானது.

அந்த பரபரப்பு அடங்கவே இன்னும் சில நாட்கள் ஆகும் என்ற நிலையில் ரஜினி ரசிகர்களை இன்னும் குஷியாக்க பேட்ட பட போஸ்டர் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள பேட்ட படத்தின் முதல் பாடலை டிசம்பர் 3ஆம் தேதியும் 2ஆம் பாடலை 7ஆம் தேதியும் வெளியிட உள்ளனர்.

மற்ற பாடல்கள் அனைத்தையும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான பேட்ட போஸ்டரில் சிங்கிள் ட்ராக் குறித்த விஷயம் வெளியாகியுள்ளது.

அதில் மரண மாஸ் என்பது பாடல் வரிகளாகும். இது தலைவரின் குத்து என்று விளக்கம் அளித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிள்ளார்.

இதில் ரஜினியுடன் சசிகுமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Marana Mass Thalaivar Kuthu Rajinis Petta poster goes viral

முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 120 கோடியை தொடும் 2.0

முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 120 கோடியை தொடும் 2.0

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First day Box office collection report of 2pointO movieஇந்திய சினிமாவே பெருமைப்படும் வகையில் மிகுந்த பொருட்செலவில் 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து நேற்று முன்தினம் வெளியிட்டது.

ஷங்கர் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியானது.

இப்படத்தை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.

முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 88 கோடியை வசூலித்துள்ளதாகவும் உலகளவில் ரூ. 118 கோடியை தாண்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சென்னையில் முதல்நாளில் 2.64 கோடியையும் 2ஆம் நாளில் 2.13 கோடியையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 20 கோடிக்கு நிகராகவும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மொத்தமாக 19 கோடி வசூல் செய்துள்ளதாம்.

வரி இல்லாமல் 12 கோடி ஷேராக விநியோகஸ்தர்களுக்கு கிடைத்திருக்கிறது.

ஹிந்தியில் 20 கோடி வரை வசூல் செய்திருப்பதாக, பாலிவுட் வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 5 கோடியும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

First day Box office collection report of 2pointO movie

கே.பாலசந்தரிடம் எடிட்டராக பணியாற்றிய வஜ்ரவேல் உருவாக்கும் *லட்டு*

கே.பாலசந்தரிடம் எடிட்டராக பணியாற்றிய வஜ்ரவேல் உருவாக்கும் *லட்டு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Malayalam bilingual film titled Ladduகிரிஸ்டல் கிரியேஷன்ஸ் அமுதா ஆனந்த் தயாரிப்பில் ஐரிஸ் புரொடெக்ஷன்ஸ் P. ராதாகிருஷ்ணன் இணை தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் “லட்டு“- குணமாக சொல்லுங்க.

இப்படத்தை இயக்குனர் சிகரம் K. பாலசந்தர் அவர்களிடம் எடிட்டராக பணியாற்றிய வஜ்ரவேல் ஆனந்த் இயக்குகிறார்.

இப்படத்தின் கதாநாயகனாக குணா பாபு நடிக்கிறார். இவர் இரும்புத்திரை, தமிழ் படம் 2.0, தீரன் அதிகாரம் ஒன்று, காளி போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதுதவிர கேடி (A) கருப்பு துரை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், பஞ்சராக்ஷரம் மற்றும் சூப்பர் டூப்பர் போன்ற படங்களில் வலுவான கதாபாத்திரமேற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

படத்தின் கதாநாயகியாக ஸ்வேதா அறிமுகமாகிறார். குழந்தை நட்சத்திரங்களாக விஷ்வேஷ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோர் நடிக்கியுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதை சொன்னாலும் குணமாக சொல்ல வேண்டும் என்பதை இப்படம் இப்படம் கூறுகிறது. அம்மா இல்லாத இரெட்டையர் இருவரை சிங்கள் பேரெண்ட்டான தந்தை ஒருவர் மட்டும் எப்படி வளர்க்கிறார் என்பதையும் அதை சார்ந்த இன்னும் பல சுவாரசியமான விஷயங்களையும் இப்படத்தின் கதை பேசும்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் துவங்கி ஓக்கேனக்கல், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஒரே ஷெட்யூலாக தொடர்ந்து 35 நாட்கள் நடைபெறவுள்ளது.

இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் பை-லிங்குவல் படமாக வெளியாகவுள்ளது.

Tamil Malayalam bilingual film titled Laddu

laddu bilingual film

ஆளில்லா ஏர் ஆம்புலன்ஸ் தொழில் நுட்ப பயிற்சியில் நடிகர் அஜித்

ஆளில்லா ஏர் ஆம்புலன்ஸ் தொழில் நுட்ப பயிற்சியில் நடிகர் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithவிஸ்வாசம் பட சூட்டிங்கை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக் கழகத்தில் தக்ஷா மாணவர் குழு தயாரித்துள்ள ஏர்- ம்புலன்ஸ் குட்டி விமானத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் ஜெர்மனியில் உள்ள பிரபல விமான தயாரிப்பு நிறுவனத்தில் அஜித்குமார் தொழில் நுட்ப பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

பெரிய விமானங்களில் ஒரு என்ஜின் பழுதுபட்டால் தானாக மாற்று என்ஜின் இயங்கும்.

அதுபோல, தக்க்ஷா மாணவர்கள் தயாரிக்கும் ஆளில்லா ஏர் ஆம்புலன்சிலும் கூடுதல் தொழில் நுட்பத்தை சேர்ப்பதற்காகவே அஜித்குமார் ஜெர்மனியில் உள்ள வெரிகோ நிறுவன அதிகாரிகளின் கருத்தை கேட்டறிந்துள்ளார்.

ஆளில்லா ஏர் ஆம்புலன்ஸ் மூலம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான உறுப்புகளை பாதுகாப்பாக எடுத்து வர இந்த தொழில் நுட்பம் பேருதவியாக இருக்கும் என்கின்றனர் தக்க்ஷா குழுவினர்.

நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் கைது

நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalநடிகர் விஷால் தனது வீட்டின் அருகேயுள்ள ஒரு இளம்பெண்ணின் வீட்டில் இருந்து தினமும் சுவர் ஏறிக் குதித்து ஓடுவதாக கோபாலபுரத்தைச் சேர்ந்த விஸ்வதர்சினி என்ற பெண், மீ டூ இயக்கம் வாயிலாக ஃபேஸ்புக்கில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் பாலியல் ரீதியாக தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக அந்த வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி சார்பில் தேசிய குழந்தைகள் நல ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.

புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில், சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தினர்.

புகார் உண்மையானதால் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விஸ்வதர்ஷினி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதன்பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் விசாரணை நடத்தி விஸ்வதர்ஷினி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

நம்பர் 1 விளையாட்டு; விஜய்-அஜித் ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை.?

நம்பர் 1 விளையாட்டு; விஜய்-அஜித் ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

No 1 game Rajinikanth warns Vijay and Ajith fansகடந்த 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த்.

அவரின் இடத்தை பிடிக்க கடந்த 15 வருடங்களாக விஜய், அஜித் ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனாலும் அவர்களால் முடியவில்லை.

இருந்தபோதிலும் ரஜினி பட வசூலை முறியடிக்க முயற்சி வருகின்றனர்.

ரஜினியின் இடத்தை பிடித்து விட்டால் நம்பர் 1 இடத்தில் வந்து விடலாம் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது.

அவர்கள் கூட அப்படி நினைப்பார்களோ எனத் தெரியவில்லை. ஆனால் அவர்களின் ரசிகர்கள் ரஜினி இடத்தை தல பிடித்துவிட்டார். தளபதி பிடித்துவிட்டார் என்பதை ஒவ்வொரு படம் வரும்போது சொல்வதை வாடிக்கையாக வைத்துள்னர்.

இந்நிலையில் நேற்று வெளியான 2.0 படத்தில் நம்பர் 1 இடத்தை பற்றி ஒரு வரி பன்ச் வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த நம்பர் 1, நம்பர் 2 எல்லாம் பாப்பா விளையாட்டு. The one and Only Super One நான்தான் என்பதுபோல பேசியிருக்கிறார். இது ரஜினி ரசிகர்களிடையை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No 1 game Rajinikanth warns Vijay and Ajith fans

More Articles
Follows