Big Breaking. சூப்பர் ஸ்டார் ரஜினியின் *பேட்ட* பொங்கலுக்கு பராக்

Big Breaking. சூப்பர் ஸ்டார் ரஜினியின் *பேட்ட* பொங்கலுக்கு பராக்

Rajinikanths Petta Pongal Parak release date confirmedகாலா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவித்தது. சில தினங்களுக்கு பின் இப்படத்திற்கு பேட்ட என தலைப்பிட்டு மோசன் போஸ்டரை வெளியிட்டனர்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் ரஜினியுடன் சசிகுமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் செகன்ட் லுக்கில் ரஜினி முறுக்கு மீசையுடன் உள்ள டிசைன் வெளியானது. இது அனைத்து தரப்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இன்று சற்றுமுன் பேட்ட படத்தின் ரிலீஸ் தேதி சன் பிக்சர்ஸ் அறித்துள்ளது. அத்துடன் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

அதில் ரஜினியுடன் சிம்ரன் இருக்கிறார். இப்படம் அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பொங்கலுக்கு பேட்ட பராக் என அறிவித்துள்ளனர்.

Rajinikanths Petta Pongal Parak release date confirmed

Breaking தாணு-தனுஷ் கூட்டணியில் பரியேறும் பெருமாள் பட டைரக்டர்

Breaking தாணு-தனுஷ் கூட்டணியில் பரியேறும் பெருமாள் பட டைரக்டர்

Pariyerum Perumal fame Mari Selvarajs next with Dhanush and Kalaipuli Thanuகபாலி, காலா படங்களை இயக்கிய ரஞ்சித் தயாரிப்பில் வெளியான படம் பரியேறும் பெருமாள்.

மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் கதிர், ஆனந்தி நடித்திருந்தனர்.

விமர்சன ரீதியாக இப்படம் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தனுஷின் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக சற்றுமுன் நடிகர் தனுஷே அறிவித்துள்ளார்.

இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

Pariyerum Perumal fame Mari Selvarajs next with Dhanush and Kalaipuli Thanu

தன் 50வது படத்தில் ஹீரோவின் ப்ரெண்ட்டாக பிரசாந்த்.?

தன் 50வது படத்தில் ஹீரோவின் ப்ரெண்ட்டாக பிரசாந்த்.?

Actor Prashanth act as Heros friend in his 50th movieவைகாசி பொறந்தாச்சு என்ற தமிழ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் தியாகராஜனின் மகன் நடிகர் பிரசாந்த்.

முதல் படத்திலேயே கிராமத்து ரசிகர்களை வரை கவர்ந்தார்.

இதற்கு அடுத்து வெளியான செம்பருத்தி படமும் இவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது.

இதன்பின்னர் ஒரு சில படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் இதன் பின்னர் வெளியான ஷங்கரின் ஜீன்ஸ் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நடித்து இந்தியா முழுக்க பிரபலமானார்.

தற்போது விஜய், அஜீத் இருக்கும் ரசிகர்களைவிட அதிகளவில் பேரும் புகழும் பெற்றார்.

முக்கியமாக ரசிகைகளை அதிகம் பெற்றார். இவருக்காகவே வெளிநாடுகளில் ஸ்டார் நைட் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

ஆனால் சில தோல்வி படங்களால் தன் மார்கெட்டை இழந்தார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜானி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதுவரை 49 படங்களில் நாயகனாக நடித்துள்ளார் பிரசாந்த்.

தற்போது ராம்சரண் உடன் வினய விஜிய ராமா என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு நண்பராக நடித்துள்ளார் பிரசாந்த். இது அவருக்கு 50 வது படம் என கூறப்படுகிறது.

Actor Prashanth act as Heros friend in his 50th movie

Actor Prashanth act as Heros friend in his 50th movie

முன்னாள் முதல்வரை பேட்டி எடுக்க ஆசைப்பட்ட ஜோதிகா

முன்னாள் முதல்வரை பேட்டி எடுக்க ஆசைப்பட்ட ஜோதிகா

jyothikaவித்யா பாலன் நடிப்பில் இந்தியில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘துமாரி சூலு’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டிரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, மூன்று நாட்களில் 30 லட்சம் பார்வையாளர்களை கடந்து தமிழ் சினிமாவையே திகழ்ப்பில் ஆழ்த்தியது.

லக்‌ஷ்மி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், விதார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் யோகி பாபு, சிம்பு ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

பாப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட், கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் கோ.தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம்குமார், லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படம், வரும் நவம்பர் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. டிக்கெட் ரிசர்வேசன் நாளை (நவ.15) தொடங்குகிறது.

இந்நிலையில், ஹெலோ எப்.எம்-க்கு ஜோதிகா அளித்திருக்கும் பேட்டியில் படம் குறித்து பேசியதோடு, தனது திருமண வாழ்க்கை, கணவர் சூர்யா, தனது ரீ எண்ட்ரி குறித்தும் பேசியிருக்கிறார்.

அப்போது, ஜோதிகாவிடம் “நிருபராக நீங்கள் யாரை பேட்டி எடுக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டதற்கு, “மறைந்த முன்னாள் முதல்வரை பேட்டி எடுக்க ஆசை” என்று பதில் அளித்தவர், தற்போது அது சாத்தியமில்லை, என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘காற்றின் மொழி’ படத்தில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசியிருப்பதோடு, பாடல் பாடியதோடு, மிமிக்ரியும் செய்திருக்கிறாராம்.

கணவன் – மனைவி பந்தத்தைப் பற்றியும் பெண்களுக்கான விழிப்புணர்வு படமாகவும் அதே சமயம் பெறியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள ‘காற்றின் மொழி’ அனைவரையும் கவரும் மொழியாக இருக்கும் என்றும் ஜோதிகா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

காஜல் அகர்வாலை கட்டிபிடித்து முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்

காஜல் அகர்வாலை கட்டிபிடித்து முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்

kajal aggarwalபெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் மற்றும் மெஹ்ரின் பிர்ஸாடா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு படம் `கவச்சம்’.

இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் பெலம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மெஹ்ரின் பிர்ஸாடா, காஜல் அகர்வால், இயக்குனர் ஸ்ரீனிவாச மமிலா, இசை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தாமான், ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

எனவே பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தனர்.

காஜல் அகர்வால் மேடையில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு பற்றியும் அவர் பேசினார்.

அப்போது சோட்டா நாயுடு, காஜல் அகர்வாலை அணைத்து முத்தமொன்று கொடுத்தார்

இதனையடுத்து காஜல் அகர்வால் செய்வது அறியாது ஒருவழியாக சமாளித்தார்.

இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் காஜல் ரசிகர்கள் #BanChotaKNaidu என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ஒளிப்பதிவாளரை விமர்சித்து வருகின்றனர்.

வடசென்னை மக்களை அசிங்கப்படுத்திட்டீங்க..; பார்ட் 2 வேண்டாம் ப்ளீஸ்

வடசென்னை மக்களை அசிங்கப்படுத்திட்டீங்க..; பார்ட் 2 வேண்டாம் ப்ளீஸ்

vada chennaiவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த படம் வடசென்னை.

இதில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா, அமீர், சமுத்திரகனி, கிஷோர் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இது 3 பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகம் மட்டும் வெளியாகிவிட்டது.

இப்படத்திற்கு பலர் பாராட்டு தெரிவித்தாலும் ஏகப்பட்ட கெட்ட கெட்ட வார்த்தைகளை படத்தில் வடசென்னை மக்கள் பேசுவதாக காட்டியிருந்தார் டைரக்டர்.

மேலும் வடசென்னை என்றாலே அசிங்கம், கொலை, குற்றம் ஆகியவற்றை பிரதானமாக காட்டியிருந்தார்.

இந்நிலையில் பா.ரஞ்சித்தின் கூகை இயக்கம் சார்பில் ‘வடசென்னை’ குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் வெற்றிமாறன் பதில் அளித்தார்.

அப்போது கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒருவர், “வடசென்னை’யைப் பற்றி இவ்வளவு கேவலமாகச் சித்தரித்துக் காட்டியுள்ளீர்கள்.

இரவு நேரத்தில், ’வடசென்னைக்கு ஆட்டோக்காரர்கள் கூட வரமாட்டார்கள். எனவே தயவுசெய்து ’வடசென்னை’ 2 எடுக்கவே எடுக்காதீர்கள்.

போதும். முதல் பாகத்திலேயே ஒட்டுமொத்த வடசென்னை மக்களை இப்படி அசிங்கப்படுத்திவிட்டீர்கள்” என்றார்.

More Articles
Follows