‘ஒத்த செருப்பு’ ரீமேக்; பேட்ட வில்லனுடன் இணையும் பார்த்திபன்

‘ஒத்த செருப்பு’ ரீமேக்; பேட்ட வில்லனுடன் இணையும் பார்த்திபன்

Petta villain Nawazuddin Siddiqui in Oththa Seruppu remakeகோலிவுட்டில் வித்தியாசமான சிந்தனைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் இயக்குனர் பார்த்திபன்.

அண்மைக்காலமாக நடிப்பை மட்டும் தொடர்ந்து வந்த இவர் அண்மையில் ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி தான் ஒருவர் மட்டுமே அந்த படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் தென்னிந்தியளவில் பலரின் பாராட்டைப் பெற்றது.

தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறாராம்.

இதுகுறித்து பார்த்திபன் பதிவிட்டுள்ளதாவது..

“ஒத்த செருப்பு படத்தை இந்தியில் நவாசுதீன் சித்திக்கை ‘வச்சி செய்ய’ இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று
வருகிறது” என பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நவாசுதீன் சித்திக் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Petta villain Nawazuddin Siddiqui in Oththa Seruppu remake

தர்பாரில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தாடி ரகசியம் என்ன?

தர்பாரில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தாடி ரகசியம் என்ன?

Why Rajini have beard look in Darbar movie Police roleமுருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள படம் தர்பார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தில் போலீஸ் கமிஷ்னர் வேடத்தில் நடித்துள்ளார் ரஜினி.

இதற்கு முன்பு அலெக்ஸ் பாண்டியன், கொடி பறக்குது, பாண்டியன் உள்ளிட்ட படங்களில் போலீசாக நடித்திருந்தார். இவை அனைத்திலும் போலீஸ் கேரக்டர் சிறியளவிலேயே இருந்தது.

தற்போது முதன்முறையாக முழு நீள போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். அதுவும் தாடி வைத்துள்ளார்.

பொதுவாக போலீஸ்காரர்கள் தாடி வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் ரஜினி தாடி வைத்திருப்பதன் காரணம் குறித்து முருகதாஸ் தன் அண்மை பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உடலில் ஏதாவது அலர்ஜி தொடர்பான பிரச்சினை இருந்தால் தாடி வைத்துள்ள கொள்ள அனுமதி உண்டாம். அதுபோல் மத ரீதியாக அதாவது சபரிமலைக்கு மாலை போட்டு இருந்தால், சீக்கிய மதம், சிங் மதம் உள்ளிட்ட நபர்கள் தாடி வைத்துக் கொள்ள அனுமதியுண்டு.

இதுபோல் தாடிக்கான ரகசியத்தை வைத்திருக்கிறாராம். படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. அன்றைக்கு தெரிந்துவிடும் தானே.. காத்திருப்போம்.

Why Rajini have beard look in Darbar movie Police role

கதை திருட்டு சர்ச்சை.; பாக்யராஜ் & முருகதாஸ் மறைமுக தாக்குதல்

கதை திருட்டு சர்ச்சை.; பாக்யராஜ் & முருகதாஸ் மறைமுக தாக்குதல்

Directors Bhagyaraj and Murugadoss recent talk on Story theft moviesகோலிவுட்டில் கதை திருட்டு சர்ச்சைகள் சமீபத்தில் அதிகமாக அதிகரித்துள்ளன.

கடந்த வருடம் முருகதாஸ் இயக்கிய சர்கார் பட விவகாரம் கதை திருட்டு சர்ச்சையால் பெரிதாக பேசப்பட்டது. இதில் எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் தலையிட்டு கதை திருடப்பட்டது என அறிவித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கே.பாக்யராஜ்… அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என சுட்டு கதை பண்ணுபவர்கள் ஒருநாளும் தேறமாட்டார்கள். அவர்களால் சினிமாவில் நீடிக்க முடியாது என்று பேசியிருந்தார்.

தற்போது இதற்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளார் என முருகதாஸ் என தெரிகிறது.

அவரின் பேட்டியில்… ஒரு பாட்டிலை பற்றி கதை எழுதியிருந்தால், மூடியை வைத்து நான் கதை பண்ணியிருக்கிறேன். அதனால் பாட்டிலுக்கும் மூடிக்கும் தொடர்பு உள்ளது என்று ஒரு பிரச்னையை உருவாக்கி விடுகிறார்கள்.

இப்படி எல்லாரும் எதிர்க்க புறப்பட்டால் யாருமே கதை பண்ண முடியாது என தெரிவித்துள்ளார் தர்பார் டைரக்டர்.

நல்லவேளை தர்பார் படத்திற்கு கதை திருட்டு பிரச்சினை இதுவரை இல்லை.

Directors Bhagyaraj and Murugadoss recent talk on Story theft movies

மக்கள் அன்புக்கு நான் என்ன சொல்றதுன்னே தெரியலை… ரஜினி உருக்கம்

மக்கள் அன்புக்கு நான் என்ன சொல்றதுன்னே தெரியலை… ரஜினி உருக்கம்

Rajinis sentiment at Darbar Pre relese event held at Hyderabadஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இதன் தெலுங்கு பதிப்பு வெளியீட்டுக்காக ஐதராபாத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் ரஜினி, தயாரிப்பாளர் சுபாஷ்கரன், முருகதாஸ், அனிருத், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்ற்னர்.

ரஜினி பேசும்போது… “1976ம் ஆண்டு நான் தெலுங்கில் நடிச்ச அந்துலேனி கதா படம் ரிலீசானது.

இங்க இருக்கிறவங்கள்ல 99% பேர் அப்போ பிறந்திருக்கவே மாட்டீங்க.

தமிழ் ரசிகர்கள் மாதிரியே என் மேல தெலுங்கு ரசிகர்களும் அன்பு செலுத்துறீங்க. இது எனக்கு கிடைச்ச பாக்கியம்.

என் நிறைய படங்கள் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கு.

பெத்த ராயுடு, பாட்ஷா, நரசிம்மா, சந்திரமுகி, ரோபோ அப்படின்னு நிறைய படங்கள் ஓடிருக்கு. அந்த நல்ல படங்கள்ல நானும் இருந்தேன். அதனால ரசிச்சாங்க. ஆனா எனக்காக ஓடல.

நான் இதுவரை 160 படங்கள் மேல பண்ணியிருக்கேன். தர்பார் படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம். தர்பார் பட சூட்டிங்கின் போதே நிறைய மேஜிக் நடந்திருக்கு.

நீங்க என் மேல வச்சிருக்கிற அன்புக்கு நான் என்ன சொல்றதுன்னே தெரியலை, உங்க எல்லாருக்கும் கடவுள் ஆசீர்வாதம் நிச்சயம் கிடைக்கட்டும்.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Rajinis sentiment at Darbar Pre relese event held at Hyderabad

லைஃப்ல எல்லாமே கொஞ்சமாக செய்யுங்க.; ஹைதராபாத்தில் ரஜினி பேச்சு

லைஃப்ல எல்லாமே கொஞ்சமாக செய்யுங்க.; ஹைதராபாத்தில் ரஜினி பேச்சு

Rajini mass speech at Darbar Pre release event at Hyderabad முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வருகிற ஜனவரி 9ஆம் தேதி படம் ரிலீசாகவுள்ளது.

லைகா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உலகமெங்கும் வெளியிட உள்ளனர்.

எனவே இதன் புரோமோசனில் தீவிர கவனம் செலுத்து வருகிறது படத்தயாரிப்பு நிறுவனமான லைகா.

இந்த நிலையில் இதன் தெலுங்கு பதிப்பு புரோமோசனுக்கு (PRE RELEASE EVENT) ரஜினி, முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் ஹைதராபாத் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

அந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது…

”நீங்கள் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்? என பலரும் கேட்கிறார்கள். அது… கொஞ்சமாக ஆசைப்படுங்கள்,, கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக வருத்தப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிட்டுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக பேசுங்கள் இவ்வாறு இருந்தாலே சுறுசுறுப்பாக சந்தோசமாக இருக்கலாம்”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

மேலும் பாகுபலிக்கு நிகராக பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Rajini mass speech at Darbar Pre release event at Hyderabad

ரஜினி & அனிருத்துக்கு திரையிசை கலைஞர்கள் சங்கம் கண்டனம்

ரஜினி & அனிருத்துக்கு திரையிசை கலைஞர்கள் சங்கம் கண்டனம்

Music directors association leader Dheena condemned Rajini and Anirudhரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சும்மா கிழி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகீறது.

இந்த படம் வருகிற ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரஜினி, அனிருத்துக்கு எதிராக திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதாவது தர்பார் படத்தில் மட்டும் 450க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்களாம். அவர்களில் 5 பேருக்கு மட்டுமே திரை இசை கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களாம்.

இது குறித்து திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா கூறும்போது,…

பேட்ட படத்தின் போதே இசையமைப்பாளர் அனிருத்திடம் சங்கத்தில் இருக்கும் இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்து அவரின் அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக கூறினார்.

ஆனால், தர்பார் படத்திலும் சங்க கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தரவில்லை. இந்த விஷயம் ரஜினி அவர்களுக்கும் தெரியும்.
இதனால், ரஜினி மற்றும் அனிருத்துக்கு திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கிறோம்’ என தீனா பேசினார்.

Music directors association leader Dheena condemned Rajini and Anirudh

More Articles
Follows