தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லக்கி மேன்’.
இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ரோல்டன் இசையமைத்துள்ளார்.
‘லக்கி மேன்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
‘லக்கி மேன்’. திரைப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Yogi Babu’s ‘Lucky Man’ movie to release on THIS date