யோகிபாபுவின் ‘லக்கி மேன்’ பட உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

யோகிபாபுவின் ‘லக்கி மேன்’ பட உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் ‘லக்கி மேன்’.

இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

‘லக்கி மேன்’ படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘லக்கி மேன்’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

மேலும், ‘லக்கி மேன்’ திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லக்கி மேன்

Yogi Babu’s ‘Lucky Man’ tamilnadu theatrical rights famous company has acquired

24 கேமராக்கள்.. 81 நிமிடங்கள்.; உலக சாதனை படைத்த பாக்யராஜ் படம்..: விரைவில் ரிலீஸ்

24 கேமராக்கள்.. 81 நிமிடங்கள்.; உலக சாதனை படைத்த பாக்யராஜ் படம்..: விரைவில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் நடிப்பில் இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் 3.6.9 புதிய படத்தின் படப்பிடிப்பு வெறும் 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் பல்வேறு புதிய முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் தற்போது புதிய சாதனை ஒன்றை தமிழ் திரையுலகில் அறிமுக இயக்குநர் சிவ மாதவ் படைத்துள்ளார்.

கே.பாக்யராஜ்

இந்த திரைப்படத்தை சுமார் 81 நிமிடங்களில் 24 கேமராக்களை கொண்டு படமாக்கி இப்படக்குழு மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தின் கதை நாயகனாக பிரபல இயக்குனரும். நடிகருமான பாக்யராஜ் நடிக்க பி ஜி எஸ் வில்லனாகவும் பிளாக் பாண்டி, அங்கயர் கண்ணன், சுகைல்,பிரபு, கார்த்திக், கோவிந்தராஜன், சுபிக்ஷா செபி, நிகிதா, பப்லு போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் 60-க்கும் மேற்பட்ட நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். அதில் வெளிநாட்டை சேர்ந்த சில நடிகர்களும் நடித்துள்ளனர்.

கே.பாக்யராஜ்

இந்த படத்திற்கு மாரீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ஹர்ஷா என்பவர் இசையமைத்துள்ளார். ஆ.கே.ஸ்ரீநாத் எடிட்டிங் செய்கிறார். கலை இயக்குனராக ஸ்ரீமன் பாலாஜி பணிபுரிந்துள்ளார்.

ஒரே நேரத்தில் 24 கேமராக்களை கொண்டு இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் படம்பிடிக்கப்பட்டது.

இந்த படத்தின் உருவாக்கத்திற்காக சுமார் 600 தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர். நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஹரிபா ஹனிப் நடுவராக இருந்து, இந்த படத்தின் உருவாக்கத்தை நேரில் பார்வையிட்டு, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் என்ற அமைப்பு இந்த 3.6.9 படத்திற்கு உலக சாதனை விருதை வழங்கி உள்ளது.

இத்திரைப்படம் முழுக்க, முழுக்க விஞ்ஞானம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது..

கே.பாக்யராஜ்

நடிகர் பாக்யராஜ் கூறுகையில்…..

3.6.9 திரைப்படத்தை சுமார் 81 நிமிடங்களில் படமாக்கி உலக சாதனபடைத்துள்ளார்கள்
இதில் நானும் பங்கு பெற்றேன் என்பது எனக்கு மிகுந்த சந்தோஷம்.

இதற்கு முயற்சி எடுத்த இயக்குனர் சிவ மாத மற்றும் தயாரிப்பாளர் பிஜிஎஸ் க்கு வாழ்த்துக்கள்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 25 உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது இந்த புது முயற்சிக்கு ஆதரவு தந்து வெற்றி பெற செய்ய ரசிகர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

கே.பாக்யராஜ்

Bhagyaraj starter 3 6 9 made Guinness record

என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம்..; 64 வருடத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்த கமல்

என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம்..; 64 வருடத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்த கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஆகஸ்ட் 12… தனது 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் அறிமுகமானார் கமல்ஹாசன்.

முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசு தலைவர் விருதைப் பெற்றவர் இவர்.

இந்தப் படம் வெளியாகி இன்றோடு 63 வருடங்கள் முடிந்து 64 வது வருடம் தொடங்குகிறது. எனவே அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் 64-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் கமல்.

தன் ட்விட்டர் பக்கத்தில்…

“64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள், என் மக்களுக்காக. உங்கள் நான்” என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

Kamal thanks note for 64 years of Kamalism

காதலுக்காக வாழ்க்கையை இழக்காதீர்.; ‘குக் வித் கோமாளி’ புகழ் சொல்லும் கருத்து

காதலுக்காக வாழ்க்கையை இழக்காதீர்.; ‘குக் வித் கோமாளி’ புகழ் சொல்லும் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ்.

இதைத்தொடர்ந்து, ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘டி.எஸ்.பி’, ‘யானை’, ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், புகழ் தற்போது ‘துடிக்கிறது மீசை’ என்ற படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார்.

இப்படத்தில் வர்ஷினி, அக்ஷதா ஆகியோர் நாயகிகளாக நடிக்க, முருகதாஸ், மாறன், யோகிதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை எம்.ஜே.இளன் டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, “காதல் தவறில்லை. ஆனால் காதலுக்காக வாழ்க்கையை அழித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை வீணடிப்பது தவறு என்று சொல்கிற கதை இது. காதலில் விழுந்து தன்னை அழித்துக் கொள்ளும் இளைஞர்களைப் பற்றி படம் பேசுகிறது. மதுரையில் இருந்து சென்னைக்குப் பயணிக்கும் கதையை காதல், நகைச்சுவை கலந்து கூற இருக்கிறோம்” என்றார்.

pugazh acting as hero role in ‘thudikkiradhu meesai’ movie

அன்று சாதி இல்லை.. இன்று மனிதநேயமே இல்லை.; எங்கே போகிறது என் நாடு.; MS பாஸ்கர் வேதனை

அன்று சாதி இல்லை.. இன்று மனிதநேயமே இல்லை.; எங்கே போகிறது என் நாடு.; MS பாஸ்கர் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் சாதி கொடுமையால் பள்ளி மாணவர் அவரது தங்கை இருவரும் தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் சக மாணவர்களிடையே தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

‘சாதிகள் இல்லையடி பாப்பா..’ என்று பாடம் படிக்கும் மாணவர்களே இப்படி சாதி என்னும் தீயில் சாதி வெறியில் திரிவதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து திரைப்பட நடிகர் எம் எஸ் பாஸ்கர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த கவிதை அறிக்கையில்…

“வேற்றுமை கூடாது என்பதற்காகத்தானே மாணவ மாணவியர்க்கு சீருடை….

மாணவனை மாணவர்களே கொடுமையாக தாக்குவது எவ்வகையில் நியாயம்…

சின்னதுரை படிக்கக்கூடாதா…
சிறந்து விளங்கக்கூடாதா…

பிஞ்சு மனங்களில் நஞ்சா….
சிரத்தில் அறிவை இழந்து கரத்தில் அரிவாளை ஏந்துவதா….

சாதி இரண்டொழிய வேறில்லை என்று ஔவை மூதாட்டி எழுதியது பொய்யா….

கற்காலத்தில் சாதி இல்லை…
தற்காலத்தில் மனிதநேயமே இல்லை….
எங்கே போகிறது என் நாடு…..
என்ன சொல்வது என்றே புரியவில்லை..

நாங்குநேரி மாணவன் மீதும் அவரது சகோதரி மீதும் நடந்த தாக்குதலை கனத்த இதயத்தோடு வன்மையாக கண்டிக்கிறேன்….
இச்சம்பவத்தால் அதிர்ச்சியில் உயிரிழந்தவருக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

தவறு செய்தவர்கள் யாராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!

இனி வரும் காலத்தில் இவ்வாறு நிகழா வண்ணம் சட்டம் தன் கடமையை கடுமையாக செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்….

சின்னதுரையும் அவரது சகோதரியும் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

– வேதனையுடன் எம்.எஸ்.பாஸ்கர்.

MS Baskar emotional statement about Students caste issue

சத்யராஜ் தாயார் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

சத்யராஜ் தாயார் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (94).

இவர் கோவையில் வசித்து வந்தார்.

நாதாம்பாள் வயது மூப்பின் காரணமாக நேற்று (அக்டோபர் 11) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார்.

நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

நாதாம்பாளுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “நண்பர் சத்யராஜ் அவர்களின் தாயாரும், இளவல் சிபி சத்யராஜ் அவர்களின் பாட்டியுமான திருமதி. நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். அன்னையை இழந்து வாடும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Sathyaraj’s mother dies Kamal Haasanexpress their condolences

More Articles
Follows