சிவகார்த்திகேயன் – ஏஆர்.முருகதாஸ் கூட்டணியில் பான் இந்தியா நடிகை

சிவகார்த்திகேயன் – ஏஆர்.முருகதாஸ் கூட்டணியில் பான் இந்தியா நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் ஈவன்ட் ஜூலை 2ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படங்களை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன்.

இதில் நாயகியாக சாய் பல்லவி நடிக்க ஜீவி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படங்களை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘சீதா ராமம்’ பட நாயகி மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மிருணாள் தாகூர்

Pan India Actress in Sivakarthikeyan – AR Murugadoss movie

தேவர் மகன் – சின்னக் கவுண்டர் ஜாதிப் படங்கள் பிரச்சினையில்லை.; ஆனால் இன்று..; பேரரசு ஆவேசம்

தேவர் மகன் – சின்னக் கவுண்டர் ஜாதிப் படங்கள் பிரச்சினையில்லை.; ஆனால் இன்று..; பேரரசு ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் பிரபலமான மாவட்டம் மற்றும் ஊர் பெயர்களை தன் படத்திற்கு வைத்தவர் இயக்குநர் பேரரசு.

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, தர்மபுரி என இவரது படங்களுங்கு பெயர்கள் வைக்கப்பட்டன.

சமீபகாலமாக இவர் படங்களை இயக்காமல் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு பரபரப்பான தலைப்புகளை பேசி வருகிறார்.

இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் மற்றும் தமிழகத்தில் ஊடுருவும் ஜாதி அரசியலைப் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

ஊரில்
நாடார் கடை
செட்டியார் மில்
ஐயர் ஹோட்டல்
என்று நாம் அழைத்தபோது
எந்த பிரச்சனையும் இல்லை!

வ.உ.சிதம்பரம்பிள்ளை
முத்துராமலிங்கத் தேவர்
உ.வே.சுவாமிநாத அய்யர்
ராமசாமி படையாச்சி
சரோஜினி நாயுடு
இப்படி வரலாறு படிக்கும்போது
நாட்டில்
எந்தப் பிரச்சினையும் இல்லை!

ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்பதைக்கூட
கோனார் தமிழ் உரையில்தானே
படித்தோம்
அப்பொழுது நமக்குள்
பேதங்கள் தோன்றவில்லை!

ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார்
வாகினி நாகிரெட்டி
தேவர் பிலிம்ஸ் சின்னப்ப தேவர்
சிவஶ்ரீ பிக்சர்ஸ் மணி அய்யர்
இப்படி தயாரிப்பாளர்களை
ஜாதியைச் சொல்லி அழைத்தபோது
திரைத்துறையில்
எந்தப் பிரச்சினையும் இல்லை!

குறத்தி மகன்
தேவர் மகன்
சின்னக் கவுண்டர்
அய்யர் தி கிரேட்
இப்படி ஜாதிப் பெயரில்
படங்கள் வந்தபோதும்
எந்தப் பிரச்சினையும் இல்லை!

இன்று
தொட்டதெற்கெல்லாம்
ஜாதிப் பிரச்சனை!
யார் காரணம்?

ஜாதி, மதம் மறந்து
கலைஞனாக மட்டுமே
தன்னை அர்ப்பணித்தவர்களுக்குள்
ஜாதி வெறியை வித்திட்டவர்கள்
யார்?

இன்று
உடன் பணிபுரிபவரின்
ஜாதியை எவனும்
ஆராய்வதில்லை!
மீண்டும் அந்த
ஆராய்ச்சியை
ஆரம்பித்து வைத்துவிடாதீர்கள்!

வாய்ப்பு கேட்பவனிடம்
எவன் ஜாதியை கேட்கிறானோ
அவனே மனிதப்பிழை!

பெரும்பாலும்
சமநிலை அமைந்துவிட்ட நிலையில்
மீண்டும் ஒற்றுமைக்கு
சமாதி கட்டிவிடாதீர்கள்!
தெளிந்த குளத்திற்குள்
பாறாங்கல்லை எறியாதீர்கள்
ஜாதிப்பற்று மனித இயல்பு
ஜாதி வெறி மனிதத்தின் அழிவு!

*பேரரசு*

Director Perarasu about Caste politics in TN

பர்வீன் கேரக்டரை செய்ய ரொம்ப பயந்தேன்..; அச்சத்தில் ஆயிரா

பர்வீன் கேரக்டரை செய்ய ரொம்ப பயந்தேன்..; அச்சத்தில் ஆயிரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VZ துரை இயக்கத்தில் சுந்தர் சி, ஆயிரா, தம்பி ராமையா, பாலக் லல்வாணி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 23ஆம் தேதி வெளியான படம் ‘தலைநகரம் 2’.

இன்று திங்கட்கிழமை ஜூன் 26 ஆம் தேதி இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஆயிரா பேசியதாவது…

இது ரொம்ப சந்தோஷமான தருணம். எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் V Z துரை சாருக்கு நன்றி. நான் இந்த பர்வீன் கதாப்பாத்திரத்தை செய்ய முடியுமா ? என பயந்தேன், ஆனால் துரை சார் ஊக்கம் தந்து செய்ய வைத்தார். சுந்தர் சி சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்தப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.

இணை தயாரிப்பாளர் மதுராஜ் பேசியதாவது…

நண்பன் துரை உடன் இணைந்து, இந்தப்படத்திற்காக 2,3 வருடம் உழைத்துள்ளோம்.

பிரபாகரன், விவேகானந்தன் சார், ரவி அண்ணன் என எங்களுக்கு நல்லது நினைக்கும், நல்ல உள்ளங்கள் உடனிருந்தார்கள். இந்தப்படம் பல தடைகளைத் தாண்டித் தான் வந்தது.

ரிலீஸே ஆகாது எனப் பலர் சொன்னார்கள் ஆனால் இப்போது படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம். ஒரு படத்திற்குப் பின்னால் ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கை இருக்கிறது அதை மனதில் வைத்து விமர்சனம் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை மதிக்கிறோம், எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி.

Actress Ayira open talk about Thalainagaram 2 character

‘தலைநகரம் 2’ படத்திற்கு இவ்ளோ தியேட்டரா.? துரை சொல்லியும் நம்பமறுத்த சுந்தர் சி.

‘தலைநகரம் 2’ படத்திற்கு இவ்ளோ தியேட்டரா.? துரை சொல்லியும் நம்பமறுத்த சுந்தர் சி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்

இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது…

வழக்கமான இந்த மாதிரி விழாக்களில் தான் நன்றி சொல்ல வேண்டும் ஆனால் இம்மாதிரி விழாக்களே நடப்பது அரிதாகிவிட்டது. அதனால் இசை விழாவிலேயே எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுகிறோம்.

நான் இந்தப்படத்திற்கு எத்தனை தியேட்டர் என துரையிடம் கேட்டேன் அவர் 350க்கும் அதிகம் என்று சொன்ன போது, பயந்துவிட்டேன்.

இப்போதெல்லாம் ரிலீஸாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் ஷோ கேன்சலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம்.

பெரிய ஹீரோக்கள் படங்களுக்குத் தான் 300+ தியேட்டர் போடுகிறார்கள். அதனால் தான் பயந்தேன். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி தலைநகரம் 2 திரையரங்குகளில் ஓடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. தலைநகரம் 2 ஒரு எமோஷனல் ஆக்சன் மூவி. ஒவ்வொரு ஆக்கனுக்குப் பின்னும் எமோஷன் இருக்கும்.

நான் நாலு பேரை அடிக்கிறேன் என்பதை நம்பும்படி எடுத்திருந்தார். தியேட்டரில் பார்த்து விட்டு நிறையப் பேர் என்னைப் பாராட்டினார்கள்.

இந்தப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் வெற்றிக்கு அவர்களே சாட்சி. இப்படத்தை வெற்றி பெறச் செய்த மக்களுக்கும் உங்களுக்கும் என் நன்றிகள்.

Sundar C speech at Thalainagaram 2 thanks meet

‘தலைநகரம் 2’ படத்தில் வடிவேலு இல்லாமல் சுந்தர் மட்டும் ஏன்? வெற்றி விழாவில் துரை பேச்சு

‘தலைநகரம் 2’ படத்தில் வடிவேலு இல்லாமல் சுந்தர் மட்டும் ஏன்? வெற்றி விழாவில் துரை பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VZ துரை இயக்கத்தில் சுந்தர் சி, ஆயிரா, தம்பி ராமையா, பாலக் லல்வாணி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 23ஆம் தேதி வெளியான படம் ‘தலைநகரம் 2’.

இன்று திங்கட்கிழமை ஜூன் 26 ஆம் தேதி இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் VZ துரை பேசியதாவது..

தலைநகரம் 2 எடுக்க ஆரம்பித்ததிலிருந்தே தலைநகரம் 1 பற்றி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அது மிகப்பெரிய வெற்றிப்படம். வடிவேலு சார் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

என் படத்தில் காமெடியே இல்லை ஏன் இந்தப்படம் எடுத்தேன் என்றால், இந்தக்கதை ஒரு எக்ஸ் ரௌடி பற்றியது. அதற்கு ஏற்கனவே ரௌடியாக நடித்து ஃபேமஸான ஒருத்தர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

சுந்தர் சார் ஏற்கனவே தலைநகரம் பண்ணியிருந்ததால் அவரை வைத்து கதை செய்யலாம் என அவரிடம் கேட்டேன், எந்த தயக்கமும் இல்லாமல் உடனே செய்யுங்கள் என்றார். எங்களுக்காக ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார் டைட்டில் தந்தார். இப்போது படம் பார்த்த மக்கள் தலைநகரம் முதல் பாகத்தை விட நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்தப்படத்திற்கு காமெடி தேவையில்லை என்று அவர்களே சொல்வது மகிழ்ச்சி. இந்தப்படத்திற்கு 300 தியேட்டர்களா ?

வேண்டாம் என்றேன் அவர்களே கேட்கிறார்கள் என்றார்கள் இப்போது 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது .

நிறைய தியேட்டரில் படத்தைக் கேட்டு வாங்கி ஓட்டுகிறார்கள். மகிழ்ச்சி. முக்கியமாக இந்தப்படத்திற்கு ஆதரவு தந்த பத்திரிக்கையாளர்களாகிய உங்களுக்கு நன்றிகள். உங்கள் விமர்சனம் படத்திற்கு பெரிய வரவேற்பு தந்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபாகரனுக்கு நன்றி.

இணை தயாரிப்பாளர் நண்பன் மது என்னோட எல்லா துக்கத்தையும் அவனிடம் தான் பகிர்ந்து கொள்வேன் அவனுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

VZ Dhorai speech at Thalainagaram 2 thanks meet

காமெடி நடிகரின் மகனுடன் காதல்.; மகள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிய அர்ஜூன்

காமெடி நடிகரின் மகனுடன் காதல்.; மகள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிய அர்ஜூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அர்ஜுன் -நிவேதிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன்.

இவர் 2013- ஆம் ஆண்டு ‘பட்டத்து யானை’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்த கதாபாத்திரம் பாராட்டுக்களை பெற்றது.

தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான ‘சொல்லிவிடவா’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

நடிகை ஐஸ்வர்யாவுக்கும், நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் காதல் மலர்ந்துள்ளது.

நடிகர் உமாபதி 2017-ஆம் ஆண்டு வெளியான ‘அதாங்கப்பட்டது மகாஜனங்களே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான. பின்னர், ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’, ‘தண்ணி வண்டி’, ‘சேரன்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இருவரும் 2021-ஆம் ஆண்டு அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ என்ற ஒரு நிகழ்ச்சிக்காக தென் ஆப்பிரிககா சென்றபோது நட்பு ஏற்பட்டு பிறகு காதல் வயப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள்.

தற்போது ஐஸ்வர்யா -உமாபதி இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

அதன் படி, நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடத்த இருப்பதாகவும், அப்போது திருமண தேதியை முடிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Arjun’s Daughter Aishwarya To Marry Thambi Ramaiah’s Son Umapathy

More Articles
Follows