DSP இசையில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா.; நாயகி யார் தெரியுமா.?

DSP இசையில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா.; நாயகி யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் நாக சைதன்யா. தற்போது இவரது 23வது படம் குறித்த அப்டேட்டுகள் கிடைத்துள்ளன. இதில் மீனவர் கேரக்டரில் நடிக்கிறார்.

நாயகியாக சாய் பல்லவி நடிக்க இந்த படத்தை ‘கார்த்திகேயா’ பட இயக்குனர் சேன்டோ மோன்டடி இயக்கவிருக்கிறார்.

இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பார் என கூறப்பட்ட நிலையில் தற்போது டிஎஸ்பி என்று அழைக்கப்படும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Naga Chaitanya and Sai Pallavi in DSP music

தமிழக கோயிலில் ரஜினி பெயரில் அர்ச்சனை செய்த சத்யநாராயணா

தமிழக கோயிலில் ரஜினி பெயரில் அர்ச்சனை செய்த சத்யநாராயணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்தவர் ரஜினிகாந்த். அதன் பிறகு அவரது அண்ணன் சத்திய நாராயணா பாதுகாப்பில் வளர்ந்தார். எனவே தன் அண்ணன் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் ரஜினிகாந்த்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் தாதா சாகேப் பால்கே விருதை பெற்ற ரஜினிகாந்த் அப்போதும் அனைவருக்கும் நன்றி கூறும் போது மறவாமல் தன்னுடைய நண்பர்கள் மற்றும் தன் அண்ணன் பெயரை குறிப்பிட்டு பேசி இருந்தார்.

அதுபோல தன் தம்பி ரஜினி மீது அளவற்ற பாசம் வைத்திருப்பவர் சத்யநாராயணன்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கருவலூர் கருணாகர வெங்கட்ராமன் பெருமாள் கோயிலில் ரஜினிகாந்த் பெயரில் அர்ச்சனை செய்துள்ளார் சத்திய நாராயணா.

Rajini brother Sathya Narayana done Archanai at Perumal Temple

மக்களுக்கு கெட்டவனை பிடிக்கிறது.; ரோட்டில் படம் எடுப்பவர் ராஜூமுருகன்.. அசத்திய அனு.. – கார்த்தி

மக்களுக்கு கெட்டவனை பிடிக்கிறது.; ரோட்டில் படம் எடுப்பவர் ராஜூமுருகன்.. அசத்திய அனு.. – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் ராஜூமுருகன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஜப்பான்’. இந்த படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10ஆம் தேதி ரிலீசாகிறது.

இந்த படம் தொடர்பாக கார்த்தி அளித்துள்ள சுவாரசிய பேட்டி இதோ…

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது.

உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா?

ஆம். ஆனால் அப்போது ஜப்பான் என்று பெயர் வைக்கவில்லை. இப்படி ஒருவனை சமுதாயம் உருவாக்கியிருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. அவன் என்ன செய்வான், என்ன பேசுவான் என்று சொல்லவே முடியாது.

இப்படி ஒரு கதாபாத்திரம் வரும்போது இதில் நான் எப்படி நடிக்க முடியும், பொருந்த முடியும் என்று தான் தோன்றியது. அதனால் தான் நடை உடை பாவனை என எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு நடித்தேன். அந்த கதாபாத்திரத்துக்கு வித்தியாசமாக சில விஷயங்கள் தேவைப்பட்டன. அந்தத் தேடலில் கிடைத்தது தான் இந்தத் தோற்றம், குரல் மாற்றம் எல்லாம்.

பருத்திவீரனிலிருந்து ஜப்பான் வரை உங்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாக இருந்திருக்கிறது.
ஜப்பானில் என்ன ஸ்பெஷல்?

நீண்ட பயணம் என்பதோடு சேர்த்து மிகவும் கவனமான பயணம் என்பதையும் சொல்ல வேண்டும். ஒவ்வொரு படமும் எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்துக் கடந்து வந்திருக்கிறேன்.

தவறுகள் செய்யும்போது சரி செய்ய முயற்சித்திருக்கிறேன். இந்தப் பயணம் அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டது. அதனால்தான் 17 வருடங்களில் 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன்.

இயக்குநர் தான் திரைக்கதையை எழுத வேண்டும், நம் பணி நடிப்பது மட்டுமே. அதனால் பல படங்களை ஒப்புக்கொண்டு நடித்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு படமும் நமக்குப் பிடித்தது போல, வெவ்வேறு வித்தியாசமான விஷயங்களை நாம் முயல் ஏதுவாக இருக்கும்படி தேர்வு செய்திருக்கிறேன். அதனால் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன்.

முதலில் மக்களின் அன்பைப் பெறுவதே மிகப்பெரிய விஷயம். நம்மை பிடிக்க வைக்க முடியாது. நாம் இயல்பாக இருப்பது மக்களுக்குப் பிடிக்க வேண்டும். அப்படி அமைந்தது பெரிய ஆசிர்வாதம்.

25வது படம் மட்டுமல்ல, என் ஒவ்வொரு படமுமே ஒரு மைல்கல்லாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி இந்தப் படம் அமைந்ததில் மகிழ்ச்சி.

ராஜு முருகன் மாதிரியான அழுத்தமான எழுத்தாளர், இலக்கிய வாசிப்பு இருப்பவர்கள் சினிமாவுக்கு வரும்போதுதான் நமக்கு வித்தியாசமான கதைகள், கதாபாத்திரங்கள், சூழல்கள் கிடைக்கும். இந்த ஜப்பான் கதாபாத்திரத்தை அவர் எங்கு பார்த்திருப்பார், எப்படி இதை உருவாக்கினார் என்று ஆச்சரியப்பட்டேன்.
அவர் கம்யூனிச சித்தாந்தத்தைக் கொண்டவர் என்பதால் ஜோக்கர், குக்கூ என அவர் படங்களில் பொதுநலன் சார்ந்த விஷயங்களையே அதிகம் பேசியிருக்கிறார்.

அவர் நினைப்பதை ஒரு பொழுதுபோக்குத் திரைப்படத்தில் சொல்லலாமே என்று யோசிக்கும்போதுதான் ஜப்பான் அமைந்தது. ட்ரெய்லர் பார்த்தவர்கள் இது ஒரு வழக்கமான மசாலா படமாக இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் கண்டிப்பாக அப்படி இருக்காது.

நிறைய ஆச்சரியங்கள் இருக்கும். அந்த வகையில் பார்க்கும்போது இது எனது 25வது படமாக இருப்பதில் விசேஷமாக உணர்கிறேன்.

ராஜு முருகன் சமுதாயத்துக்காக யோசிக்கும் இயக்குநர். ஜப்பானில் அப்படி என்ன செய்தி சொல்லியிருக்கிறார்?

அவர் இயல்பிலேயே வழக்கமான கதைகளை படமாக எடுக்கக்கூடாது என்ற கொள்கையுடன் தான் இருக்கிறார். அதனால்தான் நிதானமாகத் தேடித் தேடிப் படம் எடுக்கிறார்.

சமீபத்தில் கூட அவர், ‘நான் கேமராவைக் கொண்டு போய் ரோட்டில் வைத்து படம் எடுப்பவன். எனக்கு இவ்வளவு பெரிய பொருட் செலவுடன் படம் எடுப்பது இதுவே முதல் முறை. புதிதாக ஒரு விஷயத்தைக் கற்கிறேன்’ என்று ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

அப்படியான சிந்தனை கொண்டவர்களுக்கு பணம் மீது பெரிய நாட்டம் இருக்காது. மக்கள் அன்பின் மீது, வெற்றி மீது கவனம் இருக்கும். அவ்வளவு நேர்மையாக இருப்பவர்களுக்கு இன்னும் பெரிய வெற்றி கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை.
அப்படி ஒரு நபர் படம் எடுக்கும்போது நிச்சயமாக அது வழக்கமான ஒரு படமாக இருக்காது.

கண்டிப்பாதி இதில் அவர் பாணியில் ஒரு விஷயம் இருக்கிறது. அது மிகச் சுவாரசியமாக இருக்கிறது. ஜப்பான் கெட்டவன் தான், ஆனால் இங்கு திருடன் என்று தனியாக ஒரு ரகம் இருக்கிறதா என்பதே ஜப்பானின் கேள்வி.

இதைத்தான் ராஜு முருகன் சொன்னார். அந்தக் கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? இந்த மாதிரியான விஷயங்கள் தான் எனக்கு ஆர்வத்தைத் தூண்டின.

சுனில், விஜய் மில்டன், ஜித்தன் ரமேஷ் என பெரிய நடிகர் கூட்டம் படத்தில் இருக்கிறதே?

ராஜு முருகன் எழுதிய கதையில் மற்ற கதாபாத்திரங்களும் யூகிக்க முடியாத வகையில் நடந்து கொள்பவர்களே. வழக்கமாக இவர் இப்படியான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் என்று சொல்வார்கள் இல்லையா. அப்படி இல்லாத வகையில் நடிகர்கள் வேண்டும் என்று நினைத்தோம். அப்படித்தான் தேர்வு செய்தோம்.

வாகை சந்திரசேகர் அவர்களும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்திரசேகர் 21 வயதில் நாயகனாக நடித்தவர். இன்று வரை நடித்து வருகிறார்.
ஆனால் படப்பிடிப்பில் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல் அந்த காட்சிக்கு என்ன தேவையோ அதை அர்ப்பணிப்போடு தருவார். அவர் கதாபாத்திரத்தின் பெயரே பேரின்பம். மிகவும் சுவாரசியமான, மக்கள் ரசிக்ககூடிய கதாபாத்திரம். அதிக கடவுள் பக்தி கொண்டவர் ஆனால் ஒரு திருடனோட சுற்றிக் கொண்டிருப்பார்.

இப்படி கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சுவாரசியமாக இருப்பதினாலேயே அதில் நடிக்க சுவாரசியமான நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

உங்கள் ஜோடியாக நடித்த அனு இம்மானுவேல் கதாபாத்திரம் பற்றி சில வார்த்தைகள்…

நடிக்க எளிதான கதாபாத்திரம் அல்ல. அவர் எப்படி இதில் பொருந்துவார் என்று நாங்கள் யோசித்தோம். ஆனால் இந்த கதாபாத்திரத்தை அவர் சரியாகப் புரிந்து கொண்டது சுவாரசியமாக இருந்தது.

இந்த இரண்டு கதாபாத்திரங்கள் தனியாக சந்தித்து பேசிக் கொள்ளும் காட்சிகளில் ராஜு முருகன் அவ்வளவு அற்புதமாக வசனங்கள் எழுதியிருந்தார். அதை அவர் எப்படிப் பேசப் போகிறார் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் அவர் அதை சிறப்பாகப் புரிந்து கொண்டு நடித்தது ஆச்சரியமாக இருந்தது. ஒரு காட்சியில் அடிபட்டு எலும்பு முறிவே ஏற்பட்டது. அவர் பேக்கப் சொல்லியிருந்தால் யாரும் எதுவும் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆனால் அவர் தொடர்ந்து வலியுடனே நடித்தார். அந்த உண்மையான உழைப்பு பாராட்டப்படவேண்டியது.

ராக்கெட் ராஜாவுக்கும் ஜப்பானுக்கும் என்ன ஒற்றுமை?

மக்களுக்குக் கெட்டவனாக நடித்தால் பிடிக்கிறது என்று நினைக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏனென்றால் அதன் தன்மை அப்படி. அந்த சுதந்திரம் ராக்கெட் ராஜாவிலும் இருந்தது, இதிலும் இருக்கிறது.

அதனால் இரண்டையும் ஒப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். பருத்தி வீரனுக்குப் பிறகு ஒரு கதாபாத்திரம் பேசும் எல்லா வசனங்களும் மாஸாக இருப்பது ஜப்பானில் தான்.
அந்த தோற்றம் முடிவு செய்தவுடனேயே எனக்கு பாதி நம்பிக்கை வந்துவிட்டது.

ஒரு நாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது அந்தத் தோற்றத்தில் தெருவில் நடந்தேன். சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்து ’என்ன சார் புள்ளீங்கோ மாதிரி இருக்கீங்க’ என்று கேட்டனர். ‘அவங்களைப் பாத்துதான்யா காப்பி அடிச்சேன்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

கார்த்தி

Karthi shares Japan movie highlights

ரிச்சர்ட் – கீதா – யாஷிகா இணைந்த சென்சேஷனல் படம் ‘சில நொடிகளில்’

ரிச்சர்ட் – கீதா – யாஷிகா இணைந்த சென்சேஷனல் படம் ‘சில நொடிகளில்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஸ்ட்ரி, த்ரில்லர், காதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் ‘சில நொடிகளில்’ திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகி பார்வையாளர்களை பரவசப்படுத்தத் தயாராக உள்ளது.

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.

‘திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களுக்குப் பிறகு ரசிகர்கள் இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான ஒரு கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிக்கிறார்.

லண்டனில் இருக்கக் கூடிய ஸ்டைலிஷான ஒரு காஸ்மெட்டிக் சர்ஜனாக இதில் வருகிறார். மலேசியாவில் வசிக்கும் திறமையான நடிகையும் ஆர்.ஜே.வுமான புன்னகை பூ கீதா ‘காவல்’, ‘மைதான்’ படங்களுக்குப் பிறகு இந்தப் படம் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார்.

இயக்குநர் வினய் பரத்வாஜ் தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைவதற்கு முன்பு கன்னட சினிமாவில் அவர் இயக்கிய ‘முண்டினா நில்டானா’ என்ற படம் பெரும் வெற்றிப் பெற்று ரசிகர்களின் இதயம் கவர்ந்தது.

‘சில நொடிகளில்’ திரைப்படத்தின் கதை ராஜ் வரதனின் வாழ்க்கையை சுற்றி நடக்கிறது. அவனது மாடல் கேர்ள் ஃபிரண்டான மாயா பிள்ளை அதிக அளவு போதை மருந்து உட்கொண்டு பரிதாபமாக உயிரிழக்கும் போது இவனது வாழ்வு சிக்கலுக்குள்ளாகிறது.

இதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன, எதிர்பாராத திருப்பங்கள், தனது மனைவி மேதா வரதனிடம் இருந்து அவன் என்ன ரகசியங்களைப் பெற்றான், அவனது வாழ்வு மீண்டும் இயல்புக்குத் திரும்பியதா போன்ற கேள்விகளுக்கு இந்தப் படம் பதில் சொல்லும்.

இஷான் ராஜாதிக்ஷா, எல்லே நவ், ஸ்ரீனிவாஸ் காஷ்யப் மற்றும் இயக்குநர் வினய் பரத்வாஜ் ஆகியோர் இந்தப் படத்திற்குத் திரைக்கதை எழுதியுள்ளனர்.

மேலும், அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்திருக்க, கலரிஸ்ட் சித்தார்த்தா காந்தி & எடிட்டர் ஷைஜல் பி வி ஆகியோர் சிறப்பான பணி செய்துள்ளனர்.

மசாலா காபி, பிஜோர்ன் சுர்ராவ், தர்ஷனா கேடி, ஸ்டாக்காடோ மற்றும் ரோஹித் மாட் போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் இசை படத்தின் வலுவான உணர்ச்சிகளுக்கு ஏற்ற ஆன்மாவைக் கொடுத்திருக்கிறது.

புன்னகை பூ கீதா மற்றும் எஸ்குயர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சில நொடிகளில்’ உலகளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

‘மின்னலே’, ‘ஜீன்ஸ்’ & ‘அறிந்தும் அறியாமலும்’ ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட், இத்திரைப்படத்தின் தயாரிப்பில் இருக்கிறது.

மாதவன், ஆர்யா & கௌதம் மேனன் போன்ற நட்சத்திரங்களின் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவித்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் அவர்களின் வரவிருக்கும் வெளியீடான ‘சில நொடிகளில்’ அற்புதமான கதைகளை கொடுப்பதற்கும் திறமைசாலிகளை மேலும் ஊக்குவிப்பதற்குமான தளத்தையும் உருவாக்கியுள்ளது.

‘வசீகரா’, தீப்பிடிக்க’ போன்ற பாடல்களின் வெற்றிக்குப் பிறகு, ‘சில நொடிகளில்’ படத்தின் ‘ஃபன் மாரோ’ ஒரு பெப்பி டான்ஸ் பாடல் மற்றும் பாரதியார் பாடலின் ரீமேக்கான ‘ஆசை முகம்’ ஆகியவை சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

’சில நொடிகளில்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் திரையரங்க அனுபவத்தினை மேன்மைப்படுத்தி பார்வையாளர்களுக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கத் தயாராக உள்ளது.

சில நொடிகளில்

Richard Yaashika Geetha starrer Sila Nodigalil

மருதநாயகம் + நாயகனை இணைத்து THUG LIFE உருவாக்கிய கமல் – மணிரத்னம்

மருதநாயகம் + நாயகனை இணைத்து THUG LIFE உருவாக்கிய கமல் – மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தனது லட்சியப் படமாக உருவாக்க முன்வந்த திரைப்படம் ‘மருதநாயகம்’ கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் முன்னர் இந்த படத்தின் அறிவிப்பும் தொடக்க விழாவும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த தொடக்க விழாவிற்கு இங்கிலாந்து ராணி வந்திருந்து சிறப்பு செய்திருந்தார்.
மேலும் அப்போதைய முதல்வர் கருணாநிதி, சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் பட்ஜெட் மற்றும் சில காரணங்கள் இந்த படத்தை கைவிட்டார் கமல்ஹாசன். தற்போது மருதநாயகம் பாணியில் ஒரு புதிய படத்தை மணிரத்னம் இணைந்து உருவாக்கி வருகிறார் கமல்.

THUG LIFE

மேலும் இந்த படத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கேரக்டரில் நடிக்கிறார் கமல்ஹாசன். இந்த கேரக்டர் பெயரானது 36 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நாயகன் படத்தில் கமல் ஏற்றிருந்த வேடமாகும்.

கமலின் 234 வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு தக் லைப் THUG LIFE என்று பெயரிட்டு அதிரடியான ஒரு வீடியோவை மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் கமலுடன் துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோ நடிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

THUG LIFE

இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் & ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

தற்போது இந்த தக் லைஃப் அறிவிப்பு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாளை கமல்ஹாசன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோ கமல் ரசிகர்களுக்கு மாபெரும் பிறந்த நாள் விருந்தாக அமைந்துள்ளது எனலாம்.

THUG LIFE

Kamal Maniratnam combo KH234 Titled Thug life

இந்திய சினிமாவில் இதான் முதன்முறை.; பாத்ரூம் ஃபைட்டில் 2 லேடீஸ்

இந்திய சினிமாவில் இதான் முதன்முறை.; பாத்ரூம் ஃபைட்டில் 2 லேடீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கத்ரீனா கைப் யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி. அந்தவிதமாக ‘டைகர் 3’ படத்தில் இடம்பெறும் உயிரை பணயம் வைக்கும் சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்காக தனது உடலை மீண்டும் ஒருமுறை கட்டுக்கோப்பாக’ மாற்றியுள்ளார்.

‘டைகர் 3’ படத்தில் துருக்கி குளியலறையில் அவருடைய டவல் சண்டைக்காட்சி இணையத்தில் வைரலாக ஆனது.

சினிமாவில் ஒரு ஹீரோவை போல ஒரு பெண்ணும் எப்படி சண்டையிட முடியும் என்பதை காட்டியதற்காகவே இந்தப் படத்தை தான் மிகவும் விரும்புவதாக கத்ரீனா கூறியுள்ளார்.

கத்ரீனா கூறும்போது…

“ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்கு நான் மிகவும் விரும்புகிறேன். அந்தவகையில் டைகர் வரிசை படங்கள், எப்போதுமே ஒரு பெண் ஆக்சன் ஹீரோயின் என வரும்போது பல விஷயங்களில் மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்து செல்லும் விதமாக அந்த வாய்ப்பை எனக்கு அளித்திருக்கின்றன.

சோயாவின் வாயிலாக ஒரு சூப்பர் உளவாளியின் வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கிறேன் என்பதுடன் எதிரிக்கு அவள் ஒரு நரகம் என்கிற உண்மையையும் நான் ரசிக்கிறேன்.

டைகரைப் போலவே எதையும் அழகாக சமாளிக்க முடியும் என்பது மட்டுமல்ல, அவளால் கடைசி வரை நின்று போராடவும் முடியும். ஒரு ஆணைப்போலவே பெண்ணும் சரிசமமாக சண்டையிட முடியும் என்பதை பார்க்க முடியும்போது அது எனக்கும் பார்வையாளர்களுக்கும் புதிதாகவும் உற்சாகமாகவும் இருக்கும்” என்கிறார்.

அவர் மேலும் கூறும்போது,..

“டைகர் 3’யின் குளியலறை சண்டைக்காட்சி பெரிய அளவில் வைரலாகும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு குளியலறைக்குள் அடிப்பது, தாவிக்குதிப்பது, குத்துக்களை விடுவது, உதைப்பது என ஒருவருக்கொருவர் மோதும் சண்டைக்காட்சியை படமாக்குவதற்கு மிகமிக கடினமாக இருந்தது.

இப்படி ஒரு புத்திசாலித்தனமான காட்சியை யோசித்ததற்காகவே ஆதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். காரணம் இந்திய சினிமாவில் இப்படி இரண்டு பெண்கள் மோதும் சண்டைக்காட்சி இருக்கிறதா என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

இயக்குனர் மனீஷும் சண்டைப்பயிற்சி குழுவும் ஒவ்வொன்றையும் நம்பமுடியாத வகையில் விலாவாரியாக செயல்படுத்தி இருக்கிறார்கள். மக்களால் பார்த்து ரசிக்கப்படும் இவை அனைத்தும் ஒட்டுமொத்த குழுவினரின் உழைப்பு.

ஒரு திறமையான சண்டைக்காரி கதாபாத்திரத்தில் நடித்துல் மிஷ்ஷெல் லீயுடன் சோயா மோதும் காட்சியில் நிச்சயமாக அதன் தீவிரம், ஆக்கிரமிப்பு, மிருகத்தனம் எல்லாம் படம் பார்ப்பவர்களை மூச்சுத்திணற வைக்கும். சினிமாவில் ஒரு பெண் இந்த அளவுக்கு சண்டையிட்டு பார்த்திராததால் இது என்னுடைய மிகச்சிறந்த சண்டைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும்.

இது ரொம்பவே எளிமையான ஆனால் தைரியமான ஒன்று என்பதால் மக்கள் இந்த முழு ஆக்சன் காட்சியை திரையரங்குகளில் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது” என்கிறார்.

‘டைகர் 3’யில் டைகராக நடித்துள்ள சல்மான் கானுக்கு ஜோடியாக சோயா என்கிற சூப்பர் உளவாளி கதாபாத்திரத்தில் மீண்டும் கத்ரீனா நடித்திருக்கிறார்.

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கியுள்ள இந்த ‘டைகர் 3’ ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தீபாவளி ரிலீஸாக வரும் நவ-12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

2 ladies fight at Bathroom for Tiger 3 movie

https://www.instagram.com/p/CzS3IRDNxn2/?igshid=MzRlODBiNWFlZA==

More Articles
Follows