‘மண்ணாங்கட்டி’-காக மீண்டும் இணைந்த நயன்தாரா – யோகிபாபு

‘மண்ணாங்கட்டி’-காக மீண்டும் இணைந்த நயன்தாரா – யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்புத் திறனாலும் , வசீகர அழகாலும் பல ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா, தற்போது புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

இவருடன் யோகிபாபு இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்த ‘கோலமாவு கோகிலா’ படம் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார், இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார். இணை தயாரிப்பை A வெங்கடேஷ் மேற் கொள்கிறார்.

டியூட் விக்கி எழுதி, இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரலானது.

மண்ணாங்கட்டி சின்ஸ் 1960

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தொகுப்பை ஜி.மதன் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

நடிகர்கள் – நயன்தாரா, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர்

தொழிநுட்பக் கலைஞர்கள் விபரம்:

கதை & இயக்கம் – டியூட் விக்கி

இசை – ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர் ISC

படத்தொகுப்பு – ஜி.மதன்

கலை – மிலன்

ஆடை வடிவமைப்பு – அனு வர்தன்

ஆடை – பெருமாள் செல்வம்

ஒலி வடிவமைப்பு – டி.உதயகுமார்

விளம்பர வடிவமைப்பு – கண்ணதாசன் டிகேடி

தயாரிப்பு மேற்பார்வையாளர் – A P பால் பாண்டி.

தயாரிப்பு நிர்வாகி – ஷ்ரவந்தி சாய்நாத்

இணை தயாரிப்பாளர் – A.வெங்கடேஷ்

தயாரிப்பாளர் – S. லக்ஷ்மன் குமார்

தயாரிப்பு நிறுவனம் – பிரின்ஸ் பிக்சர்ஸ்

மக்கள் தொடர்பு – சதீஷ் குமார்

மண்ணாங்கட்டி சின்ஸ் 1960

Nayanthara and Yogibabus Next Titled as Mannangatti Since 1960

‘வேட்டையாடு விளையாடு’ படத்தை தொடர்ந்து ‘நாயகன்’ ரீ-ரிலீஸ்

‘வேட்டையாடு விளையாடு’ படத்தை தொடர்ந்து ‘நாயகன்’ ரீ-ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நாயகன்’.

மும்பையை பின்னணியாக கொண்ட படத்தில் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை கமல் வெளிப்படுத்தியிருந்தார்.

இப்படத்தில் சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி, கார்த்திகா, விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இளையராஜா இசையமைதிருந்த இப்படத்தை முகுந்தன் ஸ்ரீனிவாசன் தயாரித்திருந்தார்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு மேற்கொண்டிருந்தார். லெனின், வி.டி.விஜயன் இருவரும் படத்தொகுப்பு செய்திருந்தனர்.

இந்தப்படத்துக்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம், கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு தேசிய விருது கிடைத்தது.

‘நாயகன்’ படம் வெளியாகி 36 ஆண்டுகள் ஆகிறது

இந்நிலையில், கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி ‘நாயகன்’ படம் நவம்பர் 3-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாயகன்

kamalhaasan’s nayakan movie re released on november

‘ஜெயிலர்’ ஸ்டைலில் விக்ரம் இயக்கிய இந்தியாவின் ‘ஹேங் ஓவர்’ படம்

‘ஜெயிலர்’ ஸ்டைலில் விக்ரம் இயக்கிய இந்தியாவின் ‘ஹேங் ஓவர்’ படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’.

அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார்.

தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நாயகியாக ஸ்வயம்சித்தா நடித்துள்ளார்.

மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்,

சூப்பர் டூப்பர், ரிப்பப்பரி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தளபதி ரத்னம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சிவப்பு எனக்கு பிடிக்கும், பீர்பால், தீவிரம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள கலாச்சரண் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆல் இன் ஆல் அழகுராஜா, சந்திரமுகி 2, யாத்திசை உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர் பிரகாஷ் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

படத்தொகுப்பை முகன்வேல் மேற்கொண்டுள்ளார். கலை வடிவமைப்பை சூர்யா கவனித்துள்ளார்.

சென்னையில் உள்ள 3 வெவ்வேறு பகுதிகளில் கிட்டத்தட்ட 35 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

எனக்கு என்டே கிடையாது

தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இப்படம் குறித்து தயாரிப்பாளரும் படத்தின் ஹீரோக்களில் ஒருவருமான கார்த்திக் கூறும்போது….

“சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் பல வருடங்கள் தியேட்டர் லேப் ஜெயராவிடம் நடிப்பு பயிற்சி பெற்றேன்.

ஓரிரு படங்களில் நடித்தாலும் அவை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் நண்பர்கள் உதவியுடன் படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினேன். அப்படி உருவானது இந்த ஹங்ரி வொல்ஃப் தயாரிப்பு நிறுவனம்.

என்னுடைய நண்பர் மூலமாக இணைந்தவர் தான் இயக்குநர் விக்ரம். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் ஐடி துறையில் பணியாற்றிய அவர் சினிமா மீதான ஆர்வத்தால் நடிப்பு மற்றும் டைரக்சனில் இறங்கியுள்ளார்.

இரண்டு மூன்று படங்களில் நடித்த ஓரளவு பிரபலமான ஹீரோக்கள் கூட எங்களது புதிய நிறுவனத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டினர். அதனால் புது முகங்களை வைத்து படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினோம்.

நானும் இயக்குநர் விக்ரமும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களாக நடித்துள்ளோம். மற்றபடி எங்களைத் தவிர படத்தில் நடித்துள்ளவர்களும் பணியாற்றியவர்களும் ஓரளவுக்கு மற்ற படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்கள் தான். இருந்தாலும் பக்காவான ரிகர்சல் செய்துதான் படப்பிடிப்பிற்கு சென்றோம்.

தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே படம் பார்ப்பவர்களை கதைக்குள் இழுத்து சென்றுவிடும்.

எனக்கு என்டே கிடையாது

நான் அடிப்படையில் ஹாலிவுட் இயக்குநர் ஹிச்காக் படங்களை விரும்பிப் பார்ப்பவன். குறிப்பாக அவர் தனது பல படங்களை ஒரு வீட்டிற்குள்ளேயே, அதற்குள் உள்ள மனிதர்களை வைத்து உருவாக்கி இருப்பார். அதே பாணியில் தான் இந்த படமும் ஒரு வீட்டிற்குள்ளேயே நடைபெறும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக சென்னையில் முக்கிய பகுதியில் உள்ள, சீரியலுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வீட்டை செட் ஒர்க் அமைத்து முற்றிலுமாக மாற்றி படப்பிடிப்பை நடத்தினோம். அந்த வீடு இன்று பல சீரியல்களில் இடம் பெற்றிருந்தாலும் எங்களது படத்தில் முற்றிலும் ஒரு புதிய இடமாக காட்சியளிக்கும். கிட்டத்தட்ட 35 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.

புதிய நிறுவனம் தான் என்றாலும் கேப்டன் விஜயகாந்த் பாணியில் அனைவருக்கும் சரிசமமான சாப்பாடு, படப்பிடிப்பு நிறைவு பெறும் நேரத்திலேயே ஊதியம் என தொழிலாளர்களின் மன நிறைவுடன் இந்த படத்தை நடத்தி முடித்தோம்.

படத்தில் அதிக காட்சிகளில் மது பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் நாங்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்வதற்கு அப்படிப்பட்ட காட்சிகள் தேவைப்பட்டது.

இனிவரும் படங்களில் இது போன்ற காட்சிகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்வோம். அதேசமயம் எந்த ஒரு மெசேஜையும் இந்த படத்தின் மூலமாக நாங்கள் வலிந்து சொல்லவில்லை.

இந்த படத்தை தயாரிக்க மிக முக்கிய காரணம் விக்ரம் கூறிய கதை மேல் இருந்த நம்பிக்கைதான். அதனால் இந்த கதையை உருவாக்கிய அவரே படத்தையும் இயக்கினால் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம்.

எனக்கு என்டே கிடையாது

அது மட்டுமல்ல பிரபல இயக்குநர்களிடம் பணியாற்றி விட்டு வரும் பெரும்பாலான உதவி இயக்குநர்கள் தங்களது குருவின் பாணியிலேயே பயணிப்பது தான் வழக்கம். இது முற்றிலும் புதிய வகை சினிமா என்பதால் புதியவரான விக்ரம் இதை திறம்பட கையாண்டு உள்ளார்.

படம் பார்த்த பலரும் இந்த படத்தின் காட்சிகளும் வசனமும் ஃப்ரெஷ்ஷாக இருப்பதாக பாராட்டினார்கள். இந்தியாவின் “ஹேங் ஓவர்” படம் போன்று இதை உருவாக்கியுள்ளோம் என்று சொல்லலாம்.

சமீப காலமாக இயக்குநர் நெல்சன் போன்றவர்கள் டார்க் காமெடிக்கு ஒரு பாதை போட்டு கொடுத்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற வைத்துள்ளனர்.

இந்த படமும் டார்க் காமெடி கலந்த கிரைம் திரில்லராகத் தான் தான் உருவாகி உள்ளது.

படம் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் புன்முறுவல் பூக்கும் விதமாகத்தான் இந்த படம் இருக்கும்” என்கிறார்.

இப்படத்தை ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார்.

எனக்கு என்டே கிடையாது

Enakku Ende Kidaiyaadhu Dark Comedy in an Indian Hangover style

சான்ஸ் வேணுமா? ஹாட் ஸ்டில் அனுப்பு..; இயக்குநர் பாலா எச்சரிக்கை

சான்ஸ் வேணுமா? ஹாட் ஸ்டில் அனுப்பு..; இயக்குநர் பாலா எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை.. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம்… என இயக்குநர் பாலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இயக்குநர் பாலாவின் பெயரில் யாரோ ஒரு மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் மூலமாக உரையாடி அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில் பேசியதுடன் மட்டுமல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுள்ளார்.

இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இயக்குநர் பாலாவின் கவனத்திற்கு வந்தன.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தன் பெயரில் உள்ள போலியான அந்த கணக்கை முடக்கும்படியும் இயக்குனர் பாலா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பொதுவாக தனது படங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வை அவரின் உதவி இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள் மட்டுமே நேரடியாக தொடர்புகொண்டு வருகிறார்கள்.

அதனால் சினிமா ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக தனது திரைப்படங்களில் நடிக்க விரும்புபவர்கள் இது போன்ற போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.. விழிப்புணர்வுடன் இருங்கள்” என்று இயக்குநர் பாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

Director Bala filed complaint against Fake Instagram account

வேற ஆளே கிடைக்கலையா.?; விஜயலட்சுமி விவகாரத்தில் சீமான் மனைவி கிண்டல்

வேற ஆளே கிடைக்கலையா.?; விஜயலட்சுமி விவகாரத்தில் சீமான் மனைவி கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 10 நாட்களாக தமிழக அரசியலையும் சினிமா உலகையும் பரபரப்பாகிய விவகாரம் என்றால் அது சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தான்.

சீமானை சிறைக்குள் தள்ளாமல் விடமாட்டேன். கடந்த அதிமுக ஆட்சியில் சீமான் மீது எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை.. எனவே தற்போது திமுக ஆட்சியில் புகார் அளிக்க வந்துள்ளேன் என்று பரபரப்பாக பேசி இருந்தார்.

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் விஜயலட்சுமி. இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த சீமான் சில தினங்களில் கடுப்பாகி பல பேட்டிகள் கொடுத்தார்.

“என்னை சீண்டாதீங்க.. தாங்க மாட்டீங்க.. நான் ஒரு மாதிரி.. என்றெல்லாம் பேட்டியளித்தார். விஜயலட்சுமியின் புகாரை தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால் சீமான் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக வழக்கறிஞர்கள் ஆஜராகி சீமான் தரப்பில் பல கேள்விகளை முன் வைத்தனர்.

14 வருடங்களுக்கு இந்த வழக்கை மீண்டும் எடுக்க என்ன காரணம்? விஜயலட்சுமி திருமணம் செய்தது தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் ஆதாரங்கள் இருக்கிறதா என்ற கேள்விகளை எல்லாம் முன் வைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து திடீரென ஓரிரு தினங்களுக்கு முன் நள்ளிரவில் சீமான் மீது கொடுத்த புகார்களை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி.

சீமான் தமிழ்நாட்டில் பெரிய ஆளு.. அவரை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.. காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. என்னை யாரும் மிரட்டி இந்த மனுவை வாபஸ் பெற சொல்லவில்லை என்றெல்லாம் பேட்டி அளித்தார்.

அதன் பின்னர் நேற்று செப்டம்பர் 18ஆம் தேதி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தற்போது இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

அப்போது சீமான் அருகில் அவரது மனைவியும் இருந்தார். இந்த விவகாரம் குறித்து உங்கள் மனைவியின் ரியாக்ஷன் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்..

அதற்கு சீமான் பதில் அளிக்கும் போது.. எவ்வளவு பொம்பளைங்க இருக்காங்க விஜயலட்சுமி தான் உங்களுக்கு கிடைச்சாளா.? என கூறினார்” என பதில் அளித்தார் சீமான்.

Seaman wife reaction in Actress Vijaylakshmi issue

போஸ்டர் மட்டும்தான் காப்பியா.? ஜெயம் ரவி – பிரியங்கா இணைந்த ‘பிரதர்’ பட பர்ஸ்ட் லுக்.!

போஸ்டர் மட்டும்தான் காப்பியா.? ஜெயம் ரவி – பிரியங்கா இணைந்த ‘பிரதர்’ பட பர்ஸ்ட் லுக்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

‘பிரதர்’ படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கே ஜி எஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘பிரதர்’ திரைப்படத்திற்காக ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் உடன் பல்வேறு படங்களில் பணியாற்றிய இவர், தனுஷ் நடித்த ‘மாறன்’, ஜிவி பிரகாஷ் நடித்த ‘செம’ மற்றும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

பிரதர்

‘பிரதர்’ குறித்து பேசிய இயக்குநர் எம். ராஜேஷ் பேசியதாவது….

“ஆக்ஷன் ததும்பும் வித்தியாசமான திரைப்படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து முத்திரை பதித்து வந்தாலும் ‘ஜெயம்’, ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’, மற்றும் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஆகிய குடும்ப கதையம்சம் உள்ள திரைப்படங்கள் அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமானவை.

இந்த வரிசையில் ‘பிரதர்’ இணையும் என்பதில் சந்தேகம் இல்லை.

சென்னை, ஹைதராபாத், ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கலகலப்பான குடும்ப கதைக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி மீண்டும் திரும்பும் இத்திரைப்படம் 6 முதல் 60 வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.

இப்படம் குறித்த மேலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும்.

கூடுதல் தகவல்…

பிரதர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் கமெண்ட் அடித்த நிலையில் சில ரசிகர்கள் இந்த டிசைன் ஒரிஜினலை சுட்டிக்காட்டி உள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டில் வெளியான ‘பிரீத் ஆப் டெஸ்டினி’ என்ற கொரியன் சீரிஸ் படத்தின் போஸ்டர் காப்பி என தெரியவந்துள்ளது.

போஸ்டர் மட்டும்தான் காப்பியா.? கதையும் காப்பியா.? காத்திருப்போம்…

பிரதர்

First look of Jayam Ravi starrer Brother released

More Articles
Follows