லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தில் நாயகனாக விஜய்

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தில் நாயகனாக விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநகரம்’ என்ற முதல் படத்தை இயக்கிய போதே தமிழ் சினிமா ரசிகர்களால் கவனம் ஈர்க்கப்பட்டவர் லோகேஷ் கனகராஜ்.

அதன் பின்னர் கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய அளவில் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

இதனையடுத்து விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்த நடித்த ‘மாஸ்டர்’ என்ற படத்தை உருவாக்கி இருந்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடிக்கவே கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ்.

கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் தன்னுடைய அபிமான நடிகருக்கு ‘விக்ரம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை உருவாக்கி கொடுத்தார். இந்த படம் 400+ கோடிக்கு மேல் வசூலித்து கமல்ஹாசனுக்கு பெரிய மாஸ் ஓபனிங் படமாகவும் லாபகரமான படமாகவும் அமைந்தது.

இதன் பின்னர் விஜய் நடித்த ‘லியோ’ படத்தை உருவாக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று 400 கோடி வசூலை எட்டியது.

'உறியடி' விஜயகுமார்

விரைவில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ‘தலைவர் 171’ இயக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் 2024 ஏப்ரலில் தொடங்கப்படும் என லோகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ‘ஜி ஸ்குவாட்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் லோகேஷ். இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்தப் படத்தில் நாயகனாக ‘உறியடி’ விஜயகுமார் நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை நவம்பர் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர். வழக்கம் போல லோகேஷ் கனகராஜ் பட சாயலில் ரத்தம் தெறிக்க இந்த போஸ்டர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

'உறியடி' விஜயகுமார்

Lokesh Kanagaraj new production first movie starring Vijayakumar

இந்திய நடிகைகளில் நான்காவது இடத்தை பிடித்த வாமிகா கபி

இந்திய நடிகைகளில் நான்காவது இடத்தை பிடித்த வாமிகா கபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாமிகா கபி ஒரு பிரபலமான நடிகை. பஞ்சாப்பை பூர்விகமாகக் கொண்டவர். ஹிந்தி நடிகையான இவர் தமிழில், ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் நடித்திருந்தார்.

இவர் நடித்த இதர படங்கள்.. ஜெனி, டிக்கி டாக்கா, காளி ஜோட்டா, கால்வாக்டி மற்றும் டோர்பீன்.

ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள வாமிகா தமிழில் நீண்ட இடை வெளிக்குப் பிறகு ‘இறவாக் காலம்’ படத்தில் நடித்தார்.

வாமிகா கபி

தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘ஜீனி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் முதல் நாயகியாக தெலுங்கில் பிரபலமான கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் ஐ எம் டி பி இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் வாமிகா கபி நான்காவது இடத்தை பிடித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீனி

Wamiqa Gabbi at 4th Position in IMDbs most popular Indian star.

விஐபி-க்காக மாதம்பட்டி ரங்கராஜனிடம் சமைக்க சொல்லி கன்டிசன் போட்ட விஜய்

விஐபி-க்காக மாதம்பட்டி ரங்கராஜனிடம் சமைக்க சொல்லி கன்டிசன் போட்ட விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவில் அறுசுவை விருந்துகளின் மன்னன் என்றே சொல்லலாம். அவரது பெயர்தான் மாதம்பட்டி ரங்கராஜ்.

பார்ப்பதற்கு படு ஸ்மார்ட்டாக இருக்கும் இவர் சுவையான ராசியான சமையல் கலைஞர் என்றும் சொல்லலாம். இவர் ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற திரைப்படத்தில் நாயகனாகவும் நடித்து தமிழக ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்தான்.

இந்த நிலையில் இவர் நடிகர் விஜய் குறித்து ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில்.. “ஒரு முறை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் உதவியாளர் ஜெகதீஷ் இடமிருந்து என் அலைபேசி நம்பரை கேட்டு பின்னர் அழைப்பு வந்தது.

அதன் பின்னர் அவர் என்னை தொடர்பு கொண்டு பேசி விஜய் இடம் கொடுத்தார். என் வீட்டிற்கு ஒரு விஐபி வருகிறார் அவருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் உணவு வீணாக கூடாது. நிறைய ஐட்டங்கள் வேண்டாம்.. குறைவான வகைகள் இருந்தால் போதும்.. அது அந்த விஐபிக்கு மறக்க முடியாத விருந்தாக அமைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதன்படி அவரும் நானும் கலந்து பேசி ஒரு அருமையான பார்ட்டியை உருவாக்கி கொடுத்தோம். அந்த விஐபி தான் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

அதன் பின்னர் இதுவரை நான்கு முறைகளுக்கு மேல் விஜய் வீட்டில் என் கைப்பட சமைத்துக் கொடுத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.

Madhampatty Rangaraj speaks about Vijay hospitality to Shahrukh

கார்த்திக்கு ராஜபாட்டை..; அமீரிடம் ஞானவேலை மன்னிப்பு கேட்க சிவக்குமார் சொல்லணும்.. – கரு.பழனியப்பன்

கார்த்திக்கு ராஜபாட்டை..; அமீரிடம் ஞானவேலை மன்னிப்பு கேட்க சிவக்குமார் சொல்லணும்.. – கரு.பழனியப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஊடகத்துறையினருக்கு வணக்கம்…

‘பருத்திவீரன்’ படம் பற்றியும் அமீர் பற்றியும் திரு ஞானவேல் பேசிய பிறகு அந்தப் படம் தொடர்புடைய சசிகுமார் தயாரிப்பாளர் கணேஷ்ரகு, சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சுதா கொங்குரா என ஒவ்வொருவராக அமீர் பக்கம் வந்து நிற்கிறார்கள்..

சில நாட்களில் மற்றவர்களும் அமீர் பக்கம் நிற்பார்கள்…
நிற்க.

இந்த அறிக்கை பருத்தி வீரன் படம் பற்றி அல்ல…

ஞானவேலின் பொய்க் குற்றச்சாட்டு பற்றி.!
பொன்வண்ணன் மொழியில் சொல்வதானால் ஞானவேலின் வக்கிரமான உடல் மொழி பற்றி.! எகத்தாளமாய் எப்படி ஒருவரால் இத்தனை பொய் சொல்ல முடிகிறது?

அமீரை திருடன் என்றும் பொய் கணக்கு எழுதுபவர் என்றும் சொல்லுகிறாரே,
நான் சொல்லுகிறேன் .
ஆறு ஆண்டு காலம் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் செயலாளராகவும், தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவராகவும், தயாரிப்பாளர் தொழிலாளர் இடையே சுமூகம் ஏற்பட உருவாக்கப்பட்ட ஊதியக்குழுவின் தலைமையிலும் பணியாற்றிய அமீரை பக்கத்தில் இருந்து பார்த்த நான் சொல்லுகிறேன்.

இத்தனை ஆண்டுகளில் ஒரு வேளை உணவு கூட இந்த சங்கங்களின் பணத்தில் அமீர் உண்டதில்லை. அன்று உடனிருந்த நானும் ஜனநாதனுமே சாட்சி.
இந்நாள் முன்னாள் சங்க நிர்வாகிகளைக் கேட்டாலும் இதையே சொல்வார்கள்.

பருத்திவீரன் தயாரிப்பில் நூறு முரண்பாடு இருக்கலாம் ஆனால் பொதுவெளியில் ஒரு இயக்குனரை திருடன் என்றும் ஒன்றும் தெரியாதவன் என்றும் என் காசில் தொழில் பழகியவன் என்றும் character assassination செய்வது அயோக்கியத்தனம். ஞானவேலின் எள்ளல் எகத்தாள திமிர் பேட்டியில்,
நானும் கார்த்தியும் பருத்தி வீரனுக்கு பிறகு நிறைய படம் எடுத்து விட்டோம் 25 படங்களை கடந்து விட்டோம்.

ஆனால் அமீர் ஓடாத குதிரை தோற்றுப் போனவர் என்கிறார்.
அமீர் உங்களிடம் பணத்தில் தோற்றுப் போய் இருக்கலாம்.

ஆனால் உங்களுடைய படம் என்று நீங்கள் சொல்லும் பருத்தி வீரனை காலமும் உடன் களத்தில் பணியாற்றியவர்களும் ரசிகர்களும் அமீரின் பருத்தி வீரன் அமீரின் பருத்திவீரன் என்று சொல்லச் சொல்ல அவர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள்.

பருத்திவீரன் படத்தின் உயரத்தைத் தொட ஒவ்வொரு படமாக எடுத்து எடுத்து ஞானவேலும் அவரைச் சார்ந்தவர்களும் இன்று வரை தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.

காலம் அப்படித்தான் கணக்கில் வைத்துக் கொள்ளும்.
இப்படி பேச ஞானவேலுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? என்று கேட்டிருந்தார் சமுத்திரக்கனி.

இந்தக் கேள்வி எழும்போதே ஞானவேலின் பின்னால் திரு.சிவக்குமாரும் அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்று சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நூறு குறள்கள் படித்த திரு.சிவக்குமார்
தன் மகனுக்கு உலகத் தரத்தில் மாபெரும் வெற்றி படத்தைக் கொடுத்து திரை உலகில் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த இயக்குனர் அமீருக்கு, திரு சிவக்குமாரும் அவரைச் சார்ந்தவர்களும் திருப்பிக் கொடுத்தது என்ன?

18 ஆண்டுகால மன உளைச்சலும் திருட்டு பட்டமுமா?? நூறு குறள்கள் படித்த திரு.சிவக்குமார்
“அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை ”
என்ற குறளையும் படித்து இருப்பார்.

வள்ளுவர் வாக்கு பொய்க்காது என்று அறிந்த அவர்,
ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் .
திரு.சிவக்குமார் சொல்லுவார் என்று நம்புகிறேன் .!

அறத்தை நம்பி செயலாற்றும்
ஊடக நண்பர்களுக்கு
நன்றியும் அன்பும்..

கரு பழனியப்பன்
28 நவம்பர் 2023

Karupalaniappan slams Gnanavelraja and supports Ameer

இரண்டு குழந்தைகளை தத்தெடுக்கும் நடிகை.; சமந்தாவின் திடீர் முடிவு

இரண்டு குழந்தைகளை தத்தெடுக்கும் நடிகை.; சமந்தாவின் திடீர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அதன் பிறகு நடிகை சமந்தா ரி என்ட்ரி கொடுக்கும் வகையில் அதிரடியான படங்களையும் வேடங்களையும் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.

ஒரு பக்கம் கலைச் சேவை செய்து வந்தாலும் மற்றொரு புறம் சமூக சேவையை செய்து வருகிறார் சமந்தா.

பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சமந்தா ஆதரவில்லாத இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையில் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா சிகிச்சை பெற்றாலும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா

Actress Samantha adopts two childrens

யாரு பார்த்த வேலை இது.? ரஜினியுடன் இணையும் லாரன்ஸ் & சிவகார்த்திகேயன்.?!

யாரு பார்த்த வேலை இது.? ரஜினியுடன் இணையும் லாரன்ஸ் & சிவகார்த்திகேயன்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் அமிதாபச்சன், பகத் பாசில், ராணாகுபதி, மஞ்சு வாரியார். ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக லாரன்ஸ் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் மற்றொரு வேடத்தில் ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

காரணம் இனிமேல் தான் நான் ‘தலைவர் 171’ பட கதையை எழுத இருக்கிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார் லோகேஷ்.

மேலும் 2024 ஏப்ரல் மாதத்தில் தான் இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது ரஜினியுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார் என்ற ட்ரெண்டிங் செய்தி உலா வருகிறது.

Sivakarthikeyan and Lawrence in Thalaivar 171

More Articles
Follows