தனுஷின் ‘பவர் பாண்டி’ படத்தில் நதியாவுக்கு என்ன கேரக்டர்?

தனுஷின் ‘பவர் பாண்டி’ படத்தில் நதியாவுக்கு என்ன கேரக்டர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nadhiya stillsராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க தனுஷ் தயாரித்து இயக்கும் படம் பவர் பாண்டி.

இவருடன் பிரசன்னா, சாயா சிங் நடிக்க, சீன் ரோல்டான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ராஜ்கிரணின் மனைவியாக நதியா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக ஒரே மாதத்தில் முடிக்க திட்டமிள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

பர்ஸ்ட் லுக்குக்கே பர்ஸ்ட் கிளாஸாக உழைத்த ‘பீரங்கிபுரம்’ குழுவினருக்கு ஸ்ரீகாந்த் பாராட்டு

பர்ஸ்ட் லுக்குக்கே பர்ஸ்ட் கிளாஸாக உழைத்த ‘பீரங்கிபுரம்’ குழுவினருக்கு ஸ்ரீகாந்த் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

srikanth namithaசென்னை முதல் ராஜஸ்தான் வரை நெடுஞ்சாலை வழியாகப் போகும் கதையாக உருவாகும் படம் ‘பீரங்கிபுரம்’.

தமிழ்,தெலுங்கு,கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகிறது.கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் நாயகனாக நடிக்கிறார்.. இவர் ‘நானு அவனுள்ள அவளு ‘கன்னடப் படத்துக்காக 2015 க்கான தேசிய விருது பெற்றவர்.

இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ எனப்படும் முதல்பார்வை வெளியீட்டு விழா சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

‘பர்ஸ்ட் லுக்’கை நடிகர் ஸ்ரீகாந்தும் நடிகை நமீதாவும் வெளியிட்டனர்.

இவ்விழாவில் படத்தை இயக்கும் ஜான் ஜானி ஜனார்த்தனா பேசும் போது

” எனக்குச் சொந்த ஊர் திருத்தணிதான். நான் பல்வேறு பெரிய இயக்குநர்களின் படங்களைப் பார்த்து சினிமா கற்றுக் கொண்டேன்.

சினிமா பற்றி பல்வேறு விதத்தில் ஆய்வுகள் செய்தேன். அப்படி உருவானதே இந்தக்கதை.மூத்த தலைமுறைக்கும் இளையதலைமுறைக்கும் இடையே நடக்கும் உளவியல் ரீதியான போர்தான் இக்கதை.

கதை சென்னை முதல் ராஜஸ்தான் வரை போகிறது. ‘பீரங்கிபுரம்’ ராஜஸ்தானில் என் கற்பனையில் உருவாகியுள்ள கிராமம்.

முழுக்கமுழுக்க ராஜஸ்தானில் படமாகவுள்ள தமிழ்ப்படம் இதுவாகவே இருக்கும். படத்தில் ஒப்பனைக்கு முக்கியத்துவம் உண்டு. நடிப்பவர்கள் பலரும் நாடக நடிகர்கள்.பிற நடிகர்கள் அனைவருக்கும்.

முறையாகப் பயிற்சியளிக்கப்பட்டு நடிக்க வைக்கிறோம். உமா மகேஷ்வர் மேக்கப்பில் பேசப்படுவார். நாயகனின் தோற்றத்துக்கு ஐந்து மணி நேரம் மேக்கப் போட்டுள்ளார். .-.

சோதனை முயற்சியாக இப்படத்தை எடுக்க விரும்பினேன்.இது ஒரு முன்னுதாரண படமாக இருக்கும் வகையில் உழைத்து வருகிறோம். ”என்றார்.

நாயகனாக நடிக்கும் சஞ்சாரி விஜய் பேசும்போது,

” தமிழில் இது எனக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. நான் தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சி. அதே நேரம் இப்போது தமிழ்நாட்டு இயக்குநர் பாரதிராஜா அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

ஏனென்றால் தேசிய விருது தேர்வுக்குழுவின் தலைவராக அவர் இருந்த போதுதான் எனக்குத் தேசிய விருது கிடைத்தது. நான் அந்தப் படத்தில் மாற்றுப் பாலின பாத்திரத்தில் ஒரு திருநங்கையாக நடித்திருந்தேன்.

அதே போலவே இதுவும் பொன்னான வாய்ப்பு .நான் கமல், விக்ரம் போன்ற நட்சத்திரங்கள் நடித்த தமிழ்ப்படங்களிள் பெரிய ரசிகன். சிறுவயது முதல் அவர்கள் நடிப்பை ரசித்து வளர்ந்தவன்.

தேசிய விருது பெற்ற ‘நானு அவனுள்ள அவளு ‘ படம் போலவே இந்த’பீரங்கிபுரம்’ படமும் வித்தியாச முயற்சிதான் இதில் இளைஞன் தோற்றம், நடுத்தர வயது தோற்றம், முதிய தோற்றம். என மூன்று வகை தோற்றங்களில் வருகிறேன்.

இது ஒரு சைகாலஜிக்கல் த்ரில்லர் படம். இந்தப் படம் எனக்கு நல்ல அறிமுகமாக அமையும் .வேறு படவாய்ப்புகளையும் தேடித்தரும்.

இங்கே இந்த விழாவுக்கு ஸ்ரீகாந்த், நமீதா வந்திருக்கிறார்கள். இவ்விழா எனக்கு முக்கிய தருணம். ” என்றார்.

pirangi puram

நடிகர் ஸ்ரீகாந்த் பேசும் போது,

” கன்னட மொழியிலிருந்து தேசியவிருது பெற்ற நடிகர்இங்கே தமிழில் நடிக்கிறார். அவரை வரவேற்கிறோம்.

அவர் மொழி தெரியாது பேசினார். சினிமாவுக்கு ஜாதி, மதம், மொழி வேறுபாடு எல்லாம் கிடையாது.
இது கர்நாடகத்துக்கும் பொருந்ந்தும் தமிழ்நாட்டுக்கும்.பொருந்தும்.

அவரை வாழ்த்துகிறேன். இந்தப் படம் பர்ஸ்ட் லுக்கிற்கே இவ்வளவு உழைத்திருக்கிறார்கள்.

சினிமாவில் படப்பிடிப்புக்குப் போய் யோசிப்பவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒரு படம் தொடங்கும் முன்பாகவே ஆறுமாதம் ஒரு வருடம் என்று முன் தயாரிப்பு வேலைகள் செய்திருக்கிறார்கள்.

நன்றாக ஆயத்தம் செய்கிறார்கள். இப்படி எல்லாரும் செய்தால் காலவிரயம் பண விரயம் ஆகாது. இவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.” என்றார்.

நடிகை நமீதா பேசும் போது ,

“அண்மையில் ‘டோண்ட் ப்ரீத் ‘ என்கிற படம் பார்த்தேன்.ஒன்றே முக்கால் மணி நேரத்தில் 1 மணி 10 நிமிடங்கள் வசனமே இல்லை. அப்படி ஒரு பரபரப்பு இருந்தது. எனவே படம் பிடித்து விட்டது.

சினிமாவுக்கு மொழி முக்கியமல்ல. எனக்கு காமெடி ,ஆக்ஷன், சைக்காலஜிக்கல் த்ரில்லர் படங்கள் தனிப்பட்ட முறையில் பிடிக்கும் .’பீரங்கிபுரம்’ படமும் இந்த வகையில் அடங்கும்.

ஜான் ஜானி ஜனார்த்தனா என்கிற இயக்குநர் பெயரைப் பார்த்தும் அந்தக்கால அமிதாப் படம் “ஜான் ஜானி ஜனார்த்தன்’ நினைவுக்கு வந்தது.இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ”என்றார் .

விழாவில் மேக்கப் மேன் உமா மகேஷ்வர், இசையமைப்பாளர் ஸ்யாம். எல். ராஜ் ,நடிகர்கள் சுகுமார். ராணா, ஜெய்கார், நடிகை கானவி,ஒளிப்பதிவாளர் அத்வைதா குரு மூர்த்தி.ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

டாஸ்மாக் இல்லாத ஜிவி. பிரகாஷின் ‘கிக்’ படம்

டாஸ்மாக் இல்லாத ஜிவி. பிரகாஷின் ‘கிக்’ படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashs KIK movie doesnot have any tasmac scenesஅம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ கடவுள் இருக்கான் குமாரு.

இதில் ஜி.வி. பிரகாஷ் உடன் நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.

அம்மா கிரியேஷசன்ஸ் சார்பாக டி.சிவா இப்படத்தை தயாரித்துள்ளார்.

இது ஒரு ரோடு பிலிம் என்பதனால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை சென்னை ஈ.சி.ஆர் ரோடு பாண்டிச்சேரி , கோவா போன்ற டிராபிக் இல்லாத பகுதிகளில் படமாக்கி இருக்கிறார்களாம்.

பெரும்பாலும் ராஜேஷின் படங்களில் டாஸ்மாக் காட்சிகள் அதிகமாக இடம் பெறும். ஆனால் இப்படத்தில் அதுபோன்ற காட்சிகள் எதுவும் இல்லையாம்.

உதயநிதி-பார்த்திபன் கூட்டணியில் ‘ஒரு நாள் கூத்து’ நாயகி

உதயநிதி-பார்த்திபன் கூட்டணியில் ‘ஒரு நாள் கூத்து’ நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthiban udayanithiஇயக்குநர் பொன்ராமின் உதவியாளர் தளபதி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி.

இதில் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறாராம்.

இவர்களுடன் சூரி, ‘ஒரு நாள் கூத்து’ நிவேதா, மயில்சாமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தேனியில் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குகிறது.

இதனைத் தொடர்ந்து மதுரை, கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம்.

எழில் இயக்கத்தில் ஒரு படம், கௌரவ் இயக்கத்தில் ஒரு படம் என உதயநிதி பிஸியாக இருக்கிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

விக்ரமின் ‘இருமுகன்’ திரை முன்னோட்டம்…

விக்ரமின் ‘இருமுகன்’ திரை முன்னோட்டம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

iru mugan stills vikramவிக்ரம் படங்கள் என்றாலே குடும்பத்துடன் பார்க்கக் கூடிய வகையில்தான் இருக்கும்.

இவருக்கு என்று குறிப்பிட்ட ரசிகர்கள் வட்ட இருந்தாலும் இதை மீறி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

அதற்கு காரணம் ஒவ்வொரு படத்திற்காகவும் தன் உருவத்தையே மாற்றிக் கொள்ளும் அற்புத கலைஞர் இவர்.

இனி இருமுகனை ஏன் பார்க்க வேண்டும் என்பதை பார்ப்போமோ?

முதன்முதலாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார் சீயான்.

‘அரிமா நம்பி’ என்ற வெற்றி படத்தை கொடுத்த ஆனந்த் சங்கரின் இரண்டாவது படம் இது.

இப்படத்திற்காக விக்ரமை 10 மாதங்கள் வரை காக்க வைத்திருக்கிறார். அவரும் இதற்காக வளர்க்கப்பட்ட தாடியுடன் பொறுமையுடன் காத்திருந்தார்.

இதில் விக்ரம் ஏற்றுள்ள கேரக்டர்களின் பெயர்களே நம்மை பார்க்க தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

அகிலன் மற்றும் லவ் என்ற இரு கேரக்டரில் நடித்துள்ளார்.

அந்நியன் படத்திலுள்ள ரெமோ கேரக்டர் போல இதில் உள்ள லவ் கேரக்டர் அவருக்கு பெரிய திருப்புமுனையை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது.

மேலும் தென்னிந்தியாவின் சூப்பர் நடிகையான நயன்தாரா இதில் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர்களுடன் திறமையான நடிகை நித்யா மேனனும் இணைந்துள்ளார்.

மெடிக்கல் க்ரைம் சப்ஜெக்டை கமர்ஷியல் கலந்து கொடுத்துள்ளனர்.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஹாரீஸ் ஜெயராஜ் தன் மெலோடி பாடல்கள் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இவரது இசையில் உருவான ‘ஹெலேனா’ பாடலை கேட்காத செவிகள் இல்லை என்னுமளவுக்கு சேனல்களில் ஒலித்து கொண்டே இருக்கிறது.

இப்படம் நாளை செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகிறது.

நாளை விமர்சனத்துடன் சந்திக்கிறோம்.

கடவுளை விட தலைவர்கள் பெரியவர்களா?.. ‘பகிரி’ டைரக்டரின் ‘பகீர்’ ரிப்போர்ட்

கடவுளை விட தலைவர்கள் பெரியவர்களா?.. ‘பகிரி’ டைரக்டரின் ‘பகீர்’ ரிப்போர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pagiri- Prabhu Ranaveera, Shravya (11)நாம் எல்லாரும் அன்றாடம் பயன்படுத்தும் சாதனமாக மாறிவிட்டது செல்போன்.

அதில் உள்ள வாட்ஸ்அப்பை பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் என்கிற அளவில் இருக்கிறது.

இந்நிலையில் வாட்ஸ்அப்பின் தமிழ் சொல்லான பகிரி என்ற பெயரில் ஒரு படம் செப்டம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இசக்கி கார்வண்ணன் இயக்கிய இப்படத்தில் பிரபு ரணவீரன் மற்றும் ஷ்ரவியா ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன் என பல இயக்குநர்கள் முக்கிய வேடமேற்று நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இசக்கி கார்வண்ணன் கூறியதாவது…

‘’இன்றைய இளைஞர்கள் அரசாங்க வேலையையோ, அல்லது வொயிட் காலர் ஜாப் எனப்படும் சொகுசான வேலையையோத் தான் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் டாஸ்மாக் பணியும் ஒன்று.

படத்தின் நாயகனும் நாயகியும் மதுபானக் கடையாக இருந்தாலும் இதுவும் அரசாங்க வேலை தானே என்றுதான் இந்த வேலையில் சேர்கிறார்கள்.

கடை கிடைக்கவில்லை என்பதால் தங்களது வீட்டையே டாஸ்மாக்காக மாற்றி வியாபாரம் செய்வார்கள். அந்த வகையில் டாஸ்மாக் பணியாளர் ஒருவனின் காதல் கதை தான் ’பகிரி’.

இரு குடும்பத்து பெரியவர்களுமே குடிக்கு அடிமையானவர்கள். அதன் விளைவுகளையும் படத்தில் விளக்கியுள்ளேன். நாம் குடிப்பதற்கோ குடியை விற்பதற்கோ தயங்குவதில்லை.

ஏனென்றால் குடி நம் வாழ்க்கையோடே ஒன்றாகிவிட்டது. படம் முழுக்க டாஸ்மாக்கும், குடியுமாக இருக்கும்.

ஆனால் படம் முடியும்போது படத்தை பார்த்த இளைஞர்களுக்கு நாம் செய்வது சரியா? நமக்கு சோறு போடும் விவசாயத்தை வெறுப்பது சரியா? என பல கேள்விகள் நிச்சயம் எழும்.

முன்பெல்லாம் மதுபானக்கடையில் வேலை பார்க்க தயங்குவார்கள். ஆனால் இப்போது இளைஞர்கள் மதுபானக்கடையில் பணிபுரிய விரும்புகிறார்கள்.

இப்படி ஒரு சூழ்நிலை ஏன் உருவானது என்பதும் படம் பார்ப்பவர்களுக்கு புரியும். இதனை விளக்கும்போது நிச்ச்யம் ஆட்சியாளர்களை வசனங்கள் குறிவைக்கும் என்பது தெரியும்.

அதற்காக நான் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை. படம் பார்த்தபிறகு சென்சார் அதிகாரிகளே என்னிடம் ‘படம் பார்க்க நாங்கள் நேரம் குறைவாகத் தான் எடுத்துக்கொண்டோம்.

அதன்பின் எங்களை ஒரு நீண்ட விவாதத்துக்கே அழைத்து சென்றுவிட்டது படம்’ என்றார்கள். இதே விவாதம் படம் வெளியான பிறகு தமிழ்நாடு முழுக்க நடக்கும்.

ஏனென்றால் நான் படத்தின் மூலம் கேட்டிருக்கும் கேள்விகள் எல்லாமே சாமானிய மக்கள் ஒவ்வொருவரின் மனதுக்குள் இருக்கும் கேள்விகள் தான். அவற்றை சாமானிய மக்களின் சார்பில் பதிவு செய்திருக்கிறேன்’’ என்றார்.

Pagiri- Prabhu Ranaveera, Shravya (2)

சென்சார் போர்டில் மிரட்டினார்களாமே?

அதிகாரிகள் அல்ல அது. கீழ்மட்டத்தில் உள்ள மெம்பர்கள் ‘இந்த படம் ரிலீஸானால் உங்களைக் கொன்று விடுவார்கள்’ என்று நேரடியாகவே எச்சரித்தார்கள். நான் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தேன்.

தவிர படத்தில் ஒரு காட்சியில் தமிழகத்தின் முக்கிய இரு தலைவர்கள் வேடம் அணிந்தவர்கள் டாஸ்மாக்கில் வந்து சரக்கு கேட்டு கெஞ்சுவதுபோல ஒரு காட்சி வரும். அதனை நீக்க சொன்னார்கள். நான் மறுத்தேன்.

மதுபானக்கடை என்ற படத்தில் கடவுள் வேடம் அணிந்தவர்களே குடிப்பது போல காட்டினார்கள். தலைவர்கள் என்ன கடவுள்களை விட பெரியவர்களா? என்று கேட்டேன். ஆனால் அதிகாரிகள் பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள்.

அந்த காட்சி உள்பட 18 காட்சிகளை வெட்டச் சொல்லிவிட்டார்கள். அப்படி செய்தும் கூட படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தான் கொடுத்திருக்கிறார்கள்.

மக்களுக்கு நல்லது சொல்லும் ஒரு படத்தை எடுத்தால் இதுதான் நிலைமையா? என்று வேதனையடைந்தேன். யு/ஏ சான்றிதழ் என்பதால் வரிவிலக்கு கிடைக்காது.

பரவாயில்லை. இளைஞர்கள் நல்வழி செல்ல வேண்டும் என்பதற்காக என் லாபத்தை விட்டு தர முடிவு செய்துவிட்டேன்’’ என்றார்.

இளைஞர்களை கவரும் வகையில் கமர்ஷியல் எண்டெர்டெய்னராக உருவாகி இருக்கும் பகிரி படத்தை ‘மீரா ஜாக்கிரதை’, ’பைசா’ படங்களை வெளியிட்ட வொயிட் ஸ்க்ரீன் சார்பில் எம். அந்தோணி எட்வர்ட் உலகம் முழுக்க வெளியிடுகிறார்.

More Articles
Follows