என் ரசிகர்களுக்கு தீரன் போலீஸை பிடிக்கல..; கார்த்தி ஓபன் டாக்

என் ரசிகர்களுக்கு தீரன் போலீஸை பிடிக்கல..; கார்த்தி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

My fans dont like Theeran police says Karthiவினோத் இயக்கத்தில் கார்த்தி-ரகுல் பிரித்தி சிங் நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் கடந்த நவம்பர் 17ஆம் தேதி வெளியானது.

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுடன் இப்படம் தற்போது வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எனவே படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் நாயகி ரகுல் பிரித்தி சிங் தவிர மற்ற கலைஞர்கள் கலந்துக் கொண்டனர்.

இச்சந்திப்பில் கார்த்தி தன் பட அனுபவங்களை பகிர்ந்தார். அப்போது அவர் பேசியதாவது…

எனக்கு ரொமான்ஸ் வராது என பலரும் சொல்வார்கள். ஆனால் இந்த படத்தில் ரகுல் பிரித்தியுடன் காதல் காட்சிகள் நன்றாக இருந்தது என்றார்கள்.

ஒரு 55 வயது மிக்கவர் என்னுடன் பேசும்போது வீட்டிற்கு போவேன். பிள்ளைகள் கேட்டதை வாங்கி கொடுப்போன். ஆனால் வேலை காரணமாக என் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யவில்லை. இந்த படத்தை பார்த்தபோது மனதில் அது பட்டது என்றார்.

இதற்கு முன் சிறுத்தை படத்தில் நான் ரத்னவேல் பாண்டியன் என்ற போலீஸ் வேடத்தில் நடித்திருந்தேன். அது மாஸ் காட்டும் போலீஸ்.

எனவே என் ரசிகர்களுக்கு தீரன் போன்ற போலீஸை பிடிக்கவில்லை” என்றனர்.

My fans dont like Theeran police says Karthi

theeran movie success meet

பதவி மட்டுமே முக்கியம் என நினைக்கும் அரசு கவிழும் : கமல் எச்சரிக்கை

பதவி மட்டுமே முக்கியம் என நினைக்கும் அரசு கவிழும் : கமல் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan tweet about Tamilnadu Governmentகமல்ஹாசன் பதிவிட்டு வரும் ட்விட்டர் கருத்துக்கள் தமிழ்நாட்டு அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் அவரது அரசியல் சார்ந்த ஆயத்த பணிகளை தமிழக அரசு கவனித்து வருகிறது.

இந்நிலையில் சற்றுமுன் அவர் பதிவிட்டுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக Banner”ஜி”க்கள் உணரவேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Kamalhassan tweet about Tamilnadu Government

kamal nov 26 tweet

சீட் நுனியில் உட்கார வைத்துவிட்டார்; தீரனுக்கு ஷங்கர் பாராட்டு

சீட் நுனியில் உட்கார வைத்துவிட்டார்; தீரனுக்கு ஷங்கர் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Shankar praises Theeran Adhigaaram Ondru movie

‘சதுரங்க வேட்டை’ படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கியுள்ளார் வினோத்.

ஜிப்ரான் இசையமைத்திருந்த இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.

காவல்துறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டது.

அண்மையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், தீரன் படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

‘அற்புதமான போலீஸ் படம். நகம் கடித்து, சீட்டின் நுனியில் உட்கார வைத்திருக்கிறார்கள். சிறந்த முயற்சி’ என்று நடிகர் கார்த்தி, இயக்குனர் வினோத், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.

ஷங்கரின் பாராட்டுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Director Shankar praises Theeran Adhigaaram Ondru movie

Shankar Shanmugham‏Verified account @shankarshanmugh
Theeran adhigaram 1 – terrific cop movie.. nail biting..seat edge.. excellent efforts and details by director Vinod.. well done karthi Ghibran Dop and the whole team

ஓடோடி பார்க்க வந்த ரசிகரை அறைந்து தள்ளிய கமல்ஹாசன்

ஓடோடி பார்க்க வந்த ரசிகரை அறைந்து தள்ளிய கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal slams his fan at public place Video goes viralஉலகநாயகன் கமல்ஹாசன் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

அவரை நாம் நேரில் பார்க்க மாட்டோமோ? என பல ரசிகர்களும் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன் நண்பர் ரமேஷ் அரவிந்துடன் ஒரு இடத்திற்கு சென்று வந்துள்ளார்.

கமலின் வருகையை அறிந்த ரசிகர்கள் அங்கு பெருமளவில் திரண்டுள்ளனர்.

அப்போது கமலை பார்த்த ஒரு ரசிகர் ஆர்வமிகுதியால் அவர் அருகில் வந்துள்ளார்.

ஆனால் கமல் அவரை அறைந்து தள்ளிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ ஒரு தற்போது இணையங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இது கமல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal slams his fan at public place Video goes viral

kamal slams

பைனான்சியர் அன்புசெழியனுக்கு ஆதரவாக டி.இமான் வாய்ஸ்

பைனான்சியர் அன்புசெழியனுக்கு ஆதரவாக டி.இமான் வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

d immanஅசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் பைனான்சியர் அன்புசெழியனுக்கு எதிராக பலரும் குரல்கொடுத்து வருகின்றனர்.
மற்றொரு பக்கம் சரத்குமார், விஜய் ஆண்டனி, தேவயானி உள்ளிட்ட சிலர் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் இமான் அவர்களும் தன் ஆதரவு குரலை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில்…
வெள்ளைக்கார துரை, மருது படங்களில் பணிபுரிந்த போது தயாரிப்பாளர் அன்புசெழியனை தெரியும்.
எனக்கு பல நேரங்களில் ஆதரவாக பேசியுள்ளார். எனது பணிகளை பாராட்டியுள்ளார்.
மற்றவர்கள் அவரை நெகட்டிவ்வாக சித்தரித்து வருகின்றனர்.
ஆனால் என்னுடைய பார்வையில் அவர் நல்லவர். அன்பாக நடந்துக் கொள்பவர்தான். நட்பு பாராட்டுபவர்” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அன்புச்செழியன் இல்லன்னா அஜித்-விஜய் படங்கள் கிடையாது : ராஜகுமாரன்

அன்புச்செழியன் இல்லன்னா அஜித்-விஜய் படங்கள் கிடையாது : ராஜகுமாரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director raja kumaran and anbu chezhiyanபிரபல தயாரிப்பாளர் அன்புசெழியன் கொடுத்த கந்துவட்டி பணத்தை கேட்ட விவகாரத்தால் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்துக் கொண்டார்.

எனவே அன்புசெழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷால், சுசீந்திரன், அமீர் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் அன்புசெழியன் நல்லவர், அவர் மீது தவறில்லை என விஜய் ஆண்டனி, தேவயாணி, இயக்குனர் ராஜகுமாரன், தயாரிப்பாளர்கள் தானு, டிசிவா, சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் ராஜகுமாரன் பேசும்போது…

தமிழ் சினிமாவில் தயாராகும் பாதி படங்கள் அவருடைய பணத்தில்தான் தயாராகிறது.

அவர் பணமில்லாமல் அஜித், விஜய் படங்கள் கூட உருவாகாது. அவரே தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்து உதவுகிறார்.

படத்தின் வெளியீட்டு சமயத்திலும் அவர் பல பேருக்கு உதவி செய்து வருகிறார்.” என்று பேசினார்.

More Articles
Follows