விவேகம் விமர்சன சர்ச்சை; யார் பக்கம் நியாயம்.? – ஓர் அலசல்

விவேகம் விமர்சன சர்ச்சை; யார் பக்கம் நியாயம்.? – ஓர் அலசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AJITH VIVEGAMஒரு படம் உருவாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உழைக்கின்றனர்.

இரவு பகலாக பாடுபட்டு சேர்த்த பணத்தை கோடிக்கணக்கில் செலவழித்து ஒரு படத்தை உருவாக்குகிறார் தயாரிப்பாளர்.

படம் வெளியாகும் சமயத்தில் சென்சார் பிரச்சினை முதல் தடை வழக்கு வரை பல பிரச்சினைகளையும் அவர் சந்திக்கிறார்.

இதில் வரிவிலக்கு பெற யு சான்றிதழ் வேண்டுமென்றால் சிலரை அவர் கவனிக்க வேண்டிய சூழ்நிலையும் வருகிறது.

இதுபோன்ற பல கட்டப் பிரச்சினைகளை தாண்டி வந்தால், தியேட்டர்கள் கிடைப்பதில் பல சிரமங்கள் சந்திக்க நேரிடுகிறது.

அப்பாடா ஒரு வழியாக படம் ரிலீஸ் ஆகிவிட்டது என்று நினைத்தால் அன்றைய தினமே வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தின் வசூலை பாதிக்கிறது.

அண்மையில் வெளியான அஜித்தின் விவேகம் படத்தை கடுமையாக ப்ளுசட்டை மாறன் விமர்சித்து இருந்தார்.

எனவே அவருக்கு திரையுலகின் சார்பாக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதுபற்றிய ஓர் அலசலை இங்கே பார்ப்போம்…

ஒரு படம் வெளியாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உழைக்கிறார்கள் என்பதை போலதான் உழைக்கும் மக்கள் தங்கள் பணத்தை ஒரு படத்திற்காக செலவழிகின்றனர்.

அதுவும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள படங்கள் என்றால் தங்கள் குடும்பத்தோடு வந்து பார்க்கின்றனர்.

மேலும் தியேட்டருக்குள் சென்றால், வண்டி பார்க்கிங் முதல் பப்ஸ், பாப்கார்ன் செலவு என  ரூ.1500ஐ தாண்டுகிறது.

இவை அனைத்தையும் மீறி சந்தோஷமாக படத்திற்கு வந்தால், அப்படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால், நிச்சயம் கோபம் வரத்தான் செய்யும்.

எனவேதான் அவர்கள் படம் பார்க்கும் முன்பு விமர்சனம் செய்பவர்களின் தளங்களை பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட 150க்கும் மேற்பட்டவர்கள் விமர்சனம் செய்தாலும் ஒருசிலரின் விமர்சனங்கள் மட்டுமே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

காரணம் அவர்கள் சொன்னால் சரியாக இருக்கும்? என்று பார்வையாளர்கள் நம்புகின்றனர்.

எனவே விமர்சகர்களின் கருத்தைக் கேட்ட பின்னரே படத்திற்கு செல்கின்றனர்.

தான் உழைத்த பணத்தை உருப்படாத படத்திற்கு செலவழிக்க அவர்கள் விரும்பவில்லை என்பதே உண்மை.

நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்க்கும் திரையுலகினர் முதலில் தங்கள் துறை சார்ந்த தவறுகளையும் சரி செய்துக் கொள்ள வேண்டும்.

கடுமையாக விமர்சனம் செய்யும் ஒருவருக்கு லட்சணக்கணக்கில் பாலோயர்கள் இருக்கிறார்கள் என்றால் எதற்காக அவரிடம் விளம்பரங்களை கொடுக்க வேண்டும்.?

அதன்மூலம் அவர்களின் படங்களை விளம்பரம் செய்யத்தானே நினைக்கிறார்கள்.

அது மற்றொரு தயாரிப்பாளரின் உழைப்பை இந்த தயாரிப்பாளர் கெடுக்கின்றார் என்றுதானே அர்த்தம்.

தன் படத்திற்கு சாதகமான விமர்சனங்கள் வரும்போது ஏற்றுக் கொள்ளும் திரையுலகினர் பாதகமான விமர்சனங்கள் வரும்போதும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

பாகுபலி2 படத்தில் பிரபாஸ் ஒரு தேரை இழுப்பது போன்ற காட்சியிருக்கும்.

அது நம்பமுடியாத ஒன்றுதான். ஆனால் அதை நம்பும்படியாக பிரம்மாண்டமாக கொடுத்திருப்பார் இயக்குனர் ராஜமௌலி.

அதுபோல் அவரின் நான் ஈ படத்தில் ஒரு ஈயை வைத்து சாகசங்கள் காட்டியிருப்பார்.

அதுவும் நம்ப முடியாத ஒன்று என்றாலும் ஜனங்கள் பார்த்து ரசித்தனர்.

சினிமா என்பது ஒரு கனவு தொழிற்சாலை. அதில் நிஜங்களுக்கும் கனவுகளுக்கும் நிறைய இடமுண்டு.

எனவே ஒரு கற்பனையை கூட மக்கள் ஏற்றுக் கொள்ளும்வகையில் கொடுத்தால் அதை நிச்சயம் ரசிப்பார்கள்.

விவேகம் படத்தில் 200 பேர் இருக்கும்போது அஜித் பன்ச் வசனம் பேசிவிட்டு பிறகுதான் தப்பி செல்வார். அதுவரை சுடாதவர்கள் பின்னர்தான் சுடுவார்கள்.

ஆனாலும் அஜித் மற்றவர்கள் சுட்டுத் தள்ளிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்.

இதுபோன்ற கற்பனையைத்தான் மக்கள் ரசிக்க மறுக்கிறார்கள். அது யாராக இருந்தாலும்.

சின்ன பட்ஜெட் படங்களை விமர்சகர்கள் கழுவி ஊத்தினால் கண்டுக்கொள்ளாத திரையுலகம், பெரிய ஹீரோக்களின் படங்கள் பற்றி பேசினால் மட்டும் வரிந்துக் கட்டிக் கொண்டு வருவது நோக்கம் என்ன?

அவர்களும் எல்லா படங்களையும் சரிசமமாக எண்ண வேண்டும்.

இது ஒருபுறம் இருக்கட்டும்…

படத்தை விமர்சனம் செய்பவர்கள் படத்தின் பாடல்கள் சரியில்லை என்றால் அதை சொல்ல வேண்டும். மற்ற காட்சிகளை பாராட்டியிருக்கலாம்.

ஒட்டுமொத்தமாக குப்பை என்று கூறிவிடக்கூடாது. அதில் உள்ள மைனஸ் எது? ப்ளஸ் எது? என்பதை தெரிவிக்க வேண்டும்.

அவரின் பார்வையில் தவறாக தென்படும் ஒரு விஷயம் மற்றவர்களின் பார்வையில் சரியாபடலாம்.

அதுபோல் பணம் கொடுத்து பாராட்ட சொன்னால் அந்த படத்தை பற்றி ஒரேடியாக புகழ்வதும், இல்லையென்றால் இகழ்வதும் இருந்தால் விமர்சகரின் மதிப்பும் ஒரே அடியாக குறைந்துவிடும்.

படத்தின் தவறுகளை சுட்டிக் காட்டினால் சினிமா துறையினர் அடுத்தடுத்த படங்களில் திருத்திக் கொள்வார்கள்.

அதுபோல், ஒரு படத்தை விமர்சனம் செய்பவர்கள் அந்த படத்தை பற்றி மட்டுமே பேச வேண்டும்.

கபாலி படத்தை பற்றி ப்ளு சட்டை மாறன் விமர்சனம் செய்யும் போது, படம் ரிலீஸ்க்கு பிறகு ரஜினி அமெரிக்காவில் போய் படுத்துக் கொண்டார் என தெரிவித்தார்.

இதற்கு கபாலிக்கும் சம்பந்தமில்லை. மாறன் வீட்டில் அவர் வந்து தங்கவில்லையே.

அவருக்கு தொந்தரவாக இருக்கவில்லையே. இதுபோன்ற தேவையில்லாத விஷயங்களை அவர் தவிர்த்திருக்கலாம்.

இவையனைத்தும் கருத்தில் கொண்டு இரு தரப்பினரும் செயல்பட்டால் மட்டுமே நல்ல சினிமா கிடைக்கும். மக்களும் அதை பாராட்டுவார்கள்.

நட்புடன்… ராஜேஷ்

Movie reviewers and Cine Celebrities condemn issues

உத்தமவில்லன் இயக்குனரின் குயின் ரீமேக்கில் காஜல் அகர்வால்

உத்தமவில்லன் இயக்குனரின் குயின் ரீமேக்கில் காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Kajal Aggarwalஒரே சமயத்தில் விஜய்யுடன் மெர்சல் மற்றும் அஜித்துடன் விவேகம் படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால்.

இந்நிலையில் இவர் ‘குயின்’ இந்திப்பட ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

இப்படத்தை நடிகரும் உத்தமவில்லன் படத்தின் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கவிருக்கிறார்.

முதலில் இப்படத்தை நடிகை ரேவதி அல்லது சுகாசினி இயக்குவார் என்ற கூறப்பட்டது.
இந்தியில் வெற்றிப் பெற்ற ‘குயின்’ படத்தை தென்னிந்திய கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு மாற்றவிருக்கிறார்களாம்.

அன்னை தெரசா பெயரை தன் மகளுக்கு சூட்டிய நிவின்பாலி

அன்னை தெரசா பெயரை தன் மகளுக்கு சூட்டிய நிவின்பாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivin Pauly with his daughter’நேரம்’, பிரேமம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நிவின்பாலி.

இவர் தற்போது ரிச்சி என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இவரது மனைவி பெயர் ரினா ராய். இவருக்கு டேவிட் என்ற 5 வயது மகன் இருக்கும் நிலையில் கடந்த மே மாதம் மகள் பிறந்தாள்.

தற்போது அந்த குழந்தைக்கு ரோஸ் தெரசா எனப் பெயரிட்டுள்ளார்.

குழந்தையின் புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

எம்ஜிஆருடன் ரஜினி படத் தலைப்பை இணைத்த அமீர்

எம்ஜிஆருடன் ரஜினி படத் தலைப்பை இணைத்த அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Ameerமௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அமீர்.

அதன்பின்னர் ’யோகி’ படத்தில் நடிகராக அறிமுகமானார்.

தற்போது ஆர்யாவும் அவரது தம்பி சத்யாவும் நடித்து வரும்’சந்தனத் தேவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் ’எம்.ஜி.ஆர் பாண்டியன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம்.

பாண்டியன் என்ற தலைப்பில் ரஜினி, குஷ்பூ நடித்த படம் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் பாண்டியன் படத்தை தப்பாட்டம் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்குகிறார்.

இதில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக அமீர் நடிக்க, சாந்தினி, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

வித்யாசாகர் இசையமைக்கும் இதன் சூட்டிங் தேனியில் நடக்கிறது.

ஆணை மன்னிக்கும் சமூகம் பெண்ணை மன்னிப்பதில்லை… தரமணி பற்றி லிஸி ஆண்டனி

ஆணை மன்னிக்கும் சமூகம் பெண்ணை மன்னிப்பதில்லை… தரமணி பற்றி லிஸி ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Lissy Antony talks her experience in Taramani movieஅண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமாரின் மன அழுத்தமுள்ள மனைவியாக வந்து கடைசியில் சுடப்பட்டு இறந்து போகும் பாத்திரத்தில் நடித்திருப்பவர் லிஸி ஆண்டனி.

படத்தில் அந்தப் பாத்திரம் பெரிய போலீஸ் அதிகாரியின் மனைவியாக இருந்தும் புறக்கணிப்பு தனிமை. அவமதிப்பு, கண்டுகொள்ளாமை, வெறுமை, சந்தேகப்பார்வை என்று பல வலிகளைத் தன்னுள் தாங்கி மன அழுத்தம் கொண்ட ஒன்றாக இருக்கும். அப்பாத்திரத்தின் அடையாளமின்மையின் குறியீடாக படத்தில் பெயரே இருக்காது.

ஆனால் படத்தின் திருப்பமாக அதன் முடிவு இருக்கும். அதில் நடித்திருப்பவர் தான் நடிகை லிஸி ஆண்டனி.

படத்தில் அப்படி மனப் புழுக்கம் கொண்டவராக நடித்துள்ள லிஸி நிஜத்தில் நேர் எதிர்.ஆங்கிலோ இந்தியன் பள்ளிப் படிப்பு, ஸ்டெல்லா மேரீஸில் பி.காம். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம். என்று முடித்தவர்.

ஷாப்பிங் போவதுதான் பெண்கள் உலகம் என்று கருதப்படும் நிலையிலிருந்து ஷிப்பிங் துறை என்று ஈடுபட்டு உலக நாடுகள் பலவற்றை வலம் வந்தவர்.

அவருடன் பேசிய போது…

“எங்களுக்குப் பூர்வீகம் கேரளா, என்றாலும் நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னைதான். அதுவும் வட சென்னை வண்ணாரப்பேட்டை. எங்கள் குடும்பம் ஆச்சாரமான கிறிஸ்தவக் குடும்பம்.

சினிமா பார்க்க அனுமதி இல்லை.

அப்பா விமானப்படையில் இருந்தார். பிறகு நேவியில் ஷிப்பிங்கில் எலெக்ட்ரிகல் ஆபீஸர். எனக்கும் ஆகாயத்தில் பறக்கவும் கடலில் கப்பலில் பயணம் செய்யவும் ஆசை.

என் கனவு கப்பல் மாலுமி ஆக வேண் டும் என்பது தான். ஆனால் அம்மா விடவில்லை.

ஷிப்பிங்கில் ஈடுபடும் வரை நானும் சாதாரண சராசரி மனுஷியாகத்தான் இருந்தேன். இந்தியாவை விட்டு புறப்பட்டதும் நான் மொத்தமாக மாறினேன். எனக்குள் இருந்த இன்னொரு மனுஷியைக் கண்டேன்.

இந்தியா வந்த போது எனக்கு நட்பான இயக்குநர் ராம்சார் முதலில் ‘தங்க மீன்கள்’ படத்தில் நடிக்க அழைத்தார். நட்பின் பேரில் தான் அதில் ஸ்டெல்லா மிஸ் பாத்திரத்தில் நடித்தேன்.

ஆனால் அது பெரிய அளவில் போய்ச் சேர்ந்தது.என்னை எல்லாரும் ஸ்டெல்லா மிஸ் என்று அழைக்க ஆரம்பித்தனர். ராம்சார் இப்போதும் அப்படித்தான் அழைப்பார்.

இப்படியான நட்பில் பிறகு சிறு சிறு வேடங்களில் சுமார் 15 படங்கள் நடித்திருப்பேன். இப்போது தரமணியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.” என்று தன் முன் கதையைச் சொல்லி முடித்தார்.

‘தரமணி’ பட அனுபவம் பற்றிப் பேசும் போது, ” எனக்கு ராம்சார் மீது நம்பிக்கை உண்டு. அவரது படைப்புத் திறமை மீது பெருமிதம் உண்டு. அவர் மீண்டும் அழைத்தபோது கண்ணை மூடிக் கொண்டு சம்மதம் சொன்னேன்.

காரணம் அவர் எந்தக் கதாபாத்திரத்தையும் பேச வைத்து விடுவார். படத்தில் முக்கியமாக ஆறு தம்பதிகள் வருகிறார்கள். எல்லாரையும் மறக்க முடியாதவர்களாக காட்டியுள்ளார். என் பாத்திரமும் அப்படித்தான்.

இதற்கு ஏழு நாட்கள் ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு சுமுகமாக இருந்தது. ராம்சார் இயல்பாக நடிக்க வைப்பார். ஏன் அழுகிற காட்சிகளில் கூட கிளிசரின் தர மாட்டார். நினைத்து அழுகை வர வைக்கும்படி வாழ்க்கையில் கோபம் எதுவுமே இல்லையா என்பார்.

இப்படித்தான் எங்களிடம் நடிப்பை வாங்கினார்.

நான் கிளிசரின் போடாமல் தான் அழுதேன். அவர் எப்போதும் தன் படக் குழுவை ஒரு குடும்பமாக உணர வைப்பார். யாருக்கும் எந்த அசெளகரியமும் இருக்காது. இப்படி தரமணி மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

இரண்டு பெரிய படங்களுடன் ‘தரமணி ‘வெளியாகி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி. பாராட்டுகள் குவிந்து வருவது பரவசம் தருகிறது. ” என்கிறார்.

‘தரமணி’ படம் பற்றி பல்வேறு கருத்துகள் அலையடிக்கின்றன. ஒரு பெண்ணாக லிஸி என்ன நினைக்கிறார்? என்ற போது,

” படத்தில் பெண்களின் பிரச்சினைகளை, குமுறல்களை, வலிகளை, ஏக்கங்களை தைரியமாகச் சொல்லியிருக்கிறார். பெண்களின் குரலாக அவர் பேசியிருக்கிறார். இது பலரும் சொல்லத் தயங்கும் பிரச்சினையாகும்.

ஒரு ஆண் தவறு செய்தால் மன்னித்து ஏற்றுக் கொள்கிற சமூகம், ஒரு பெண் தவறிழைத்தால் ஏற்றுக் கொள்வதில்லை. பாதிக்கப்படும் ஒரு பெண் யாரோ ஒருவரின் மகள்தானே? யாரோ ஒருவரின் அக்கா தானே? என்று அழகம் பெருமாள் பாத்திரம் மூலம் பேசுவது மனதைத் தொட்டது.

பெண்களின் மனக்குரலை அவர் பேசியிருக்கிறார். அவர் குரலை ஒரு பெண்ணாக நான் வழிமொழிகிறேன்.” என்கிறார்.

லிஸி ஆண்டனி இப்போது நடிக்கும் படங்கள் ? ராமின் அடுத்த படமான ‘பேரன்பு ‘, ‘சூ மந்திரக்காளி’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘ பரியேறும் பெருமாள் ‘, ‘மூடர் கூடம்’ ஒளிப்பதிவாளர் டோனி இயக்கும் படம் மேலும் ஒரு புதிய படம் என ஐந்து புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் லிஸி இப்போ ரொம்ப பிஸி.

Actress Lissy Antony talks her experience in Taramani movie

taramani lissy antony

மெர்சல் டீசர் ரிலீஸானால் விவேகம் வசூல் பாதிக்கும்.. ரூபன் தகவல்

மெர்சல் டீசர் ரிலீஸானால் விவேகம் வசூல் பாதிக்கும்.. ரூபன் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vivegam mersal vijayசில தினங்களுக்கு முன் மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

அப்போது சில தினங்கள் மெர்சல் டீசர் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து இப்படத்தின் எடிட்டர் ரூபன் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

‘சமீபகாலமாக சினிமாவுக்கு எதிரான நிறைய விஷயங்கள் நடந்து வருகின்றன. சினிமாவை பற்றி அனைவரும் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர்.

பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்கின்றனர்.

இதனால் சில படங்கள் ரசிகர்களால் வெறுக்கப்படுகின்றன. நடிகர்களையும் வெறுக்கிறார்கள்.

இப்படி உலகம் முழுவதும் தவறான விஷயங்கள் பரவுகிறது. இது எல்லாவற்றையும் தாண்டி அஜித், விஜய், இயக்குனர்கள் அட்லீ, சிவா, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி பிலிம்ஸ், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ஆகியோரின் நல்ல எண்ணத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒவ்வொருவரும் மற்றொருவரின் உழைப்பை மிகவும் மதித்து வேலை செய்கின்றனர். தன் படத்தின் டீசர் வருவதால் மற்றொருவரின் படம் பாதிக்கப்பட கூடாது என்று பார்த்து பார்த்து வேலை செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மெர்சல் டீசர் வெளியானால் விவேகம் வசூல் பாதிக்கும் என்பதை அவர் விளக்கியுள்ளார்.editor ruben

More Articles
Follows