ரஞ்சித் தயாரிப்பில் இணைந்த ஜோடி ஜிவி. பிரகாஷ் – ஷிவானி

ரஞ்சித் தயாரிப்பில் இணைந்த ஜோடி ஜிவி. பிரகாஷ் – ஷிவானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.

ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஜிவி. பிரகாஷ் - ஷிவானி

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார்.

படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது பா.இரஞ்சித் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இயக்குனர் பா.இரஞ்சித் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்காக தொடர்ந்து படங்கள் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி. பிரகாஷ் - ஷிவானி

இந்தப்படத்தில் நடிப்பதோடு படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார் ஜீவி பிரகாஷ்.

படத்திற்கு ஒளிப்பதிவு- ரூபேஷ் சாஜி,
படத்தொகுப்பு- செல்வா RK.
கலை- ரகு,
சண்டைப்பயிற்சி- ஸ்டன்னர் சாம்.
உடைகள் – சபீர்
நிழல்படம் – Rs ராஜா

PRO- குணா.

ஜிவி. பிரகாஷ் - ஷிவானி

Gv Prakash and Shivani starring in Ranjith production

பாலிவுட் ப்ரொடியூசருக்கு ‘தலைவர் 172’ பட வாய்ப்பை கொடுத்த ரஜினிகாந்த்

பாலிவுட் ப்ரொடியூசருக்கு ‘தலைவர் 172’ பட வாய்ப்பை கொடுத்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி தற்போது ஞானவேல் இயக்கிய வரும் ‘வேட்டையன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் ‘தலைவர் 172’ படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.

’தலைவர் 172’ படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாடியவாலா என்பவர் தயாரிக்க இருக்கிறார்.

’ரஜினியுடன் இணைவது சந்தோஷமாக இருக்கிறது.. எனக்கு மறக்க முடியாத பயணமாக இருக்கும்” இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

பாலிவுட்டில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்து உள்ளார் சாஜித் நாடியவாலா. ’ஹவுஸ் ஃபுல்’ படத்தின் 5 பாகங்களையும் ’பாகி’ படத்தின் 3 பாகங்களையும் தயாரித்து உள்ளார் சாஜித் நாடியவாலா.

ரஜினிகாந்த்

Thalaivar 172 movie news update

பத்ம விபூஷண் பெற்ற சிரஞ்சீவிக்கு அமெரிக்க ரசிகர்கள் நடத்திய பிரம்மாண்ட விழா

பத்ம விபூஷண் பெற்ற சிரஞ்சீவிக்கு அமெரிக்க ரசிகர்கள் நடத்திய பிரம்மாண்ட விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகில் ‘மெகாஸ்டார்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் தனது வெற்றி பயணத்தை தொடர்ந்து வரும் ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவி இளம் நடிகர்களுக்கு சவால் விடும் விதமாக இப்போதும் சீரான இடைவெளிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் திரையுலகுக்கு அவர் ஆற்றிய கலைச் சேவைக்காகவும் அவர் செய்துள்ள மிகப்பெரிய சாதனைகளுக்காகவும் அவருக்கு நமது நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவியை கவுரவிக்கும் விதமாக மிக பிரம்மாண்ட விழா ஒன்றை அமெரிக்காவில் உள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ரசிகர்கள் நடத்தியுள்ளனர்.

இந்த நிகழ்விற்கு பீப்புள் மீடியா ஃபேக்டரி சிஇஓ விஸ்வ பிரசாத் பொறுப்பேற்று நடத்தி உள்ளார் .

சிரஞ்சீவி

இதுகுறித்து அவர் கூறும்போது..

“’மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி போன்ற மிகப்பெரிய ஜாம்பவானுக்கு இதுபோன்று விழா எடுப்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இந்த விழா திரை உலகில் அவர் செய்த சாதனைகளுக்காக மட்டுமல்ல.. பல தலைமுறை நடிகர்களுக்கு அவர் ஒரு உந்துசக்தியாக இருந்துள்ளார் என்பதற்காகவும் தான்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் டானா பாயிண்ட்டில் உள்ள ரிட்ஸ் கேரிட்டானில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் ஆயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிரஞ்சீவி மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வின் போது பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியை கௌரவிக்கும் இந்த முயற்சிக்கு அமெரிக்காவில் உள்ள அவரது ரசிகர்களும் தோள் கொடுத்து உறுதுணையாக நின்றனர். இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தும் விதமாக ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவியின் ரசிகரும் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த தொழிலதிபர் இம்தியாஸ் ஷெரீப் ஒருங்கிணைப்பு பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டார்.

சிரஞ்சீவி

இது குறித்து அவர் கூறும்போது…

“லாஸ் ஏஞ்சல்ஸில் ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவிக்கு இப்படி ஒரு விழா எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்காக பெருமைப்படுகிறேன். என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்த விஸ்வ பிரசாத் அவர்களுக்கு நன்றி.

இந்த நிகழ்வை மிகப்பெரிய அளவில் வெற்றி ஆக்கியதற்கு தங்களது ஆதரவை கொடுத்த மெகாஸ்டாரின் ரசிகர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றி” என்று கூறியுள்ளார் இம்தியாஸ் ஷெரீப்.

சிரஞ்சீவி

Chiranjeevi fans celebration at America

காடுகள் பின்னணியில் ‘சத்தியமங்கலா’ படத்தை உருவாக்கிய ஆர்யன்

காடுகள் பின்னணியில் ‘சத்தியமங்கலா’ படத்தை உருவாக்கிய ஆர்யன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகின் அதிவேக ஆவணப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவரும் குறும்படத்திற்காக‌ சர்வதேச விருதுகளை வென்றவருமான‌ ஆர்யன், ‘சத்தியமங்கலா’ என்ற பான்-இந்தியா திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை ஏஎஸ்ஏ புரொடக்‌ஷன் மற்றும் அயிரா புரொடக்‌ஷன்ஸ் பேனர்களில் ஷங்கர் பி மற்றும் ஷசிரேகா நாயுடு தயாரிக்கின்றனர்.

‘கோலி சோடா’ புகழ் முனிகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் ‘சத்தியமங்கலா’ படத்தில் கதாநாயகியாக கனக் பாண்டே நடிக்கிறார்.

தி கிரேட் காளி (WWE உலக சாம்பியன்), பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ராதா ரவி, சரிதா, ரவி காலே, ரெடின் கிங்ஸ்லி, ‘பாகுபலி’ பிரபாகர், விஜய் சிந்தூர், மனேதேஷ் ஹிராமத் மற்றும் சஞ்சய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சத்தியமங்கலா

படம் பற்றி இயக்குந‌ர் ஆர்யன் பேசுகையில்…

“காடுகளின் பின்னணியில் விறுவிறுப்பான சாகச திரில்லராக ‘சத்தியமங்கலா’ உருவாகி வருகிறது. இப்படத்தில் தான் ஏற்றிருக்கும் மிகவும் சவாலான பாத்திரத்திற்காக முனிகிருஷ்ணாவின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு அசாத்தியமானது.

இதர‌ நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப‌ குழுவினரும் தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்,.

பாங்காக், நேபாளம் போன்ற இடங்களில் 32 நாட்களில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். இலங்கை, பாங்காக், நேபாளம், தமிழ்நாடு, கர்நாடக வனம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இரண்டாவது கட்டம் படமாக்கப்படுகிறது. மிகவும் சிறப்பாக இப்படம் உருவாகி வருகிறது.

சத்தியமங்கலா

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களான ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் ஐரா நிறுவனங்களுக்கு நன்றி. இந்த படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பரபரப்பான திரில் அனுபவமாக இருக்கும்.”

‘சத்தியமங்கலா’ படத்திற்கு ஷங்கர் ஆராத்யா ஒளிப்பதிவு செய்ய‌, வீர் சமர்த் இசையமைக்கிறார். ரவிச்சந்திரன் படத்தொகுப்பை கையாள்கிறார். ஸ்டீபன் எம் ஜோசப் வசனங்களை எழுத‌, சின்னி பிரகாஷ் நடன வடிவமைப்பை கவனிக்க‌, பீட்டர் ஹியன் சண்டைப் பயிற்சியை வழங்குகிறார்.

ஏஎஸ்ஏ புரொடக்‌ஷன் மற்றும் அயிரா புரொடக்‌ஷன்ஸ் பேனர்களில் ஷங்கர் பி மற்றும் சசிரேகா நாயுடு தயாரிக்க, முனிகிருஷ்ணா, கனக் பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கம் ஆர்யன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சத்தியமங்கலா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

சத்தியமங்கலா

Sathyamangala high octane adventure thriller directed by Aryan

ரஜினி பேசிய பஞ்ச் டயலாக் டைட்டிலானது.; சந்தானத்திற்கு கை கொடுத்த கமல்

ரஜினி பேசிய பஞ்ச் டயலாக் டைட்டிலானது.; சந்தானத்திற்கு கை கொடுத்த கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தில் ‘இங்க நான் தான் கிங்கு’ என்ற பஞ்ச் டயலாக் பேசி இருப்பார் ரஜினிகாந்த்.

தற்போது அதுவே சந்தானம் நடிக்கும் படத்தின் தலைப்பாகி உள்ளது.. அதன் விவரம் வருமாறு..

சந்தானம் நடிக்கும் புதிய படமான ‘இங்க நான் தான் கிங்கு’ முதல் பார்வை, உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்ட இங்க நான் தான் கிங்கு

G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’, ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

‘இங்க நான் தான் கிங்கு’ என்ற இப்படத்தின் தலைப்பையும் முதல் பார்வை போஸ்டரையும் உலகநாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார்.

அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். D. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவு – ஓம் நாராயண் எடிட்டிங் – எம். தியாகராஜன்
கலை – எம். சக்தி வெங்கட்ராஜ் ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்.

பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் கல்யாண் – பாபா பாஸ்கர்.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை உலகநாயகன் கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.

கதையம்சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிக்கிறார். 2024 கோடை விடுமுறை காலத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Kamal releases first look of Santhanam-starrer Inga Naan Thaan kingu

ஓர் அழகான குடும்ப கதையை சொல்ல மகளிர் தினத்தில் வருகிறாள் ‘ஜெ பேபி’

ஓர் அழகான குடும்ப கதையை சொல்ல மகளிர் தினத்தில் வருகிறாள் ‘ஜெ பேபி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி.

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே
வெளிவந்திருக்கிறது.

‘ஜெ பேபி ‘ படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

ஜெ பேபி

ஜெ பேபி திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவினரையும்
படத்தின் இயக்குனர் சுரேஷ் மாரி, படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் , சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் அவசியம் தங்களது அம்மாக்களையும் அழைத்து வாருங்கள்.

இது எல்லோருக்குமான படம்” என்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.

‘ஜெ பேபி’ படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

ஜெ பேபி

J Baby movie set to release on womens day

More Articles
Follows