எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளில் அவரின் புதுப்படத்தை தொடங்கி வைக்கும் ரஜினி

MGR with Rajinikanthஎம்.ஜி.ஆர் தயாரித்து, நடித்து மாபெரும் சூப்பர் ஹிட்டான படம் உலகம் சுற்றும் வாலிபன் (1973.

இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் லதா, சந்திரலேகா, மஞ்சுளா, நாகேஷ், நம்பியார், அசோகன் உள்பட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் க்ளைமாக்ஸில் விரைவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்று எம்.ஜி.ஆர் டைட்டில் கார்டு போட்டார்.

அதாவது உலகம் சுற்றும் வாலிபனின் இரண்டாம் பாகத்தை கிழக்கு ஆப்பிரிக்காவில் படமாக்க நினைத்திருந்தார்.

ஆனால் அவர் அரசியலில் பிசியாகி விட்டதால் அது நடக்கவில்லை.

இப்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற தலைப்பில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகத்தை எம்.ஜி.ஆர் உருவத்தைக் கொண்டு அனிமேஷன் படமாக தயாரிக்கிறார்கள்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஜசரி கணேசன் மற்றும் நடிகர் பிரபுதேவா இணைந்து தயாரிக்கின்றனர்.

இதற்கான விழா இன்று ஜனவரி 17ந்தேதி அடையாறு சத்யா ஸ்டூடியோவில் நடைபெற உள்ளது.

இதில் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்துக் கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்று எம்ஜிஆரின் 101வது பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

தனுஷ் நடிப்பில் வளர்ந்துள்ள ‘அசுரன்' படம்…
...Read More
எம்ஜிஆர் நடித்த, உலகம் சுற்றும் வாலிபன்,…
...Read More
பரதன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்…
...Read More

Latest Post