‘எம்ஜிஆர் போல இருங்க; இப்போ டைரக்ஷன் வேண்டாம்..’ தனுஷுக்கு ரஜினி அட்வைஸ்

nadodi mannanதனுஷ் தயாரித்து, இயக்கி, பாடல்கள் எழுதி பாடிய நடித்துள்ள பவர் பாண்டி படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இதில் தனுஷ் உடன் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரேவதி, மடோனா உள்ளிட்டோர் நடிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே, தன் மருமகனின் இயக்கத்தை பார்த்த ரஜினி, தனுஷ்க்கு சில அட்வைஸ் செய்தாராம்.

படம் ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் கொஞ்ச நாளைக்கு டைரக்ஷன் வேண்டாம். அப்போதான் இந்த படம் அதிகமாக பேசப்படும்.

எம்ஜிஆரும் இதே பார்முலாவைதான் கடைப்பிடித்தார்.

‘நாடோடி மன்னன்’ படத்துக்குப் பிறகு கிட்டதட்ட 15 வருஷம் கழிச்சுதான் படம் டைரக்டர் செய்தார்.

நீங்க அடுத்த படத்தை தள்ளி வையுங்க” என்று கூறினாராம்.

எம்ஜிஆர் இயக்கிய படங்கள்…

  • நாடோடி மன்னன் (1958)
  • அரசகட்டளை (1967 எம்ஜிஆரின் அண்ணன் எம்ஜி சக்ரபாணி இயக்கம்)
  • உலகம் சுற்றும் வாலிபன் (1973)
  • மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978)

After Watching Power Paandi movie Rajini advice to Dhanush

Overall Rating : Not available

Latest Post