‘ஜெயம்’ ரவியை செலக்ட் செய்த எம்ஜிஆர் பிக்சர்ஸ்

‘ஜெயம்’ ரவியை செலக்ட் செய்த எம்ஜிஆர் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam raviஎம்ஜிஆர் நடித்த, உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன், அடிமைப் பெண் உள்ளிட்ட பல ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் எம்ஜிஆர் பிக்சர்ஸ்.

அவரின் மறைவுக்குப் பிறகு இந்நிறுவனம் படங்களைத் தயாரிப்பதை நிறுத்திக் கொண்டது.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் படத்தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

எனவே அதற்கான நாயகனை தேடுதல் வேட்டையில் இந்நிறுவனம் இறங்கியது.

அதன்படி புதிய படத்தில் நடிக்க ’ஜெயம்’ ரவியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

மிரட்டலுக்கு பயந்து ரூ. 9 கோடியை கொடுக்கும் சிவகார்த்திகேயன்?

மிரட்டலுக்கு பயந்து ரூ. 9 கோடியை கொடுக்கும் சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan‘ரெமோ’ படத்தின் வெற்றி விழாவில் தனக்கு நிறைய இடைஞ்சல்களை சிலர் செய்து வருகின்றனர் என சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்க பேசினார்.

இப்பிரச்சினை எழ முக்கிய காரணமானவர்களில் வேந்தர் மூவீஸ் மதனும் ஒருவர் என கூறப்பட்டது.

அதாவது வேந்தர் மூவிஸ்க்கு படம் செய்து தருவதாக ஒப்புக் கொண்ட சிவகார்த்திகேயன் ரூ. 3 கோடியை பெற்றதாக சொல்லப்பட்டு வருகிறது.

ஒருவேளை அவர் ஒப்புக் கொள்ளாவிட்டால், அப்பணத்துடன் வட்டியை சேர்த்து, ரூ. 9 கோடியை அவர் திருப்பித் தர வேண்டும் என திரையுலகைச் சேர்ந்த பலர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த மிரட்டலுக்கு பயந்து ரூ. 9 கோடியை திருப்பி கொடுக்க சிவகார்த்திகேயன் கொடுக்க முன்வந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது ஒருபுறம் இருக்க, வேந்தர் மூவிஸ் மதன் சிறையில் இருப்பதால், அப்பணத்திற்கு சிலர் சொந்தம் கொண்டாட உள்ளதாக திரையுலக புள்ளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அது எஸ்ஆர்எம் யுனிவர்சிட்டி மாணவர்களின் கல்வி பணம் என்பதால், அதை மற்றவர்கள் அபகரிக்க விட மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

விவாகரத்து ஆன திலீப்-காவ்யா மாதவன் இன்று திருமணம்

விவாகரத்து ஆன திலீப்-காவ்யா மாதவன் இன்று திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dileep marry Kavya Madhavanபிரபல மலையாள நடிகரான திலீப் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகை மஞ்சுவாரியை 1998ல் காதலித்து திருமணம் செய்துக் கொண்டர்.

16 வருடங்கள் இணைந்து வாழ்ந்த இவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இவர்களின் பிரிவுக்கு நடிகை காவ்யா மாதவன் காரணம் என கூறப்பட்டது.

இதனிடையில் நிஷால் சந்திரா என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டில் மணந்தார் நடிகை காவ்யா மாதவன்.

ஆனால் இவர் தனது கணவரை இரண்டே ஆண்டுகளில் (2011) பிரிந்தார்.

இந்நிலையில் வெவ்வேறு மண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற இவர்கள் தற்போது இணைந்து வாழ முடிவு செய்து, இன்று திருமணம் செய்து கொள்கின்றனர்.

இவர்களின் திருமணம் இன்று கொச்சியில் நடைபெறுகிறது.

விஜயகாந்துடன் ராஜ்ஜியம் தமிழ் படத்தில் நடித்தவர் திலீப்.

காசி படத்தில் விக்ரமின் தங்கையாக நடித்தவர் காவ்யா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது திலீப்புக்கு வயது 48. காவ்யாவுக்கு வயது 32 என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் ‘எஸ்3’ பட ரிலீஸ் உரிமை இத்தனை கோடியா?

சூர்யாவின் ‘எஸ்3’ பட ரிலீஸ் உரிமை இத்தனை கோடியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

s3 movieசூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படம் அடுத்த மாதம் டிசம்பர் 16ஆம் வெளியாக உள்ளது.

அண்மையில் வெளியான இப்படத்தின் டீசருக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானதால், படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் மட்டும் ரூ. 42 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

இது சூர்யா படங்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தல-தளபதி ரசிகர்களுக்கு விடிய விடிய புத்தாண்டு விருந்து

தல-தளபதி ரசிகர்களுக்கு விடிய விடிய புத்தாண்டு விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajithடாப் நடிகர்களின் சில படங்களுக்கு எப்பவும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

எனவே, ரசிகர்களுக்காக அந்தந்த நடிகர்களின் படங்களை சிறப்பு காட்சியாக சில திரையரங்குகள் திரையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த ராம் சினிமாஸ் நிறுவனம் அஜித், விஜய் படங்களை புத்தாண்டு தினத்தில் திரையிட இருக்கிறார்களாம்.

விஜய்யின் துப்பாக்கி படத்தை டிசம்பர் 31ஆம் தேதி, இரவு 9.30 மணி காட்சியிலும், அஜித்தின் வீரம் படத்தை புத்தாண்டு தினத்தில் அதிகாலை 6 மணிக்கும் திரையிட உள்ளனர்.

இந்த காட்சிகளுக்கு முன்பதிவை டிசம்பர் 1ஆம் தேதியே திறக்கின்றனர்.

ஹ்ம்… அப்போ விடிய விடிய தல-தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்..

சமைக்க கற்றுக் கொடுத்தவரை இழந்த வருத்தத்தில் அஜித்

சமைக்க கற்றுக் கொடுத்தவரை இழந்த வருத்தத்தில் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith sadநடிப்புத் துறையை தாண்டி, பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி என பல துறைகளில் சாதித்து வருபவர் அஜித்.

மேலும் இவர் சமைக்கும் பிரியாணிக்கு திரையுலகில் பலரும் ஆசைப்படுவதுண்டு.

பெரும்பாலும் தன் படக்குழுவினருக்கு தன் கையாலேயே பிரியாணி சமைத்துக் கொடுக்கும் பழக்கம் இவரிடம் உண்டு.

இந்த சுவையான பிரியாணியை சமைக்கும் கலையை இவர் கற்றது இயக்குனர் சுபாஷ் அவர்களிடம் தானாம்.

பவித்ரா படத்தில் நடித்தபோது, சுபாஷிடம் இருந்து இதை கற்றுக் கொண்டராம்.

இந்நிலையில் சுபாஷ் நேற்று மரணமடைந்தார். இதனால் அஜித் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

More Articles
Follows